உள்ளடக்கத்துக்குச் செல்

நதீம் பேக் ( நடிகர் )

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிர்சா நசீர் பேக் (ஆங்கிலம்: Nadeem Baig) ( உருது: ندیم‎) என்பவர் 1941 சூலை 19 அன்று பிறந்த ஒரு பாக்கித்தான் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் நதீம் பேக் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்டார். நதீம் பேக் 1967 ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து, இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றிய அவர், 1997 ஆம் ஆண்டின் "பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ்" விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்தியாவில் கிடைக்கும் பரவலான ரசிகர்களின் ஆதரவு இவருக்கு பாகிஸ்தானில் கிடைக்கப்படுகிறது.[1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

நவீன ஆந்திராவின் விசயவாடாவில் பேக் பிறந்தார். இது 1941 இல் பிரித்தானிய இந்தியாவில் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1947 ல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பின்னர் நதீம் பேக் தனது குடும்பத்தினருடன் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். அவர் தனது உயர்நிலைப் பள்ளியை முடித்து, திரையுலகில் நுழைவதற்கு முன்பு கராச்சியில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயின்றார்.[2]

நதீம் உள்ளிட்ட கலைஞர்களான தலத் உசேன், எம்.சாகீர் கான், அப்தாப் அஸீம், சலீம் ஜாஃப்ரி, மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் இக்பால் ஹைதர் ஆகியோர் அனைவரும் 1960 களில் கராச்சியில் உள்ள ஒரு சங்கத்தில் சக நடிகர்களாக இருந்தார்கள். அவரும் அவரது நண்பர்களான அமீர் அகமது கான் மற்றும் காசிம் சித்திகி ஆகியோர் பல இசை போட்டிகளில் வென்றுள்ளனர். அந்த இசை போட்டி ஒன்றில், இவரை பாடகர் ஃபெர்தௌசி ரஹ்மான் கவனித்தார். இவரது பாடும் திறமையால் அவர் ஈர்க்கப்பட்டு, டாக்காவின் திரையுலகில் பின்னணி பாடலை பாடுவதற்கு முயற்சிக்க இவரை ஊக்குவித்தார்.[3]

தொழில்

[தொகு]

நதீமின் திரைப்பட வாழ்க்கை 2019 ஆம் ஆண்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.[4] அவர் 1967 ஆம் ஆண்டில் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் தனது முதல் படமான சகோரி" (1967) என்றப் படத்தில் ஷபனா என்ற பங்களாதேஷ் நடிகையுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றினார். இந்த படத்தை கேப்டன் எத்தேஷாம் தயாரித்து இயக்கியுள்ளார்.1968 ஆம் ஆண்டில் இவரின் மகளை நதீம் திருமணம் செய்தார்.இந்த படம் மேற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான் திரையுலகின் இரு சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டது.

சிறந்த நடிகர் பிரிவில் நிகோரி விருதினை வென்றார். நதீமின் படங்களில் நடான் (1973), "அனாரி", "பெச்சன்" (1975), "தலாஷ்" (1976), "ஐனா' (1977), "ஹம் தோனா" (1980), "இலாஜாவாப்", "குர்பானி" (1981), "சாங்தில்" (1982), மற்றும் தெக்லீஸ்" ( 1983) குறிப்பிடத்தகவையாகும். அவர் நடிகை ஷபனாவுடன் ஒரு பிரபலமான திரை ஜோடியாக திகழ்ந்தார், அவருடன் இவர் தனது பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.[5]. நடிப்பு தவிர, படங்களுக்கு பல பாடல்களை நதீம் பாடியுள்ளார்.[6] name=cineplot/>

பின்னணி பாடகர்கள்

[தொகு]

அவரது திரை வாழ்க்கையில்,பெரும்பாலும் பின்னணிப் பாடகர் அஹ்மத் ருஷ்டி இவருடையப் பாடல்களை பாடினார். பின்னர் பாடகர் அக்லக் அகமது என்பவர் குரல் கொடுத்தார். ருஷ்டியின் குரலில் உள்ள பாடல்கள் அவரது வேலையை எளிதாக்கியது மற்றும் தனது வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.[7] அவருக்கு குரல் கொடுத்த மற்ற பின்னணி பாடகர்கள் மெஹ்தி ஹாசன், மசூத் ராணா, முஜீப் ஆலம், ஆசாத் அமானத் அலிகான், பஷீர் அகமது, உஸ்தாத் அமானத் அலிகான் மற்றும் ஏ நய்யர் ஆகியோரும் அடங்குவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நதீம் 1968 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் பெண்ணான ஃபர்சானாவை மணந்தார். அவர்கள் 1998 இல் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு பேத்தியுடன் பங்களாதேஷில் வசிக்கிறார்கள். அவர் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் மற்றும் பில்லியர்ட் வீரர் ஆவார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. https://en.dailypakistan.com.pk/lifestyle/renowned-actor-nadeem-celebrating-75th-birthday-today/, Nadeem Baig's Pride of Performance award info listed on Daily Pakistan newspaper, Published 19 July 2016, Retrieved 11 Nov 2016
  2. http://www.dawn.com/news/738001, 'Profile: The legend speaks', Dawn newspaper, Published 29 July 2012, Retrieved 11 Nov 2016
  3. Ilyas, Aslam (1992), Silver Star Nadeem, Karachi: Screen Publications
  4. Admin. "Nadeem Baig (actor)'s Profile". Cineplot.com. பார்க்கப்பட்ட நாள் 11 Nov 2016.
  5. http://tribune.com.pk/story/66587/lollywood-a-brief-history/ Some milestones in Pakistani film industry, The Express Tribune newspaper, Published 23 Oct 2010, Retrieved 11 Nov 2016
  6. "Finding a new star" by Saadia Qamar, Express Tribune newspaper, August 4, 2010, Retrieved 11 Nov 2016
  7. "Dawn News package". பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதீம்_பேக்_(_நடிகர்_)&oldid=2868470" இலிருந்து மீள்விக்கப்பட்டது