பாலூர்காட்
பாலூர்காட் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பாலூர்காட் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°13′N 88°46′E / 25.22°N 88.76°Eஆள்கூறுகள்: 25°13′N 88°46′E / 25.22°N 88.76°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | தெற்கு தினஜ்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• Body | பாலூர்காட் நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 24 m (79 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 151,416 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காளி[1][2] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 733101 |
தொலைபேசி குறியீடு | 03522 |
வாகனப் பதிவு | WB-61/WB-62 |
மக்களவைத் தொகுதி | பாலூர்காட் |
சட்டமன்றத் தொகுதி | பாலூர்காட் |
இணையதளம் | http://wb.gov.in/ |
பாலூர்காட் (Balurghat (pron:ˌbʌlʊəˈgɑ:t) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தெற்கு தினஜ்பூர் மாவட்த்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடக்கே 295 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து. இந்நகரம் 11 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்நகரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வங்காளதேசத்தின் எல்லை உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24 வார்டுகளும், 37,949 வீடுகளும் கொண்ட பாலூர்காட் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,53,279 ஆகும். அதில் ஆண்கள் 76,730 மற்றும் பெண்கள் 76,549 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10823 (7.06%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 98.74%, முஸ்லீம்கள் 0.49%, கிறித்தவர்கள் 0.38% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3]
போக்குவரத்து[தொகு]
பாலூர்காட் தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா, சிலிகுரி, மால்டா, சியால்டா நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[4] தேசிய நெடுஞ்சாலை எண் 512 பாலூர்காட் நகரத்தின் வழியாக கூச் பெகர், சிலிகுரி, துர்காபூர், மால்டாவிற்கு பேருந்துகள் செல்கிறது.
கல்வி[தொகு]
- ஆத்தேர்யி டி. ஏ. வி. பொதுப்பள்ளி
- பாலூர்காட் அரசுப் பள்ளி
- பாலூர்காட் கல்லூரி[5][6]
- பாலூர்காட் மகளிர் கல்லூரி[7][8]
- பாலூர்காட் சட்டக் கல்லூரி [9][10]
- வடக்கு வங்காள வேளாண்மைப் பல்கலைக் கழகம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Fact and Figures". பார்த்த நாள் 14 July 2019.
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA". Ministry of Minority Affairs. மூல முகவரியிலிருந்து 25 May 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 July 2019.
- ↑ Balurghat Population Census 2011
- ↑ Balurghat Railway Station
- ↑ "Balurghat College". BC. பார்த்த நாள் 7 December 2018.
- ↑ "Balurghat College". College Admission. பார்த்த நாள் 7 December 2018.
- ↑ "Balurghat Mahila Mahavidyalaya". BMM. பார்த்த நாள் 7 December 2018.
- ↑ "Balurghat Mahila Mahavidyalaya". College Admission. பார்த்த நாள் 7 December 2018.
- ↑ "Balurghat Law College". BLC. பார்த்த நாள் 7 December 2018.
- ↑ "Balurghat Law College". College Admission. பார்த்த நாள் 7 December 2018.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Balurghat