உள்ளடக்கத்துக்குச் செல்

குஃப்ரா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஃப்ரா சண்டை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி
நாள் 31 ஜனவரி - 1 மார்ச் 1941
இடம் குஃப்ரா, லிபியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
சுதந்திர பிரான்ஸ் விடுதலை பிரான்சுப் படைகள்
 ஐக்கிய இராச்சியம்
இத்தாலி இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
சுதந்திர பிரான்ஸ்ஃபிலீப் லே கிளர்க் இத்தாலி கேப்டன் கோலோன்னா
பலம்
350 பேர்
2 x இலகுரக கவச வண்டிகள்
1 x 75 மிமீ பீரங்கி; 26 லாரிகளில் பிரிட்டானிய வீரர்கள்
310 பேர்

குஃப்ரா சண்டை (Battle of Kufra) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த குஃப்ரா பாலைவனச் சோலைப் பகுதியை விடுதலை பிரான்சுப் படைகள் கைப்பற்றின.

குஃப்ரா லிபியாவின் தென்கிழக்கில் அமைந்திருந்த ஒரு பாலைவனச்சோலைப் பகுதி. இது பாலைவன வாழ் குடிகளுக்கு ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. 1931ல் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்டது. செப்டம்பர் 1940ல் இத்தாலியப் படைகள் எகிப்து மீது படையெடுத்தன. இதனை எதிர்த்து நேச நாட்டுப் படைகள் டிசம்பர் மாதம் காம்ப்பசு நடவடிக்கையைத் தொடங்கின. இத்தாலியப் படைகளை எகிப்திலிருந்து விரட்டி, லிபியாவுக்குள் முன்னேறின. பிரிட்டானியப் படைகள் கிழக்கிலிருந்து லிபியாவினுள் முன்னேறிக் கொண்டிர்க்கும் போதே தெற்கில் சாடிலிருந்து விடுதலை பிரான்சுப் படைகள் லிபியாவைத் தாக்கின. பிரான்சு ஜூன் 1940ல் நாசி ஜெர்மனியிடம் சரணடைந்திருந்தாலும், அதனை ஏற்க மறுத்த தளபதி சார்லஸ் டி கோல் நாடுகடந்த பிரெஞ்சு அரசை பிரான்சின் காலனிப் பகுதிகளில் நிறுவியிருந்தார். அதன் படைகள் விடுதலை பிரான்சுப் படைகள் என்று அழைக்கப்பட்டன. பிரான்சின் ஆப்பிரிக்கக் காலனிகள் டி கோலின் அரசுக்கு ஆதரவளித்தன. சாடிலிருந்த பிரஞ்சுப் படைகளைக் கொண்டு லிபியாவைத் தாக்கினார் டி கோல். ஜனவர் 31, 1941ல் பிரெஞ்சுப் படைகள் குஃபரா மீதான படையெடுப்பைத் தொடங்கின. வேகமாக குஃப்ராவி பகுதியுள் முன்னேறிய அவை பெப்ரவரி 17ல் அதன் முக்கிய எல் டாக் கோட்டையை முற்றுகையிட்டன. சில வார கால குண்டுவீச்சுடன் கூடிய முற்றுகைக்குப் பின்னர் மார்ச் 1ம் தேதி எல் டாக் கோட்டையின் இத்தாலிய பாதுகாவல் படைப்பிரிவு சரணடைந்தது. குஃப்ரா பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஃப்ரா_சண்டை&oldid=1358970" இலிருந்து மீள்விக்கப்பட்டது