உள்ளடக்கத்துக்குச் செல்

பாரசீகக் கம்பளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீகக் கலைகள்
காட்சிக் கலைகள்
ஓவியம்
சிற்றோவியம்
அழகூட்டற் கலைகள்
நகை
பூத்தையல் அலங்காரக்கூறு
ஓட்டுவேலை கைப்பணி
மட்பாண்டம்
இலக்கியம்
இலக்கியம் தொன்மங்கள்
நாட்டாரியல்
பிற
கட்டிடக்கலை உணவுகள்
கம்பளம் தோட்டங்கள்
நிகழ்த்து கலைகள்
நடனம் இசை
திரைப்படம்

பாரசீகக் கம்பளம் என்பது, நீண்ட காலமாகப் பாரசீகப் பகுதிகளில் செய்யப்படும் கம்பளங்களைக் குறிக்கும். கம்பளம் பாரசீகக் கலையினதும் பண்பாட்டினதும் ஒரு முக்கியமான அம்சம் எனலாம். பாரசீகப் பண்பாட்டின் தனித்துவமான வெளிப்பாடாகக் கொள்ளத்தக்க கம்பளம் நெய்தல் பண்டைக்காலப் பாரசீகத்தில் தொடங்கியது. இத் தொழில் இன்றும் பண்டைய பாரசீகமான இன்றைய ஈரானில் சிறந்து விளங்குகிறது. 2008 ஆம் ஆண்டில் ஈரானில் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களின் ஏற்றுமதிப் பெறுமானம் 420 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது ஈரானில் ஏறத்தாழ 1.2 மில்லியன் அளவானோர் இத்தொழிலில் ஈடுபட்டு உள்நாட்டுத் தேவைகளுக்கும், ஏற்றுமதிக்கும் கம்பளங்களை வழங்கி வருகின்றனர். அண்மைக் காலங்களில், மரபுவழிப் பாரசீகக் கம்பளத் தொழிலுக்குக் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் பாரசீகக் கம்பளங்களின் வடிவமைப்புக்களைப் பயன்படுத்திப் போலியான பாரசீகக் கம்பளங்கள் தயாரிப்பதும், பாரசீகக் கம்பளங்களுக்கு இணையான விலை மலிவான கம்பளங்கள் கிடைப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகக்_கம்பளம்&oldid=2228226" இலிருந்து மீள்விக்கப்பட்டது