உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிகோஜினின் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிகோஜினின் பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. பிரிகோஜினி
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு பிரிகோஜினி
லவ்வொட்டி, 1990

பிரிகோஜின் பக்கி (Prigogine's nightjar)(கேப்ரிமுல்கசு பிரிகோஜினி) அல்லது இடோம்ப்வே பக்கி என்பது வெப்பமண்டல மத்திய ஆப்பிரிக்காவின் காணப்படும் பறவை சிற்றினமாகும். இது ஆகத்து 1955-ல் ஜயரில் உள்ள இடோம்ப்வே மலைகளில் எடுக்கப்பட்ட ஒரே ஒரு மாதிரியிலிருந்து அறியப்படுகிறது.[2]

விளக்கம்

[தொகு]

பிரிகோஜின் பக்கி காட்டுப்பகுதியில் வாழும் சிற்றினமாகத் தோன்றுகிறது. ஆனால் இதன் பழக்கவழக்கங்கள் அல்லது இனப்பெருக்கம் குறித்து எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இது இதன் உறவினர்களைப் போல வெற்று தரையில் கூடு கட்ட வாய்ப்புள்ளது. இது மற்ற இரவு பக்கிகளைப் போலவே இரவு நேரத்தில் பூச்சிகளை உண்ணும் பறவையாகும்.

பிரிகோஜின் பக்கியானது ஒரு சிறிய பறவையாகும். இது 19 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. குட்டை வால் மற்றும் பெரிய தலையினைக் கொண்டது. முதிர்ச்சியடைந்த பெண் பறவை கரும்பழுப்பு நிறத்தில் அதிக புள்ளிகளுடன் இருக்கும். பறக்கும் போது இது பழுப்பு நிறமாகக் காணப்படும். இதன் உறவினர்கள் பலவற்றில் காணப்படும் வெள்ளை இறக்கை அடையாளங்கள் இதில் இல்லை. வெளிறிய பழுப்பு நிற இறக்கை புள்ளிகள் மற்றும் வெண்மையான வால் இறகு முனைகள் உள்ளன.

இதனுடைய பொதுவான பெயர் மற்றும் இருசொல் பெயர் பறவையியல் வல்லுநர் அலெக்சாந்தரே பிரிகோஜினை நினைவுபடுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகோஜினின்_பக்கி&oldid=3613568" இலிருந்து மீள்விக்கப்பட்டது