பாலைவனக் கங்காரு எலி
பாலைவனக் கங்காரு எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கெட்டிரோமையிடே
|
பேரினம்: | திபோடோமைசு
|
இனம்: | தி. டெசர்ட்டீ
|
இருசொற் பெயரீடு | |
திபோடோமைசு டெசர்ட்டீ இசுடீபன்சு, 1887 |
பாலைவனக் கங்காரு எலி (Desert kangaroo rat-திபோடோமைசு டெசர்ட்டீ) என்பது தென்மேற்கு வட அமெரிக்கா பாலைவனப் பகுதிகளில் காணப்படும் கெட்டிரோமைடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினம் ஆகும். இது கங்காரு எலிகளில் பெரியவனாகும். இதன் மொத்த நீளம் 12 அங்குலங்கள் (300 மிமீ) ஆகும். உடல் எடை 91 கிராமுக்கும் அதிகமாக இருக்கும்.[2]
வரம்பு
[தொகு]பாலைவன கங்காரு எலி தென்மேற்கு வட அமெரிக்கா வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. இதில் டெத் வேலி, கிரேட் பேசின், மோஜவே பாலைவனம் மற்றும் சோனோரன் பாலைவனத்தின் பகுதிகள் அடங்கும்.[3] கங்காரு எலிகள் பல்வேறு வகையான மண்ணில் தொடர்ந்து வாழ்ந்து வந்தாலும், பாலைவன கங்காரு எலிகள் தளர்வான மணல், பெரும்பாலும் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் மட்டுமே வாழ்கின்றன.[4] இந்தப் பட்டியலில் உள்ள இடங்கள் அமெரிக்காவில் பாலைவனங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளன. இதில் மரணப் பள்ளத்தாக்கு உட்பட, இக்கண்டத்தின் வெப்பமான இடத்தில் இவை வாழ்கின்றன.[5]
வாழிடம்
[தொகு]பாலைவனக் கங்காரு எலிகள் மணல் மண் கொண்ட பாலைவனப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இப்பகுதியில் தாவரங்கள் பொதுவாக குறைவாகவே உள்ளன. இத்தாவரங்கள் கிரியோசோட் புதர், பல்வேறு புற்கள் மற்றும் கற்றாழை வகையினவாக உள்ளன.[6] பாலைவனக் கங்காரு எலிகள் 6 முதல் 9 மீட்டர் வரை சிறிய மண் மேடுகளின் கீழ் துளையிட்டு வாழ்கின்றன. இவை இக்குகையில் பகல் நேரங்களில் தூங்குகின்றன. பகல் நேரத்தில் தீவிர வெப்பநிலையிலிருந்து தம்மைக் காக்கக் குகையின் வாயிலை மூடிவிடுகின்றன.[3] ஆறு முதல் பன்னிரண்டு வரையிலான குழுக்கள் பரந்த இடைவெளியில் உள்ள பள்ளங்களின் வாழலாம். பெரும்பாலும் இவை தனிமையாக வாழக்கூடியன.
சூழலியல்
[தொகு]தீவனச் சூழலியல்
[தொகு]பாலைவனக் கங்காரு எலிகளின் உணவில் விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தச் சிற்றினங்கள் உட்கொள்ளும் விதைகளின் அளவு மற்ற கங்காரு எலிகள் உட்கொள்ளும் விதைகளை விடப் பெரியதாக இருக்கும்.[6] மாறுபட்ட அளவுகளுடன் விதைகள் உணவாகப் பெறப்படும் போது பாலைவனக் கங்காரு எலிகள் பெரிய அளவிலான விதைகளையே உண்ணுகின்றன.[7] விதைத் தேர்வும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இந்தச் சிற்றினங்கள் அதிக மாவுச்சத்து கொண்ட கொண்ட விதைகளைத் தேர்ந்தெடுக்கின்றன.[8] சில கங்காரு எலிகள் பச்சை தாவரங்களை உட்கொண்டாலும், பாலைவனக் கங்காரு எலிகளுக்கு இவை பிடிக்காது.
