ஏஞ்சலிக் கெர்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏஞ்சலிக் கெர்பர்
Kerber MA14 (4) (14239442069).jpg
2014 மாத்ரிடு போட்டியில் கெர்பர், மத்ரித், எசுப்பானியா
முழுப் பெயர்ஏஞ்செலிக் கெர்பர்
நாடு செருமனி
வாழ்விடம்புட்சிக்காவோ, போலந்து
உயரம்1.73 m (5 ft 8 in)
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்இடது-கை (இரு-கையால் பிற்பக்கம்)
பரிசுப் பணம்$12,146,087
இணையதளம்www.angelique-kerber.de
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்469–251 (65.14%)
பட்டங்கள்8 WTA, 11 ITF
அதிகூடிய தரவரிசைNo. 2 (1 பெப்ரவரி 2016)
தற்போதைய தரவரிசைNo. 2 (1 பெப்ரவரி 2016)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2016)
பிரெஞ்சு ஓப்பன்கா.இ (2012)
விம்பிள்டன்அ.இ (2012)
அமெரிக்க ஓப்பன்அ.இ (2011) வெ (2016)
ஏனைய தொடர்கள்
Tour FinalsRR (2012, 2013, 2015)
ஒலிம்பிக் போட்டிகள்கா.இ (2012)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்54–57
பட்டங்கள்0 WTA, 3 ITF
அதியுயர் தரவரிசைNo. 103 (26 ஆகத்து 2013)
தற்போதைய தரவரிசைNo. 208 (18 சனவரி 2016)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்முதல்சுற்று (2008, 2011, 2012)
பிரெஞ்சு ஓப்பன்2ம்சுற்று (2012)
விம்பிள்டன்3ம்சுற்று (2011)
அமெரிக்க ஓப்பன்3ம்சுற்று (2012)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பைஇறுதி (2014), சாதனை 9–8
இற்றைப்படுத்தப்பட்டது: 30 சனவரி 2016.

ஏஞ்செலிக் கெர்பர் (Angelique Kerber, பிறப்பு:சனவரி 18, 1988) செருமானிய டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2003ஆம் ஆண்டு தொழில்முறையாக விளையாடத் தொடங்கிய கெர்பர் 2011ஆம் ஆண்டில் அமெரிக்க ஓப்பனில் முதன்முறையாக அரையிறுதிக்கு எட்டினார். அப்போது அவர் உலகளவிலான தரவரிசையில் 92ஆம் இடத்தில் இருந்தார். கெர்பர் அவரது வன்தாக்க எதிரடி விளையாட்டிற்காகவும் இடதுகை ஆட்டத்திற்காகவும் வகையான அடிகளுக்காகவும் அறியப்படுகிறார். தனது வாணாள் மிக உயரிய தரவரிசை எண்ணாக ஐந்தை அக்டோபர் 22, 2012இல் எய்தினார். 2012இல் இரட்டையர் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 103ஆம் இடத்தில் உள்ளார். தற்போது தரவரிசை எண் 6இல் உள்ளார்; மிக உயரிய தரவெண் பெற்றுள்ள செருமானியராக விளங்குகிறார். தனது முதல் பெருவெற்றித்தொடர் பட்டத்தை 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டியிலும் யூ. எசு. ஓப்பன் போட்டியிலும் வென்றுள்ளார்.

மகளிர் டென்னிசு சங்க சுற்றுக்களில், எட்டு போட்டிகளில் வாகை சூடியுள்ள கெர்பர், ஒவ்வொரு தரைவகையிலும் ஒரு பட்டத்தை வென்றுள்ளார்; தவிர முதன்மை போட்டிகளில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு சுற்றுக்களில் இதுவரை 11 ஒற்றையர், 3 இரட்டையர் போட்டிகளில் பட்டதை வென்றுள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

