பாப்ரா செரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாப்ரா செரீப்
தாய்மொழியில் பெயர்بابرہ شریف
பிறப்பு10 திசம்பர் 1954 (1954-12-10) (அகவை 67)
நங்கானா சாகிபு, பஞ்சாப், பாக்கித்தான்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1968 – 1997, 2005 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
நடிகர் சாகித் (1977)

பாப்ரா செரீப் (Babra Sharif), (பிறப்பு 10 திசம்பர் 1954) [1] ஓர் பாக்கித்தான் திரைப்பட நடிகையாவார். இவர் 1970களின் நடுப்பகுதியிலிருந்து 1980கள் வரை தான் நடித்த பாத்திரங்களுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஷாஹித், நதீம் பேக், வஹீத் முராத், குலாம் மொஹைதீன், பைசல் ரஹ்மான், முஹம்மது அலி , சுல்தான் ரஹி உட்பட இவரது காலத்தின் பல பிரபலமானவர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். இவர் பாக்கித்தானில் உருது படங்களில் நடித்து பெரும் வெற்றி பெற்றார். இவர் ஒரு நடிகையாக தனது பன்முகத்தன்மையை நிரூபித்த பல்வேறு பாத்திரங்களை செய்தார். சில விமர்சகர்கள் இவரை பாக்கித்தானில் இருந்த காலத்தின் சிறந்த நடிகையாகவும் கருதினர். [2] [3]

இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

செரீப் பாக்கித்தானின் இலாகூரில் ஒரு நடுத்தர வர்க்க பாக்கித்தான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, இவர் நிகழ்ச்சி வணிகத்தில் கணிசமான ஆர்வம் காட்டினார். [4]

தொழில்[தொகு]

விளம்பரமும் தொலைக்காட்சியும்[தொகு]

செரீப் 12 வயதில் விளம்பரங்களுக்கு மாதிரியாக நடிக்கத் தொடங்கினார்; இவர் 1973 இல் 'ஜெட்' வாஷிங் பவுடர் விளம்பரத்தில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். மேலும், ஜெட்' பவுடர் கேர்ள் என்றும் அறியப்பட்டார். அழகான கூந்தலைக் கொண்டிருந்த கவர்ச்சியான மற்றும் புத்திசாலியான் இவர் விரைவில் ஒரு வீட்டுப் பெயராக மாறினார். [5][6] அதே ஆண்டில், இவர் மொஹ்சின் ஷிராஜியின் தொலைக்காட்சி நாடகத்தில் தோன்றினார். இது ஒரு கராச்சி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. மேலும் பாக்கித்தன் தொலைக்காட்சியின் ஹசீனா மொயின் எழுதிய ஷிரின் கான் இயக்கிய நகைச்சுவை நாடகமான கிரண் கஹானி யில் நடித்திருந்தார். 1992 இல் மீண்டும் தொலைக்காட்சிக்கு வந்தார். அன்வர் மக்சூத்தின் பாக்கித்தான் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகம் நாடான் நாடியாவில் நடித்தார்.[2][7][8][9][10]

'லக்ஸ்' விளம்பரத்தில், 'ஆகிர் லாக் ஹமரா செஹ்ரா ஹி டிக்டே ஹெய்ன்', (பொருள்: மக்கள் எங்கள் முகத்தை (முகங்களை) மட்டும் பார்க்கிறார்கள்) என்ற வாக்கியத்துடன் தோன்றினார். இது இவரது புகழை மேலும் மேலே கொண்டு சென்றது.[3][11][12][13]

திரைப்படங்கள்[தொகு]

1974 ஆம் ஆண்டில், ஷமிம் ஆரா தனது பூல் படத்திற்காக இவரை ஒப்பந்தம் செய்தார். இது எஸ். சுலைமான் இயக்க திட்டமிடப்பட்டது. அதே நேரத்தில், எஸ். சுலைமான் தனது இன்திசார் படத்திற்காக இவர் ஒப்பந்தம் செய்தார். இரண்டு படங்களுமே 1974இல் வெளியிடப்பட்டது ஆனால் தற்செயலாக, இன்திசார் படம் பூல் படத்துக்கு முன்பு வெளியிடப்பட்டன. எனவே, இவர் இன்திசார் படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார்.[4][14][15][16] நாசர் ஷபாப் இயக்கிய ஒரு பொன்விழா கண்ட1974இல் வெளியான ஷாமா என்ற மற்றொரு வெளியீடில் வஹீத் முராத், தீபா, முகமது அலி மற்றும் நதீம் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.[17] [18]

படங்களில் பணிபுரிந்த போதிலும், இவர் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகளைத் தேட வேண்டியிருந்தது. அது உடனடியாக வரவில்லை. 1975ஆம் ஆண்டில், இயக்குனர் மசூத் பர்வேசின் மேரா நா படாய் கான் திரைப்படத்தில் துணை நடிகையாக தோன்றினார். நீலோ மற்றும் ஷாஹித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பின்னர், தனது முயற்சியைத் தீவிரப்படுத்தி தன்னை பாக்கித்தான் திரைப்படத்தில் தனது தகுதியை நிரூபித்தார்.[4][19][20]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Babra Sharif". 23 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "Babra Sharif Pakistani Actress Biography & Latest Photos". 10 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Famous Lollywood Actress Babra Sharif: Best Movies". 31 December 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 4.2 "Babra Sharif biography". 5 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Babra Sharif's Jet Commercial". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Larger than life". 10 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Babra biography". 18 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Drama Serial Nadan Nadia on Ptv". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Kiran Kahani". 2 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Pakistani Film heroines from the 1970's". 29 October 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Babra Sharif's Lux Commercial". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 12. "babra in lux soap add". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Lux 50 Years Documentary". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Bhool (1974)". 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Pakistan Movie Database- Bhool". 2 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Pakistan Movie Database- Intezar". 2 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Shama Urdu Movie". 29 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Pakistan Movie Database-Shama". 2 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 19. "NAUKER URDU MOVIE". 29 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
 20. "NAUKER". 13 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்ரா_செரீப்&oldid=3290623" இருந்து மீள்விக்கப்பட்டது