பிரின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரின்சு
Prince at Coachella 001.jpg
2008ஆம் ஆண்டு கோயெச்செல்லா விழாவில் நிகழ்த்தும்போது
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரின்சு ரோஜர்சு நெல்சன்
பிற பெயர்கள்
  • ஜாமீ இசுட்டார்
  • அலெக்சாண்டர் நெவர்மைண்டு
  • ஜோயி கோகோ
  • Prince logo.svg
  • முன்பு பிரின்சு என அறியப்பட்டக் கலைஞர்
பிறப்புசூன் 7, 1958(1958-06-07)
மினியாப்பொலிஸ், மின்னசோட்டா, ஐ.அ
இறப்புஏப்ரல் 21, 2016(2016-04-21) (அகவை 57)
சான்காசன், மின்னசோட்டா, ஐ.அ
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்-கவிஞர்
  • பலவகை இசைக்கருவிகள்
  • இசைத்தட்டு தயாரிப்பாளர்
  • நடிகர்
  • திரைப்பட இயக்குநர்
இசைக்கருவி(கள்)
  • பாட்டுக்கள்
  • கிட்டார்
  • அடித்தொனி கிட்டார்
இசைத்துறையில்1976–2016
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வார்னர் பிரதர்சு
  • பைசுலே பார்க்
  • என்பிஜி
  • ஈஎம்ஐ
  • கொலம்பியா
  • அரிஸ்டா
  • யூனிவர்சல்
இணைந்த செயற்பாடுகள்
  • தி ரெவலூசன் (இசைக்குழு)
  • வெண்டி & லிசா
  • தி நியூ பவர் ஜெனரேசன்
  • தி டைம்
  • மோரிசு டே
  • சீலா ஈ.
  • வானிட்டி 6
  • அப்பல்லோனியா 6
  • மசரட்டி
  • தி பாமிலி (இசைக்குழு)
  • 94 ஈஸ்ட்
  • மேட் அவுஸ் (இசைக்குழு)
  • அன்னா பான்டாஸ்டிக்
  • ஆண்டி அல்லோ
  • தேர்டுஐகேர்ல்

பிரின்சு ரோஜர்சு நெல்சன் (Prince Rogers Nelson, சூன் 7, 1958 – ஏப்ரல் 21, 2016), பரவலாக பிரின்சு என்றே அறியப்பட்ட இந்த அமெரிக்க பாடகர், பாடலாசிரியராகவும், பல்வகை இசைக்கருவி கலைஞராகவும், இசைத்தட்டு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமது திறமையைக் காட்டியுள்ளார். இசையில் புதுமைப் புனைவாளரான பிரின்சு மேடையில் அவரது துடிப்புமிக்க, அட்டகாசமான நடத்தைக்காகவும் மதிப்புமிகு உடைகளுக்காகவும் அபரிமித ஒப்பனைகளுக்காகவும் அறியப்பட்டவர். இவரது குரல்வளம் விரிவான வீச்சைக் கொண்டது. வன்கு இசை, ராக் இசை, ரிதம் அண்ட் புளூஸ், உள்ளுணர்வு இசை, மாயத்தோற்ற இசை, பரப்பிசை என பல்வகைப் பாணிகளையும் உள்ளடக்கியது. உலகெங்கும் இவரது இசைத்தட்டுக்கள் 100 மில்லியனுக்கும் கூடுதலாக விற்பனையாயுள்ளன; அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த கலைஞர்களில் ஒருவராக விளங்கினார்.[1] பிரின்சு ஏழு கிராமி விருதுகளையும்[2] கோல்டன் குளோப் விருது ஒன்றையும்[3]அகாதமி விருது ஒன்றையும்[4] வென்றுள்ளார். 2004இல் ராக் அண்டு ரோல் புகழ் மண்டபத்தில் இடம் பெற்றார்]].[5]

பிரின்சு மினியாப்பொலிசில் பிறந்தார். இளம் அகவையிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தார். 18ஆம் அகவையிலேயே வார்னர் பிரதர்சு நிறுவனத்தில் ஒப்பந்தப் பாடகரானார். 1978இல் ஃபார் யூ என்ற தனது இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1979இல் வெளியான இவரது இசைத்தொகுப்பு பிரின்சு விற்பனையில் பிளாட்டினம் நிலையை எட்டியது. அடுத்த மூன்று தொகுப்புகளும்—டர்ட்டி மைண்டு (1980), கண்ட்ரோவர்சி (1981), மற்றும் 1999 (1982)—தொடர்ந்து வெற்றி கண்டன. 1984இல், தனது பின்னணி இசைக்குழுவை தி ரெவலூசன் என அழைத்தார்.

1990களின் துவக்கத்தில், பிரின்சிற்கும் வார்னர் பிரதர்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. 1993இல் தமது இசைக்குழுவின் பெயரை உச்சரிக்கவியலா சின்னம் வடிவில், Prince logo.svg, பெயரிட்டார். 1994க்கும் 1996க்கும் இடையே ஐந்து தொகுப்புக்களை வெளியிட்டார். 2000களில் மீண்டும் "பிரின்சு" என்றே குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் 16 இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது இறுதி தொகுப்பாக ஹிட் அன்ரண் பேசு டூ, திசம்பர் 11, 2015இல் டைடல் ஓடைச்சேவை மூலமாக வெளியானது.[6] ஏப்ரல் 21, 2016இல் 57ஆம் அகவையில் சான்காசன், மின்னசோட்டாவின் பய்சுலே பார்க் பகுதியில் ஒலிப்பதிவு மையமாகவும் விளங்கிய இல்லத்தில் மறைந்தார்; மரணத்திற்கு முந்தைய இருவாரங்களாக அவருக்கு இன்ஃபுளுவென்சா-போன்ற நோயறிகுறிகள் இருந்தன.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Misani (April 12, 2011). "Prince Brings Early Valentine's Day Gift to NYC". New York Amsterdam News. http://amsterdamnews.com/news/2011/apr/12/prince-brings-early-valentines-day-gift-to-nyc/. பார்த்த நாள்: June 19, 2012. 
  2. "Grammy search database". National Academy of Recording Arts and Sciences. நவம்பர் 10, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 27, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Golden Globe Awards". goldenglobes.org. அக்டோபர் 14, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 27, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Nominees & Winners for the 57th Academy Awards". Academy of Motion Picture Arts and Sciences. ஜனவரி 2, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 27, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Tavis Smiley". pbs.org. April 27, 2009.
  6. "HITnRun imagery". Tidal.com. December 14, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Prince, singer and superstar, dies aged 57 at Paisley Park". BBC News. 2016-04-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்சு&oldid=3563629" இருந்து மீள்விக்கப்பட்டது