உள்ளடக்கத்துக்குச் செல்

பியங்கா அந்திரியெசுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியங்கா அந்திரியெசுக்கு
பியங்கா அந்திர்யெசுக்கு 2017 விம்பிள்டன் போட்டியில்
நாடு கனடா
வாழ்விடம்தார்ண்கில், ஒண்டாரியோ[1]
உயரம்170 செ.மீ
தொழில் ஆரம்பம்2017
விளையாட்டுகள்வலக்கை (இருகப் பிடிப்புப் புறங்கை)
பயிற்சியாளர்சில்வியன் புருனோ
பரிசுப் பணம்$6,267,873
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்127–47 (72.99%)
பட்டங்கள்3
அதிகூடிய தரவரிசைவ. எண். 5 (செப்டம்பர் 9, 2019)
தற்போதைய தரவரிசைNo. 5 (September 9, 2019)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2019)
பிரெஞ்சு ஓப்பன்2R (2019)
விம்பிள்டன்1R (2017)
அமெரிக்க ஓப்பன்W (2019)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்29–15 (65.91%)
பட்டங்கள்2 ITF
அதியுயர் தரவரிசைNo. 148 (செப்டம்பர் 25, 2017)
தற்போதைய தரவரிசைNo. 1035 (ஆகத்து 12, 2019)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பை10–3
இற்றைப்படுத்தப்பட்டது: ஆகத்து 12, 2019.

பியங்கா வனேசா அந்திரியெசுக்கு (Bianca Vanessa Andreescu, பிறப்பு: சூன் 16, 2000) ஒரு கனடிய தென்னிசு விளையாட்டு வீரர். 2019 ஆண்டுக்கான அமெரிக்க (யு.எசு) திறந்த தென்னிசுப் போட்டியின் வெற்றிவாகையர்.

இளமைக் காலம்

[தொகு]

அந்திரியெசுக்கு கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள மிசிசாகாவில் உரோமானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.[2] இவருடைய தந்தை நிக்கு அந்திர்யெசுக்கு ஒரு பொறியியலாளர். உரோமேனியாவின் பிராசோவில் உள்ள திரான்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின்னர் கனடாவுக்கு வந்தார்[3] இவருடைய தாயார் கிரையோவா பல்கலைக்கழகத்தில் (University of Craiova) பட்டம் பெற்றார், பின்னர் தொராண்டோவில் குளோபல் மேக்சுஃபின் முதலீடுகளில் (Global Maxfin Investments Inc) தலைமை கட்டிணக்க (compliance) அலுவலராக ஆனார்.[4][5]

பியங்கா அந்திர்யெசின் பெற்றோர்கள் உரோமேனியாவுக்குத் திரும்பிய பின்னர் தன் 7 ஆம் அகவையில் இருந்து தென்னிசு விளையாடுகின்றார். அப்பொழுது கபிரியேல் ஃகிரிசிட்டாசே (Gabriel Hristache) வழிகாட்டுதலில் பிட்டேசிட்டியில் (Pitești) விளையாடத் தொடங்கினார்[2][6] சில ஆண்டுகள் கழித்து கனடாவுக்குத் திரும்பினார். கனடாவில் மிசிசாகாவில் உள்ள ஒண்டாரியோ இராக்கெட்டுக் கிளப்பில் (Racquet Club) பயிற்சி பெற்றார்[2] தன் 11 ஆம் அகவையில் தொராண்டோவில் உள்ள கனடாவின் தேசிய தென்னிசு பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெறத்தொடங்கினார். இவருடைய இளமையில் இவரின் உள்ளுக்க வீராங்கனையாக இருந்தவர் கிம் கிளிசிட்டெர்சு (Kim Clijsters)[7] Subsequently she has had other favourite players, including Simona Halep.[2] She also admired the Williams sisters.[8]

2019 அமெரிக்க திறந்த தென்னிசுப் போட்டியில் வெற்றி

[தொகு]

செப்டம்பர் 7, 2019 அன்று நடந்த அமெரிக்க (யு.எசு) தென்னிசு திறந்த போட்டியில் செரீனா வில்லியம்சைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். 6.3, 7.5 கணக்கில் முதல் இரண்டு செட்டிலேயே வெற்றி பெற்றார்.

