பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியான அட்டைப்பெட்டி

பெட்டி என்பது பொருட்களை சேமிப்பதற்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றவும் பயன்படும் பொருளாகும். இந்தப் பெட்டிகள் மரத்தாலும்,அட்டையாலும், உலோகத்தினாலும், பிளாஸ்டிக்கினாலும் பேப்பர் போர்டுகளாலும் செய்யப்படுகின்றன. இவை தீப்பெட்டி போன்ற சிறிய அளவிலும், கப்பல் பெட்டி போன்ற மிகப்பெரிய அளவிலும் என விதவித அளவுகளில் செய்யப்படுகின்றன.

தபால் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, ரயில் பெட்டி என தமிழில் வெவ்வேறு பொருட்களையும் குறிக்க இந்த பெட்டி என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்.

சேமிப்புப் பெட்டிகள்[தொகு]

பல்வேறு வகையான பொருள்களை பாதுகாப்பாக சேமிக்க பெட்டிகள் உதவுகின்றன.

நகைப்பெட்டிகள்[தொகு]

ஆபரனங்களை பாதுகாப்பாக வைக்க இவ்வகை பெட்டிகள் உதவுகின்றன. தங்கம் போன்ற விலையுயர்ந்த ஆபரனங்களுக்காக பட்டுபோன்ற மென்மையான துணிகள் அதனுள் பொதிக்கப்பட்டுள்ளன.

கருவிப் பெட்டிகள்[தொகு]

பல்வேறு வகையான கருவிகளை பாதுகாப்பாக வைக்கவும், ஓரிடத்திலிருந்து எடுத்து செல்ல வசதியாகவும் இந்த பெட்டிகள் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டி&oldid=2744555" இலிருந்து மீள்விக்கப்பட்டது