பிளைமவுத், மாசச்சூசெட்ஸ்
பிளைமவுத் (Plymouth (/ˈplɪməθ//ˈplɪməθ/; Plimouth மற்றும் Plimoth என்றும் வரலாற்று ரீதியாக அறியப்படும் ) என்பது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ், பிளைமவுத் கவுண்டியில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரமானது அமெரிக்க வரலாறு, நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் முதன்மையான இடத்தை வகிப்பதால் இந்நகரமானது "அமெரிக்காவின் சொந்த ஊர்" என்று அழைக்கப்படுகிறது. பிளைமவுத்தானது 1620 ஆம் ஆண்டு மேபிளவர் பில்கிரிம்ஸ் மூலம் நிறுவப்பட்ட காலனி ஆகும். இது அமெரிக்காவிலும் நியூ இங்கிலாந்திலும் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும்.[1] இந்த நகரம் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடமாகவும், முதன்முதலில் நன்றியறிதல் நாள் விழா நடந்த இடமாகவும் விளங்குகிறது. பிளைமவுத் 1620 இல் அது நிறுவப்பட்டதில் இருந்து, 1691 ஆம் ஆண்டில் மாஸ்டாஸ்ஸேஜ் பே காலனியுடன் இணைந்தகாலம்வரை பிளைமவுத் குடியேற்றத்தின் தலைநகராக இருந்தது.
மாசசூசெட்ஸ் பகுதியில் பிளைமவுத் மிகப்பெரிய நகராட்சி ஆகும்.[2] 2014 அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 58,271 ஆக இருந்தது. ப்ளைமவுத் கவுண்டியின் இரண்டு கவுண்டி இடங்களில் மாசசூசெட்ஸ் ஒன்றாகும், மற்றொன்று புரொக்டன் ஆகும்.[3]
பிளைமவுத்தானது தோராயமாக பாஸ்டனுக்கு தெற்கே 40 மைல் (64 கி.மீ) தொலைவில் கிழக்கு கடற்கரை என்று அழைக்கப்படும் ஒரு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டு முழுவதும், இந்த நகரமானது கயிறு தயாரித்தல், மீன்பிடித்தல் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றின் மையமாக வளர்ந்தது. உலகின் மிகப்பெரிய கயிறு தயாரிக்கும் நிறுவனமாக முன்னர் இருந்த பிளைமவுத் கார்டேஜ் கம்பெனி இங்கு இருந்தது ஆகும். இது ஒரு செயல்திறமிக்கத் துறைமுகமாகத் தொடர்கிறது. ஆனால் இன்று இதன் முக்கிய தொழில் சுற்றுலா.[4] இந்த நகரத்தில் பிளைமவுத் மாநகர விமான நிலையம் இயங்கி வருகின்றது. மேலும் அமெரிக்காவின் பழமையான, தொடர்ச்சியாக இயங்கிவரும் அருங்காட்சியகமான பில்கிரிம் ஹால் மியூசியம் இங்கு உள்ளது.
நாட்டின் முதல் குடியேற்றங்களில் ஒன்றான பிளைமவுத் அதன் வரலாற்று மதிப்பிற்காக அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டிருப்பதாக உள்ளது. பிளைமவுத்தை மையமாகக்கொண்டு நடந்த நிகழ்வுகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இனப்பண்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. குறிப்பாக பிளைமவுத் கல், பில்கிரிம் தந்தைகள், மற்றும் முதல் நன்றியறிதல் நாள் போன்றவை குறிப்பித்தக்கது. நன்றியறிதல் நாள் விடுமுறை நாட்களில் இந்த நகரம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[5]
வரலாறு[தொகு]
முன் காலனித்துவ காலம்[தொகு]
ஐரோப்பியர் வருகைக்கு முன், பிளிமவுத் பகுதியானது படுக்சிட் (Patuxet) என்றழைக்கப்பட்ட வாம்பனோயாக் பழங்குடியினரின் ஒரு கிராமமாக இருந்தது.[6] பிளைமவுத் காலனி உருவாக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதிக்கு ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் இருமுறை வந்து சென்றுள்ளனர். 1605 ஆம் ஆண்டில் சாமுவேல் டி சாம்ப்ளெயின், பிளைமவுத் துறைமுகத்தை நோக்கிக் கப்பலைச் செலுத்தி அதனை செயிண்ட் லூயிஸ் துறைமுகம் என்று அழைத்தார். வர்ஜீனியாவிலுள்ள ஜேம்ஸ்டவுனில் உள்ள காலனியின் தலைவராக இருந்த கேப்டன் ஜான் ஸ்மித், கேப் கோட் வளைகுடா பகுதியை ஆராய்ந்தார். அவர்தான் இப்பகுதிக்கு "நியூ பிளிமவுத்" என்ற பெயரிட்டார்."[7]
கடலோர நியூ இங்கிலாந்து பகுதியில் 1614 மற்றும் 1617 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை பிளேக் நோய் தாக்கியது, இதனால் இப்பகுதியின் பூர்வகுடி மக்களான வாம்பனோயாக் மக்களில் 90% முதல் 95% வரையிலான மக்கள் மொத்தமாக இறந்தனர்.[8] இதனால் இப்பகுதியானது பெரும்பாலும் பூர்வகுடி மக்கள் இல்லாத பகுதியாக ஆனதால் இப்பகுதி காலனிய மக்களின் பகுதியாக மாறியது.
காலனிய காலம்[தொகு]
அமெரிக்க காலனித்துவ வரலாற்றில் பிளைமவுத் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது மேபிளவர் கப்பலின்ன் முதல் பிரயாணத்தின் கடைசி இறங்கு தளமும் பிளைமவுத் குடியேற்றத்தின் அசல் குடியேற்றத் தலமும் ஆகும். பிளைமவுத்தானது 1620 திசம்பரில் இங்கிலாந்து திருச்சபையில் இருந்து பிரிந்து வந்த சீர்திருத்தவாத பிரிவினைவாதிகளால் நிறுவப்பட்டது. இவர்கள் கிறித்துவ சீர்திருத்தத் இயக்கமானது தனது சீர்திருத்தத்தப் பணியை நிறைவு செய்யவில்லை என்ற எண்ணத்தால் அதிலிருந்து பிரிந்தவர்களாவர். இன்று இந்த குடியேறிகளில் பெரும்பாலானோர் "பில்கிரிம்ஸ்" என்று அழைக்கப்படுகின்றனர், இச்சொல் வில்லியம் பிராட்போர்டால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் ஆகும்.[9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "What are the oldest cities in America?". Glo-con.com. 2007-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-08-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Diesenhouse, Susan (2000-09-03). "Where the Pilgrims Lived, Megaprojects Now Loom". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2000/09/03/realestate/where-the-pilgrims-lived-megaprojects-now-loom.html. பார்த்த நாள்: 2009-07-17.
- ↑ "Find a County". National Association of Counties. 2011-06-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Plymouth, Massachusetts (MA) Economy and Business Data". City-Data.com. 2007-08-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thanksgiving Vacation Destinations". 2010-12-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ James Loewen, Lies My Teacher Told Me, Simon & Schuster: New York, 1995, ISBN 0-684-81886-8, pp. 90-91
- ↑ Patricia Scott Deetz (2000). "Passengers on the Mayflower: Ages & Occupations, Origins & Connections". The Plymouth Colony Archive Project. 2007-07-11 அன்று பார்க்கப்பட்டது. More than one of
|author=
மற்றும்|last=
specified (உதவி) - ↑ Loewen, 1995, pp. 80-86
- ↑ "Pilgrims: Plymouth Its History and People". Historical Reference Center. 2008-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.