பீபா சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீபா சவுத்ரி
Bibha Chowdhuri
பிறப்பு(1913-07-03)சூலை 3, 1913
கொல்கத்தா, இந்தியா
இறப்புசூன் 2, 1991(1991-06-02) (அகவை 77–78)
துறைதுகள் இயற்பியல், அண்டக் கதிர்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடு (1949)

பீபா சவுத்ரி (3 சூலை [1] 1913 - 2 சூன் 1991 [2]) என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் துகள் இயற்பியல் மற்றும் காசுமிக் கதிர்களில் குறித்த ஆய்வுகளில் பணியாற்றினார். உலகளாவிய வானியல் ஒன்றியம் எச். டி. 86081 என்ற நட்சத்திரத்திற்கு பிபா (வான பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள செக்சுடான்சு விண்மீன் தொகுப்பில் உள்ள மஞ்சள்-வெள்ளைக் குள்ள நட்சத்திரம்) என மறுபெயரிட்டுள்ளது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சவுத்ரி கொல்கத்தாவில் பிறந்தார்.[3] இவரது தந்தை, பாங்கு பிகாரி சவுத்ரி . இவர் ஒரு மருத்துவர். இவரது தாயார் ஊர்மிளா தேவி.[4] இவர் மூன்றாவது மூத்த குழந்தை. இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருந்தனர்.[5] இவரது அத்தை நிர்மலா தேவி, சர் நில்ரதன் சர்க்காரை மணந்தார்.[4] இவரது தாயாரின் குடும்பம் பிரம்ம சமாஜ் இயக்கத்தினைச் சேர்ந்தவர்கள் . இவரது சகோதரி, ரோமா சவுத்ரி, பிரம்மோ பாலிகா ஷிக்ஷாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிபா கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ராஜாபஜார் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் படித்தார். மேலும் அக்காலத்தில் முது அறிவியல் கல்வி முடித்த ஒரே பெண்மணி இவரீ ஆவார். 1936-ல் பட்டம் பெற்றார். சிறிது இடைவெளிக்குப் பின்னர் 1939-ல் போசு நிறுவனத்தில் சேர்ந்தார். இங்கு இவர், தேபேந்திர மோகன் போசுடன் பணியாற்றினார்.[3] ஒன்றாக, இவர்கள் சோதனை முறையில் மியூயான்களைக் கவனித்து அண்டக் கதிர்களில் ஆய்வுகளை வெளியிட்டனர்.[4] வெவ்வேறு உயரங்களில் உள்ள காஸ்மிக் கதிர்களுக்கு வெளிப்படும் அரை-தொனி தட்டுகளின் தொகுதிகளை இவர் ஆய்வு செய்தார். சிதைவுகள் வளைந்திருப்பதைக் கவனித்தார். துகள்களின் பல சிதறல் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் இருக்கலாம்.[4] அதிக உணர்திறன் கொண்ட குழம்பு தட்டுகள் கிடைக்காததால் இவர்களால் ஆய்வுகளை மேற்கொண்டு தொடர முடியவில்லை.[6] மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அண்டக் கதிர்களில் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்டப்படிப்புக்காக பேட்ரிக் பிளாகெட்டின் ஆய்வகத்தில் சேர்ந்தார்.[3] இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை விரிவான காற்று துகள்களை ஆய்வு செயதார்.<r[7] இவரது ஆய்வு வழிகாட்டி லாஜோஸ் ஜானோசி ஆவார்.[8] பிளாக்கெட்டின் நோபல் பரிசுக்கு இவரது பணி எவ்வளவு பங்களித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தொழில் மற்றும் ஆராய்ச்சி[தொகு]

ஊடுருவும் நிகழ்வுகளின் அடர்த்தி ஒரு விரிவான காற்று தூறலில் மொத்த துகள் அடர்த்திக்கு விகிதாச்சாரமாகும் என்பதை சவுத்ரி நிரூபித்தார்.[4] "இந்தியாவின் புதிய பெண் அறிவியலாளரைச் சந்தியுங்கள் - காஸ்மிக் கதிர்களுக்கு ஒரு கண் உள்ளது" என்ற கட்டுரையில் தி மான்செஸ்டர் ஹெரால்டுக்கு இவர் பேட்டி அளித்தார், "இன்று பெண் இயற்பியலாளர்கள் குறைவாக இருப்பது ஒரு சோகம்" என்று கூறினார்.[3]

டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த சவுத்ரி தனது முனைவர் பட்ட ஆய்விற்குப் பிறகு இந்தியா திரும்பினார்.[3] 1954-ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆராய்ச்சியாளராக இருந்தார்.[9] ஹோமி பாபா இவருடைய ஆய்வு அறிக்கையின் காரணமாக டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பணியமர்த்தினார். இவர்இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்தார். கோலார் தங்க வயல் சோதனைகளில் ஈடுபட்டார். சாஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகக் கொல்கத்தாவுக்குச் சென்றார்.[3] இவர் பிரெஞ்சு மொழியில் இயற்பியல் கற்பித்தார்.

இவரது வாழ்க்கை ஏ. ஜூவல் அனெர்த்துடு (A Jewel Unearthed: Bibha Chowdhuri)[10] பிபா சௌதுரி, ஐன் இண்டிஸ்ச் ஹோச்செனெர்ஜிபிசிகெரின் அல்ஸ் "ஸ்டார்" ஆம் ஹிம்மல் (Bibha Chowdhuri, eine indische Hochenergiephysikerin als "Star" am Himmel.) என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.[11][12] இவரை ஒரு மறக்கப்பட்ட புராணக்கதை என்று தி ஸ்டேட்ஸ்மேன் விவரித்தது.[13] இவர் 1991-ல் இறக்கும் வரை தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The University of Manchester Library Archived Information.
  2. Roy, Pragya (2019-06-18). "Bibha Chowdhuri: The Invisibilised Physicist| #IndianWomenInHistory". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Bhattacharya, Amitabha (2018). "The woman who could have won a Nobel". telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Roy, S. C.; Singh, Rajinder (2018). "Historical Note: Bibha Chowdhuri – Her Cosmic Ray Studies in Manchester". Indian Journal of History of Science 53 (3). doi:10.16943/ijhs/2018/v53i3/49466. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5235. 
  5. "Bibha Chowdhuri – A Forgotten Legend". whastic.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  6. Priya, Pekshmi (2018). "This Brilliant Woman Could Have Won a Physics Nobel for India. Yet Few Indians Know Her Story" (in en-US). The Better India. https://www.thebetterindia.com/165333/india-physicist-nobel-prize-bibha-chowdhuri-cosmic-rays-news/. 
  7. Chowdhuri, Bibha (1949). Extensive air showers associated with penetrating particles. jisc.ac.uk (PhD thesis). University of Manchester. OCLC 643572452. வார்ப்புரு:EThOS. Archived from the original on 2018-12-06. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  8. Roy, S. C.; Singh, Rajinder (2018-08-01). "Historical Note: Bibha Chowdhuri – Her Cosmic Ray Studies in Manchester". Indian Journal of History of Science 53 (3). doi:10.16943/ijhs/2018/v53i3/49466. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5235. http://insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol53_3_2018__Art10.pdf. 
  9. (in en) Proceedings of the Board of Regents. The University. 1954.  வார்ப்புரு:ISBN missing
  10. Singh, Rajinder (in English). A Jewel Unearthed: Bibha Chowdhuri: The Story of an Indian Woman Scientist. 
  11. "Rajinder Singh, Suprakash C. Roy - Bibha Chowdhuri, eine indische Hochenergiephysikerin als Star am Himmel". www.shaker.de. பார்க்கப்பட்ட நாள் 2020-09-11.
  12. Singh, Rajinder (in German). Bibha Chowdhuri, eine indische Hochenergiephysikerin als "Star" am Himmel. 
  13. Bhattacharya, Amitabha. "A forgotten legend" (in en-US). https://www.thestatesman.com/supplements/8th-day/a-forgotten-legend-1502688129.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபா_சவுத்ரி&oldid=3665560" இலிருந்து மீள்விக்கப்பட்டது