பிளாட்டர் உலர்தாவரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சேவியர் கல்லூரி, மும்பை
எதெல்பெர்டு பிளாட்டர், இயேசு சபை

பிளாட்டர் உலர்தாவரகம் (Blatter Herbarium (BLAT),[1]) என்பது இந்தியாவிலுள்ள உலர் தாவரகம் ஆகும். இது மகாரட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரின் புனித சேவியர் கல்லூரியில் உள்ளது. இத்தாவரகம் 1906 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து இயேசு சபை பாதிரியார் எதெல்பெர்டு பிளாட்டர் (Ethelbert Blatter), தனது தாவரவியல் கூட்டாளிகளுடன் தோற்றுவித்தார்.[2] இப்பாதிரியார் இந்தியத் துணைக்கண்டத் தாவர வகைப்பாட்டியல் அறிஞரும் ஆவார். 1941 ஆம் ஆண்டு, இந்திய தாவரவியல் துறைப் பணிகளுக்காக பத்மசிறீ பட்டமும் பெற்ற என்ரி சன்டபா பாதிரியார் (Father Henry Santapau), இந்த உலர் தாவரகத்திற்கு பிளாட்டர் உலர் தாவரகம் என மறுபெயரிட்டார். இந்த உலர் தாவரகத்தில் 1816 ஆம் ஆண்டு முதல் சேகரித்த, 1,50,000 இந்திய தாவரயினங்களின் ஆவணங்கள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த சேகரிப்பில், அல்கா, பூஞ்சை, பிரயோபைற்று, டெரிட்டோபைட்டா, வித்துமூடியிலி அடங்கியுள்ளன. இத்துடன்சிந்து மாகாணம், அறபுத் தீபகற்பம், ஆத்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் இருந்து தாவரயினங்கள் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Herbarium Details - The William & Lynda Steere Herbarium". The William & Lynda Steere Herbarium. 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2024.
  2. "The Blatter Herbarium". St. Xavier's College. Archived from the original on 18 February 2009. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2024.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டர்_உலர்தாவரகம்&oldid=3916155" இலிருந்து மீள்விக்கப்பட்டது