நீர் சூழலியல்
[தொகு]பெரும்பாலான கங்காரு எலிச் சிற்றினங்கள் வறண்ட சூழலில் வாழ்கின்றன. மேலும் இவை சுற்றுச்சூழலிலிருந்து நீரைத் தேடுவதை விட வளர்சிதை மாற்ற நீரைப் பயன்படுத்தும் திறனுக்காக அறியப்படுகின்றன. பாலைவன கங்காரு எலிகள் கிடைக்கக்கூடிய தண்ணீரை உட்கொண்டாலும், இவற்றின் நீர் தேவைகளில் பெரும்பாலானவை வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.[6] மிகக் குறைந்த அளவு தண்ணீரில் வாழக்கூடிய தகவமைப்பு பெயர் பெற்ற இந்த எலிகள், 2 முதல் 3 வாரம் வரை தண்ணீர் இல்லாமல் வாழக்கூடியது.[9][10]
உடலியல்
[தொகு]சிறுநீரகங்கள்
[தொகு]கங்காரு எலிகள் நம்பமுடியாத அளவிற்கு பெறப்பட்ட சிறுநீரகங்களைக் கொண்டிருப்பதன் மூலம் குறைந்த நீரில் தாங்கும் திறனை அடைகின்றன. தண்ணீரை இழக்காமல் கழிவுகளை அகற்ற, பல சிற்றினங்கள் தங்கள் சிறுநீரைச் செறிவூட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. இது சிறுநீரகங்களில் நிகழ்கிறது.[11] சிறுநீரினைச் செறிவாக்கும் திறன் உடல் நிறைக்கு நேர்மாறான தொடர்பினைக் கொண்டுள்ளது.[12] எனவே இயற்கையாகவே சிறிய கொறித்துண்ணிகள் பெரிய விலங்குகளை விட அதிக நீர் பற்றாக்குறை சூழலில் தொடர்ந்து இருக்க முடியும். பாலைவன கங்காரு எலி மற்ற கொறித்துண்ணிகளைப் போலவே சிறுநீரக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது மிக நீண்ட பாப்பில்லா கொண்டுள்ளது. பாப்பில்லா நீளம், நெப்ரான்களின் எண்ணிக்கையுடன் சேர்ந்து, சிறுநீர் செறிவில் முக்கிய பங்கு வகிக்கிறது.[11]
தலை உடற்கூறியல்
[தொகு]பாலைவனக் கங்காரு எலிகள் அனைத்தும் கங்காரு எலிகளையும் விட மிக நீளமான நாசிக் குழியைக் கொண்டுள்ளன. இது நீர் இழப்பினைத் தவிர்த்து நீர்ச் சேகரிப்பினை அனுமதிக்கிறது. சூடான, வறண்ட காற்று உடலிலிருந்து வெளியேறும் போது நீர் இழப்பு நடைபெறலாம். இதனை இவ்வமைப்பு தடுக்கின்றது. நீண்ட நாசித் துவாரங்கள் நுரையீரலை விட்டு வெளியேறும் காற்றைக் குளிர்விக்கச் செய்வதன் மூலம் நீர் இழப்பைக் குறைக்கின்றன. குளிர்ச்சியான காற்று உடலுக்குள் மீண்டும் உறிஞ்சுவதற்காக ஈரப்பதத்தை வெளியிடுகிறது.[13]
குழு தொடர்பு
[தொகு]கால் பறை சாற்றுதல்
[தொகு]கங்காரு எலிகள் தங்கள் கால்களை அடிக்கின்றன. பல வகையான கங்காரு எலிகளின் கால் அசைவு முறை குறித்து முன்னர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவை சுயாதீனமாக உருவாகியுள்ளன என்று கருதப்படுகிறது. சில எலிகள் இருப்பிடத்தைத் தொடர்புகொள்வதற்குக் கால் அசைவு முறையினைப் பயன்படுத்துகின்றன.[14] மணல் சூழல் சூழலில் வாழும் பாலைவனக் கங்காரு எலி, அதிக அளவிலான உணவுப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. பாலைவனக் கங்காரு எலி மற்றொரு எலியின் கால அசைவு ஓசையினைக் கேட்கும்போது, தன் துளையிலிருந்து வெளியே வந்து அதைத் துரத்துகிறது அல்லது கட்டிப்பிடித்து சண்டையில் ஈடுபடுகிறது.[15]
வேட்டையாடுதல்
[தொகு]பாலைவனக் கங்காரு எலிகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடும் போது அதிக ஆபத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் முதலாவது இவை தனியாகவே தீவனத்தினைத் தேடுகின்றன. பாம்புகள் அல்லது பிற வேட்டையாடுபவர்களைக் கவனிக்க மற்ற எலிகளின் துணை இல்லை. இரண்டாவதாக, பாலைவனத்தில், உணவுப் பற்றாக்குறை, சீரற்றப் பரவல் காரணமாகப் பாலைவனக் கொறித்துண்ணிகள் உணவைத் தேடி தங்கள் வாழிடத்திலிருந்து வெளியே கணிசமான நேரத்தைச் செலவிட வேண்டும். இந்தக் காரணங்களால், பாலைவனக் கங்காரு எலி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் சில தழுவல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.[15]
பாம்புகள்
[தொகு]மெரியம் கங்காரு எலி வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவ்விலங்களைத் தவிர்த்துக்கொள்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாலைவனக் கங்காரு எலி மிகவும் ஆக்ரோசமாக வேட்டையாடும் விலங்குகளிடம் நடந்து கொள்கிறது.[15] பாம்பைப் பொறுத்தவரை, பாலைவனக் கங்காரு எலி தன் கால்களை அடித்து பாம்பு கொத்தக்கூடிய தூரத்திற்குள் நகர்ந்து காற்றில் மணலைத் தன் கால்கள் மூலம் வீசுகின்றது. இது சிறிய கொறித்துண்ணியினைப் பொறுத்தவரையில் நம்பமுடியாத ஆபத்தான செயலாக இருந்தாலும், பாம்பிற்கு இதன் இருப்பை எச்சரிக்க இந்த விசயங்களைச் செய்கிறது.[16] பாம்பு இருப்பதை எலிகள் உணர்ந்துள்ளன எனப் பாம்புகள் அறிந்துகொண்டால், எலிகளைப் பாம்புகள் தாக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. பாலைவனக் கங்காரு எலிகள் இவற்றின் இயற்கையான சூழலில் தளர்வான மணல் திட்டுகளால் வகைப்படுத்தப்படுவதால் மணலை உதைக்கும் செயலைச் செய்கின்றன.[15] பாலைவனக் கங்காரு எலி தன்னுடலில் பாம்பின் விசம் செலுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பாம்புகளை உதைக்கத் தன் பின்னங்கால்களையே பயன்படுத்துகிறது.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Álvarez-Castañeda, S.T.; Castro-Arellano, I.; Lacher, T. (2016). "Dipodomys deserti". IUCN Red List of Threatened Species 2016: e.T6686A22228301. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T6686A22228301.en. https://www.iucnredlist.org/species/6686/22228301. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ North American Mammals: Dipodomys deserti
- ↑ 3.0 3.1 Rieth, W. and Boykin, K.G. (2004-2007) Southwest Regional Gap Analysis Wildlife Habitat Relationship - Desert Kangaroo Rat.
