பிரகாஷ் கவுர்
பிரகாஷ் கவுர் ( Parkash Kaur) (பிறப்பு: 1919 செப்டம்பர் 19 - இறப்பு: 1982 நவம்பர் 2) இவர் ஓர் பஞ்சாபி பாடகராவார். இவர் முக்கியமாக பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார். தனது சகோதரி சுரிந்தர் கவுருடன் சேர்ந்து, இந்த வகையை முன்னோடியாகவும் பிரபலப்படுத்தியதற்காகவும் இவர் பாராட்டப்பட்டார். பிரகாஷ் கவுர் பஷ்தூ நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கவுர் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த லாகூரில் ஒரு பஞ்சாபி - சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவர், பிரபல பஞ்சாபி பாடகரும், பாடலாசிரியருமான சுரிந்தர் கவுரின் மூத்த சகோதரி ஆவார்.
தொழில்
[தொகு]1941 ஆம் ஆண்டில் 'பெஷாவர் வானொலியில்' ஒரு நேரடி நிகழ்ச்சியில் கவுர் அறிமுகமானார். பின்னர் 1934 ஆகஸ்ட் 31அன்று இவரும் இவரது தங்கை சுரிந்தர் கவுரும் எச்.எம்.வி விளம்பரத்திற்காக தாங்கள் இணைந்து பாடிய முதல் பாடலான " மாவன் 'தே தீன் ரால் பைத்தியன் " என்பதை வெளிய்ட்டனர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் இவ் இவர்களை பிரபலப்படுத்தியது. [2]