ஏஞ்செலிக் கெர்பர் மேற்கு செருமனியிலுள்ள பிரெமன் என்றவிடத்தில் போலந்து தந்தை இசுலாவோமிர் கெர்பருக்கும் செருமானியப் போலியத் தாய் பியட்டாவிற்கும் சனவரி 18, 1988இல் மகவாகப் பிறந்தார். இவருக்கு ஜெஸ்ஸிக்கா என்ற சகோதரி உள்ளார். தனது மூன்றாம் அகவையிலேயே டென்னிசு பயிற்சியைத் துவக்கிய கெர்பர் இளையோர் சுற்றுக்களில் விளையாடத் தொடங்கினார். செருமனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் வெற்றிபெறத் தொடங்கினார்; இருப்பினும் 2003 வரை எந்தவொரு இளையவர் பட்டத்தையும் வெல்லவில்லை. தனது 15ஆம் அகவையில் தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். கெர்பர் இடாய்ச்சு, போலீஷ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பேச வல்லவர்.[1][2]

பணிவாழ்வு புள்ளிகள்[தொகு]

பெருவெற்றித்தொடர் போட்டி இறுதிகள்[தொகு]

ஒற்றையர்: 1 (1–0)[தொகு]

முடிவு ஆண்டு போட்டி தரை எதிராளி புள்ளிகள்
வாகையாளர் 2016 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று வன்தரை ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 6–4, 3–6, 6–4
வாகையாளர் 2016 யூ. எசு. ஓப்பன் வன்தரை செக் குடியரசு புலிச்கோவா 6–3, 4–6, 6–4

பெருவெற்றித்தொடர் காலக்கோடு[தொகு]

ஏஞ்கசலிக் கெர்பர்

ஒற்றையர்[தொகு]

போட்டி 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 SR வெ–தோ
பெருவெற்றித்தொடர் போட்டிகள்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று இல்லை தகுதிச்சுற்று 2ம் சுற்று முதல்சுற்று 3ம்சுற்று முதல்சுற்று 3ம்சுற்று 4ம்சுற்று 4ம்சுற்று முதல்சுற்று வெற்றி 1 / 9 18–8
பிரெஞ்சு ஓப்பன் இல்லை முதல்சுற்று முதல்சுற்று தகுதிச்சுற்று 2ம்சுற்று முதல்சுற்று காலிறுதி 4ம்சுற்று 4ம்சுற்று 3ம்சுற்று 0 / 8 13–8
விம்பிள்டன் இல்லை முதல்சுற்று முதல்சுற்று தகுதிச்சுற்று 3ம்சுற்று முதல்சுற்று அரையிறுதி 2ம்சுற்று காலிறுதி 3ம்சுற்று 0 / 8 14–8
யூ.எசு. ஓப்பன் இல்லை முதல்சுற்று தகுதிச்சுற்று 2ம்சுற்று முதல்சுற்று அரையிறுதி 4ம்சுற்று 4ம்சுற்று 3ம்சுற்று 3ம்சுற்று வெற்றி 0 / 8 16–8
வெற்றி–தோல்வி 0–0 0–3 1–3 1–2 5–4 5–4 14–4 10–4 12–4 6–4 20-2 2 / 36 74–34

இரட்டையர்[தொகு]

போட்டி 2007 2008 2010 2011 2012 2013 2014 SR வெ–தோ
பெருவெற்றித் தொடர் போட்டி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று இல்லை முதல்சுற்று இல்லை முதல்சுற்று முதல்சுற்று இல்லை இல்லை 0 / 3 0–3
பிரெஞ்சு ஓப்பன் இல்லை இல்லை முதல்சுற்று முதல்சுற்று 2ம்சுற்று முதல்சுற்று இல்லை 0 / 4 1–4
விம்பிள்டன் இல்லை இல்லை முதல்சுற்று 3ம்சுற்று முதல்சுற்று இல்லை இல்லை 0 / 3 2–3
யூ.எசு. ஓப்பன் முதல்சுற்று இல்லை முதல்சுற்று இல்லை 3ம்சுற்று இல்லை இல்லை 0 / 3 2–3
வெற்றி–தோல்வி 0–1 0–1 0–3 2–3 3–4 0–1 0-0 0 / 13 5–13

மேற்சான்றுகள்[தொகு]

  1. "WTA". 26 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "About". 3 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 November 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலிக்_கெர்பர்&oldid=3236727" இருந்து மீள்விக்கப்பட்டது