பெரும்போட்டிகள்

[தொகு]

ஒற்றையர் ஆட்டம் (ஒரு வெற்றி)

[தொகு]
முடிவு ஆண்டு போட்டி ஆடுதளம் எதிராளி புள்ளிகள்
வெற்றி 2019 யூ.எசு. ஓப்பன் கெட்டித்தளம் ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்சு 6–3, 7–5

கட்டாயமான முதன்மையாட்டமும் முதன்மையாட்ட ஐந்து இறுதியாட்டங்களும்

[தொகு]

ஒற்றையர் ஆட்டம் (2 வெற்றிகள்)

[தொகு]
முடிவுகள் ஆண்டு போட்டி ஆடுதளம் எதிராளர் புள்ளிகள்
வெற்றி 2019 Indian Wells Open கெட்டித்தளம் செருமனி ஏஞ்சலிக் கெர்பர் 6–4, 3–6, 6–4
வெற்றி 2019 Canadian Open கெட்டித்தளம் ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 3–1 ret.

பெரும்போட்டி ஒற்றையர் ஆட்டங்களில் நிலையும் காலமும்

[தொகு]
குறிப்பு
வெ  தோ  அ.இ கா.இ #R RR Q# DNQ A NH
(வெ) வெற்றியாளர்; (இ) இறுதிப்போட்டியாளர்; (அ.இ) அரையிறுதிப் போட்டியாளர்; (கா.இ) காலிறுதிப் போட்டியாளர்; (#R) சுற்றுகள் 4, 3, 2, 1; (RR) சுற்று-ராபின் நிலை; (Q#) தகுதிச் சுற்று; (DNQ) தகுதி பெறவில்லை; (A) போட்டியில் இருந்து விலகல்; (NH) not held; (SR) strike rate (events won / competed); (W–L) win–loss record.
To avoid confusion and double counting, these charts are updated at the conclusion of a tournament or when the player's participation has ended.
Tournament 2017 2018 2019 SR W–L Win %
ஆத்திரேலிய திறந்த போட்டி A Q1 2R 0 / 1 1–1 50%
பிரான்சிய திறந்த போட்டி Q1 Q3 2R 0 / 1 1–1 50%
விம்பிள்டன் 1R Q3 A 0 / 1 0–1 0%
யூ.எசு. ஓப்பன் Q1 Q1 W 1 / 1 7–0 100%
Win–Loss 0–1 0–0 9–1 1 / 4 9–2 82%

வெற்றிவாகைகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

பொது

[தொகு]
  • Tennis Canada (2016). "2016 Tennis Canada Media Guide" (PDF). Archived from the original (PDF) on March 17, 2016. பார்க்கப்பட்ட நாள் June 22, 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Bianca Andreescu". WTA Tour. பார்க்கப்பட்ட நாள் September 6, 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "Bianca Andreescu: confident, driven and ready to take flight". Tennis Canada. May 6, 2015. Archived from the original on செப்டம்பர் 9, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. EXCLUSIV | Poveste de vis la Wimbledon cu o puştoaică din România care reprezintă Canada! Antrenată de celebra Nathalie Tauziat, verişoara lui Deschamps, Bianca Andreescu e una dintre cele trei jucătoare de 17 ani din Top 200 WTA. "Se investesc 250.000 de dolari pe an"
  4. "GLOBAL MAXFIN". www.globalmaxfin.ca.
  5. Tudorache, Viorel (4 January 2019). "Cine este Bianca Andreescu. Jucătoarea canadiană de origine română a început să joace tenis la Pitești". Libertatea (in ரோமேனியன்).
  6. Povestea Biancai Andreescu: Motivul pentru care a plecat din Romania si reprezinta Canada
  7. The rise of Canadian tennis sensation Bianca Andreescu | The National Interview (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-08-14
  8. "Q&A: Bianca Andreescu, Toronto's newest tennis phenom". Toronto Life (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-14.
  9. "Heart Award winners announced". FedCup.com. Archived from the original on மார்ச் 30, 2019. பார்க்கப்பட்ட நாள் April 24, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Bianca Andreescu is 2017 Tennis Canada Female Player of the Year". Tennis Canada. Archived from the original on டிசம்பர் 7, 2017. பார்க்கப்பட்ட நாள் December 6, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]