பாரன் தீவு

ஆள்கூறுகள்: 12°16′40″N 93°51′30″E / 12.27778°N 93.85833°E / 12.27778; 93.85833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரன் தீவு எரிமலை
பாரன் தீவு
Barren Island
1995 இல் எரிமலை வெடிப்பு
உயர்ந்த இடம்
உயரம்354 m (1,161 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு12°16′40″N 93°51′30″E / 12.27778°N 93.85833°E / 12.27778; 93.85833
புவியியல்
அமைவிடம்அந்தமான் தீவு, இந்தியா
நிலவியல்
மலையின் வகைStratovolcano with pyroclastic cones
கடைசி வெடிப்பு2013 to 2015 (ongoing)

பாரன் தீவு (Barren Island) என்பது இந்தியாவின், அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் கடலில் உள்ளது. இது அந்தமான் தீவுச் சங்கிளியின் கிழக்கில் தொலைவில் உள்ள ஒரு தீவாகும். இங்குதான் தெற்காசியாவிலேயே விழித்திருக்கும் ஒரே எரிமலை உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆட்சிப்பகுதியின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து வடகிழக்காக 135 km (84 mi) தொலைவில் உள்ளது. இதில் உள்ள எரிமலை வெடிப்பு குறித்து முதல் பதிவு கி.பி. 1787 முதல் உள்ளது, அப்போதுமுதல் பத்துமுறைக்கு மேல் எரிமலை வெடித்துள்ளது. மிக அண்மையில் செப்டம்பர் 2010 மற்றும் சனவரி 2011 இல் வெடித்துள்ளது.[1]

முதல் பதிவான 1787 க்கு பிறகு 1789, 1795, 1803–04, 1852 ஆகிய ஆண்டுகளில் வெடித்து, பின் அதற்குப்பிறகு ஏறக்குறைய ஒன்னரை நூற்றாண்டுகளாக தீவில் செயலற்று தூங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை 1991 ஆண்டு வெடித்து ஆறு மாதங்கள் குமுறியபடி இருந்தது. பிறகு 1994–95 மற்றும் 2005–07 காலகட்டத்தில் வெடித்தது. பிறகு 2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்போது இதன் பங்கு இருந்த்தாக கருதப்படுகிறது.[2]

இடம்[தொகு]

அந்தமான் தீவுகளில் உள்ள பாரன் தீவை காட்டும் வரைபடம்.

இந்த எரிமலைத் தீவு இந்திய பரிமிய நிலத்தட்டுகளின் விளிம்பின் மையத்தில் உள்ளது.

தீவின் உச்சித் தோற்றப் படம்

இத்தீவில் மனிதர்கள் யாரும் இல்லை.சிறிய எண்ணிக்கையிலான ஆடுகள், பறவைகள், பழ வௌவால்கள் போன்ற வௌவால்கள், எளி போன்ற கொறிணிகள் காணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Barren Island". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
  2. Jørgen S. Aabech. "Barren Island, Andaman Islands, Indian Ocean". பார்க்கப்பட்ட நாள் June 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Scientific Expedition to Barren Island (Andaman Islands, Indian Ocean)". 2003. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் June 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரன்_தீவு&oldid=3625216" இலிருந்து மீள்விக்கப்பட்டது