பிரதிபா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதிபா சிங்
பதவியில்
2013–2014
முன்னையவர்வீரபத்ர சிங்
பின்னவர்ராம் சுவரூப் வர்மா
பதவியில்
2004–2009
முன்னையவர்மகேஷ்வர் சிங்
பின்னவர்வீரபத்ர சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூன் 1956 (1956-06-16) (அகவை 67)
சிம்லா, பஞ்சாப், இந்தியா[1]
(தற்போதைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வீரபத்ர சிங்

பிரதிபா சிங் (Pratibha Singh)(பிறப்பு 16 ஜூன் 1956) இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் 2012 முதல் இமாச்சல பிரதேச முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மனைவியாவார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினர் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரதிபா சிங் 1956 ஜூன் 16 அன்று இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பிறந்தார். இவர் 1985 இல் வீரபத்ர சிங்கை மணந்தார். இவர் வீரபத்ர சிங்கின் இரண்டாவது மனைவி ஆவார். முதல் மனைவிக்குப் பிறந்த வீரபத்ர சிங்கின் மகள் அபிலாஷா குமாரி குசராத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.

தேசிய அரசியல்[தொகு]

மகேஸ்வர் சிங்கை தோற்கடித்து 2004 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதிபா சிங் ஒரு இடத்தைப் பெற்றார்.[2] 2013 தேர்தல் மூலம் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Biographical Sketch - Member of Parliament - 14th Lok Sabha". Parliament of India. Archived from the original on 2007-10-30. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.
  2. "Parliamentary Constituency Wise Result of H.P. of Lok Sabha Elections-2009" (PDF). Chief Electoral Officer, Himachal Pradesh website. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_சிங்&oldid=3939083" இலிருந்து மீள்விக்கப்பட்டது