- ↑ Best, Hildreth, Jones, Troy, Nancy, Clyde (26 October 1989). "Dipodomys deserti". Mammalian Species (339): 1–8. doi:10.2307/3504260.
- ↑ "Death Valley National Park". National Geographic. 2015-11-03. பார்க்கப்பட்ட நாள் 18 November 2016.
- ↑ 6.0 6.1 6.2 Best, T. L. (1989). "Dipodomys deserti". Mammalian Species (339): 1–8. doi:10.2307/3504260. http://www.science.smith.edu/msi/pdf/i0076-3519-339-01-0001.pdf. பார்த்த நாள்: 20 July 2011.
- ↑ Podolsky, Robert H.; Price, Mary V. (1990). "Patch use by Dipodomys deserti (Rodentia: Heteromyidae): profitability, preference, and depletion dynamics". Oecologia 83 (1): 83–90. doi:10.1007/BF00324638. பப்மெட்:28313247. Bibcode: 1990Oecol..83...83P. https://archive.org/details/sim_oecologia_1990-05_83_1/page/83.
- ↑ Price, M. V. (1983). "Laboratory studies of seed size and seed species selection by heteromyid rodents". Oecologia 60 (2): 259–263. doi:10.1007/BF00379529. பப்மெட்:28310494. Bibcode: 1983Oecol..60..259P. https://archive.org/details/sim_oecologia_1983-11_60_2/page/259.
- ↑ "Fluid Physiology: 3.1 Water Turnover in the Body".
- ↑ Richmond, C. R., T. T. Trujillo, and D. W. Martin.
- ↑ 11.0 11.1 Bankir, L (1 December 1985). "Urinary concentrating ability: insights from comparative anatomy". American Journal of Physiology. Regulatory, Integrative and Comparative Physiology 249 (6): R643-66. doi:10.1152/ajpregu.1985.249.6.R643. பப்மெட்:3934988. http://ajpregu.physiology.org/content/249/6/R643.short. பார்த்த நாள்: 2016-11-17.
- ↑ Lawler, Geluso, Rita, Kenneth (May 1986). "Renal Structure and Body Size in Heteromyid Rodents". Journal of Mammalogy 67 (2): 367–372. doi:10.2307/1380890. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1986-05_67_2/page/367.
- ↑
{{cite book}}
: Empty citation (help) - ↑ Randal, Jan (25 September 1996). "Species-specific footdrumming in kangaroo rats: Dipodomys ingens, D. deserti, D. spectabilis". Animal Behaviour 54 (5): 1167–1175. doi:10.1006/anbe.1997.0560. பப்மெட்:9398370.
- ↑ 15.0 15.1 15.2 15.3 Randal, Jan (23 February 2000). "Assessments and defense of solitary kangaroo rats under risk of predation by snakes". Animal Behaviour 61 (3): 579–587. doi:10.1006/anbe.2000.1643.
- ↑ Whitford, Malachi D; Freymiller, Grace F; Clark, Rulon W (2016-05-08). "Avoiding the serpent's tooth: predator-prey interactions between free-ranging sidewinder rattlesnakes and desert kangaroo rats". Animal Behaviour 130 (2017): 73–78. doi:10.1016/j.anbehav.2017.06.004.
- ↑ Freymiller, Grace A; Whitford, Malachi D; Higham, Timothy E; Clark, Rulon W (2019-03-27). "Escape dynamics of free-ranging desert kangaroo rats (Rodentia: Heteromyidae) evading rattlesnake strikes". Biological Journal of the Linnean Society 127 (1): 164–172. doi:10.1093/biolinnean/blz027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-4066.