பீர் ஹக்கீம் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீர் அக்கீம் சண்டை
கசாலா சண்டையின் பகுதி
Battle of Bir Hakeim.svg
நாள் 26 மே – 11 ஜூன் 1942
இடம் பீர் ஹக்கீம், லிபியா
கீழ்நில உத்தியளவில் பிரெஞ்சு வெற்றி
மேல்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை[1]
பிரிவினர்
 சுதந்திர பிரான்ஸ்  நாட்சி ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
சுதந்திர பிரான்ஸ் மரீ பியர் கொனிக் நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
பலம்
3,703 தெரியவில்லை
இழப்புகள்
140 மாண்டவர்,
229 தெரியவில்லை,
814 போர்க்கைதிகள்
53 பீரங்கிகள்
250 வண்டிகள்[2]
மொத்த இழப்புகள் தெரியவில்லை
277 போர்க்கைதிகள்
52 டாங்குகள், 11 கவச வண்டிகள், 5 தானுந்து பீரங்கிகள்
7 வானூர்திகள்[2]

பீர் அக்கீம் சண்டை (Battle of Bir Hakeim) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். கசாலா சண்டையின் போது நிகழ்ந்த இந்த மோதலில் எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சு நாட்டுப் படைகளிடமிருந்து பீர் அக்கீம் பாலைவனச்சோலைப் பகுதியை விடுதலை பிரெஞ்சுப் படைகள் பாதுகாத்தன.

மே 26, 1942ல் ஜெர்மானியத் தளபதி ரோம்மலின் படைகள் கசாலா-பீர் ஹக்கீம் அரண்கோட்டினைத் தாக்கின. இந்த அரண்கோடு வடக்கு-தெற்காக நேச நாட்டு பிரிகேட் படைப்பிரிவுகளை வரிசையாக பெட்டி வடிவில் நிறுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. பலமான இந்த அரண்கோட்டினை நேரடியாகத் தாக்காமல் ரோம்மல் தெற்குப் பகுதியில் சுற்றி வளைத்துப் பின்புறம் தாக்க முயன்றார். கசாலா அரண்கோட்டின் தெற்கு முனையில் பீர் ஹக்கீம் பாலைவனச் சோலை பகுதி இருந்தது. இதனை விடுதலை பிரெஞ்சுப் படைகள் பாதுகாத்து வந்தன. 26 அன்று இரவு அச்சுப் படைகள் பீர் ஹக்கீமுக்குத் தெற்கில் சென்று கசாலா அரண்கோட்டைத் தாண்டிய பின் மீண்டும் வடக்கு நோக்கித்திரும்பின. வெற்றிகரமாக கசாலா அரண்கோட்டை சுற்றி வளைத்த பின்னர் அதனைப் பின் பகுதியிலிருந்து தாக்கின. பிற பகுதிகளில் அவற்றுக்கு வெற்றி கிட்டினாலும் பீர் ஹக்கீமை தாக்கிய இத்தாலியப் படைப்பிரிவுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. பிரெஞ்சுப் படைகளின் திறமையான தாக்குதலால், இத்தாலியப் படைகள் நிலை குலைந்து போயின. ஜூன் 2ம் தேதி பீர் ஹக்கீம் அரண்நிலையைக் கைப்பற்ற அச்சுப்படைகள் மீண்டும் முயன்றன. அடுத்த ஆறு நாட்கள் இப்பகுதியில் கடுமையான சண்டை நடந்தது. சுற்றி வளைக்கப்பட்டிருந்தாலும் சரணடைய மறுத்த பிரெஞ்சுப் படைகள் கடுமையாக சண்டையிட்டனார். ஆனால் ஜூன் 9ம் தேதி துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்குமான குண்டுகள் தீர்ந்து போனதாலும், கசாலா அரண்கோட்டின் பிற பகுதிகள் அச்சுப்படைகளால் ஏற்கனவே கைப்பற்றப்பட்டதாலும், அவை பீர் ஹக்கீமை விட்டு பின் வாங்க முடிவு செய்தன. அடுத்த இரு நாட்கள் இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுக்கிடையே பெரும்பாலான பிரெஞ்சுப் படைவீரர்கள் பீர் ஹக்கீமை விட்டு பின்வாங்கினர். இவ்வாறு பதினாறு நாட்கள் அச்சுத் தாக்குதல்களைச் சமாளித்ததால், கசாலா சண்டையில் தோற்கடிக்கப்பட்டு பின் வாங்கிய பிரிட்டானிய 8வது ஆர்மிக்கு அடுத்த கட்ட மோதலான முதலாம் எல் அலாமீன் சண்டைக்குத் தயார் செய்ய அவகாசம் கிட்டியது.

குறிப்புகள்[தொகு]

  1. Ford (2008), p. 64
  2. 2.0 2.1 Buffetaut (1992), p. 150

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 31°35′37.93″N 23°28′47.16″E / 31.5938694°N 23.4797667°E / 31.5938694; 23.4797667

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்_ஹக்கீம்_சண்டை&oldid=2697851" இருந்து மீள்விக்கப்பட்டது