உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சஸ் மரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சஸ் மரியோன்
பிரான்சஸ் மரியோன்,1918
பிறப்புமரியன் பென்சன் ஒவேன்ஸ்
(1888-11-18)நவம்பர் 18, 1888
சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா.
இறப்புமே 12, 1973(1973-05-12) (அகவை 84)
லாஸ் ஏஞ்செல்ஸ்
பணிதிரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1912–1972
வாழ்க்கைத்
துணை
[பிரெட் சி. தோம்சன் (1919–1928)
ஜார்ஜ் டபிள்யு.ஹில் (1930–1933)

பிரான்சஸ் மரியோன் (ஆங்கிலம்: Frances Marion, பி: நவம்பர் 18, 1888[1] - இ: மே 12,1973) புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்[2]. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்த இவர் முதலாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கான பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார்[3]. அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் தி பிக் ஹவுஸ் மற்றும் தி சாம்ப் ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Beauchamp. 1997
  2. http://oscar.go.com/oscar-history/year/1934
  3. Biography.com. "Frances Marion Biography". Archived from the original on ஆகஸ்ட் 7, 2011. பார்க்கப்பட்ட நாள் May 7, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சஸ்_மரியன்&oldid=3563567" இலிருந்து மீள்விக்கப்பட்டது