சுரிந்தர் கவுர்
சுரிந்தர் கவுர் | |
---|---|
இயற்பெயர் | சுரிந்தர் கவுர் |
பிற பெயர்கள் | பஞ்சாபின் நைட்டிங்கேல் |
பிறப்பு | லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 25 நவம்பர் 1929
இறப்பு | 14 சூன் 2006 நியூ செர்சி, ஐக்கிய இராச்சியம் | (அகவை 76)
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 1943–2006 |
இணைந்த செயற்பாடுகள் | பிரகாஷ் கவுர் (சகோதரி), தோலி குலேரியா (மகள்) |
சுரிந்தர் கவுர் (பிறப்பு: 1929 நவம்பர் 25 - இறப்பு: 2006 சூன் 14) இவர் ஓர் இந்திய பாடகரும் மற்றும் பாடலாசிரியரரும் ஆவார். இவர் முக்கியமாக பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களைப் பாடினார். பஞ்சாபில், இவர் நாட்டுப்புற பாடல்களின் முன்னோடியாகவும் அவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் புகழ் பெற்றார். கவுர் 1948 மற்றும் 1952க்கு இடையில் இந்தி படங்களுக்கான பின்னணி பாடகியாக இருந்தார். பஞ்சாபி இசைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக, பஞ்சாபின் நைட்டிங்கேல் என புகழப்பட்டார். 1984இல் சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் 2006 இல் பத்மசிறீ ஆகியவற்றைப் பெற்றார். [1][2][3]
ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், புல்லே ஷாவின் பஞ்சாபி சூபி கவிதைகள் மற்றும் சமகால கவிஞர்களான நந்த் லால் நூர்பூரி, அம்ரிதா பிரீதம், மோகன் சிங் மற்றும் சிவ்குமார் பட்டால்வி ஆகியோரின் "மாவன் 'தே தீன்", "ஜூட்டி கசூரி", "மதானியன்", "எஹ்னா அகியான்' சி பவன் கிவேன் கஜ்ரா" மற்றும் "கமன் டி ராத்" போன்ற வரிகளும் அடங்கும். காலப்போக்கில் இவரது திருமண பாடல்கள், குறிப்பாக "லத்தே டி சதர்", "சுஹே வெ சீரே வலேயா" மற்றும் "காலா டோரியா" ஆகியவை பஞ்சாபி கலாச்சாரத்தின் அழியாத பகுதியாக மாறிவிட்டன. [4]
தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோகிந்தர் சிங் சோடி என்பவரை கவுர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவர் பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ஆவார். கவுர் 2006 இல் நியூ செர்சியில் ஒரு நீண்டகால நோயால் இறந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாபின் தலைநகரான லாகூரில் ஒரு பஞ்சாபி சீக்கிய குடும்பத்தில் சுரிந்தர் கவுர் பிறந்தார். இவர் பர்காஷ் கவுரின் சகோதரி மற்றும் தோலி குலேரியாவின் தாயார் ஆவார். இருவரும் பஞ்சாபி பாடகர்கள் ஆவர். இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அதில் தோலி மூத்தவராவார். [5]
தொழில்
[தொகு]1943 ஆகஸ்டில் லாகூர் வானொலியில் ஒரு நேரடி நிகழ்ச்சியின் மூலமாக, சுரிந்தர் கவுர் தனது தொழில்முறையில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு 1943ஆகஸ்ட் 31 அன்று, இவரும் இவரது மூத்த சகோதரியுமான பிரகாஷ் கவுரும் தங்களது முதல் சேர்ந்திசை பாடலான " மாவன் தே தீன் ரால் பைத்தியன் " என்பதை பாடினர். இது, எச்.எம்.வி நிறுவனம் மூலமாக இந்திய துணைக் கண்டம் முழுவதும் இவர்களை பிரபல நட்சத்திரமாக உருவாக்கியது.
1947 இல் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, கவுரும் இவரது பெற்றோரும் தில்லியின் காசியாபாத்துக்கு இடம் பெயர்ந்தனர். 1948 ஆம் ஆண்டில், தில்லி பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி இலக்கிய விரிவுரையாளர் பேராசிரியர் ஜோகிந்தர் சிங் சோடியை மணந்தார். இவரது திறமையை உணர்ந்து, கவுரின் கணவர் இவருக்கு ஆதரவாக இருந்தார். பின்னர், இவர் மும்பை இந்தி திரைப்படத் துறையில் பின்னணி பாடகியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரை, இசை இயக்குனர் குலாம் ஹைதர் அறிமுகப்படுத்தினார். அவருக்கு கீழ் இவர் 1948 ஆம் ஆண்டு ஷாஹீத் திரைப்படத்தில் பட்னம் நா ஹோ ஜெயே மொஹாபத் கா ஃபசானா, அனா ஹை தோ அஜாவோ மற்றும் தக்தீர் கி ஆந்தி… ஹம் கஹான் ஔர் தும் கஹான் உள்ளிட்ட மூன்று பாடல்களைப் பாடினார். இருப்பினும் இவரது உண்மையான ஆர்வம் மேடை நிகழ்ச்சிகளிலும், பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களையும் புதுப்பித்தது. இறுதியில் இவர் 1952 இல் டெல்லிக்கு திரும்பினார். [4]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]1984 ஆம் ஆண்டில் பஞ்சாபி நாட்டுப்புற இசைக்கான இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமி, சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கியது.[6] 2006இல் கலைகளில் இவரது பங்களிப்பிற்காக மில்லினியம் பஞ்சாபி பாடகர் விருது,[7] மற்றும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [8] குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் இவருக்கு 2002 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Surinder Kaur
- ↑ "Surinder Kaur's profile". LastFM., Retrieved 18 Aug 2016
- ↑ "Tributes paid to melody queen". The Tribune newspaper. 26 June 2006., Retrieved 18 Aug 2016
- ↑ 4.0 4.1 "Surinder Kaur leaves Delhi to settle in Punjab". The Tribune newspaper. 24 April 2004., Retrieved 18 Aug 2016
- ↑ "The Sunday Tribune– Books". The Tribune newspaper. 12 June 2011. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016.
- ↑ http://www.sangeetnatak.gov.in/sna/SNA-Awards.php பரணிடப்பட்டது 2019-12-13 at the வந்தவழி இயந்திரம், Sangeet Natak Academy website, Retrieved 18 Aug 2016
- ↑ "Surinder Kaur gets Padma Shri". The Tribunenewspaper. 28 January 2006., Retrieved 18 Aug 2016
- ↑ "Padma Shri Official listings". இந்திய அரசு Portal., Retrieved 18 Aug 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- Surinder Kaur Profile at LastFM, Retrieved 18 Aug 2016
- Download Songs @ FolkPunjab.com, Retrieved 18 Aug 2016