பாதுகாவலர்கள் மன்றம் (ஈரான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதுகாவலர்கள் மன்றம்
வகை
வகை
  • தேர்தல் ஆணையம்
  • அரசியலமைப்பு நீதிமன்றம்
  • நாடாளுமன்றம்
தலைமை
செயலாளர்
அகமது ஜன்னதி
17 சூலை 1992
கட்டமைப்பு
உறுப்பினர்கள்12
Guardiancouncil.svg
அரசியல் குழுக்கள்
இசுலாமிய சமய அறிஞர்கள்:[1]
  • இசுலாமிய மதக்கல்வி ஆசிரியர்கள் சங்கம்
  • இசுலாமிய அறிஞர்கள் சங்கம்
கூடும் இடம்
தெகுரான், ஈரான்
வலைத்தளம்
Official website

பாதுகாவலர்கள் மன்றம் அல்லது அரசியலமைப்புக் குழு (Guardian Council or Constitutional Council) (Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.)[2][3]ஈரான் இசுலாமியக் குடியரசில் கணிசமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் செலுத்தும் ஒரு நியமிக்கப்பட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இது ஈரானின் அரசியலமைப்பு நீதிமன்றமாகச் செயல்படும். இக்குழு ஒரு செயலர் தலைமையில் செயல்படும்.

ஈரானிய அரசியலமைப்பின் படி, இப்பாதுகாவலர்கள் குழுவின் 12 உறுப்பினர்களில் 6 பேர் இசுலாமியச் சமயச் சட்டங்களில் வல்லுராக இருத்தல் வேண்டும். இந்த 6 பேரை ஈரானின் அதியுயர் தலைவர் நியமிப்பார். இசுலாமியச் சமயச் சட்டம் தவிர பிற முக்கிய சட்டங்களின் நிபுனர்களாக உள்ள மீதி ஆறு நபர்களை நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் படி ஈரானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிப்பார்.[4]

பாதுகாவலர்கள் மன்றம் என அழைக்கப்படும் அரசியலமைப்புக் குழுவின் முக்கியப் பணி, ஈரான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பின் நடைமுறையை விளக்குவதாகும்.[5] இம்மன்றத்தின் பிற முக்கியப் பணிகள் ஈரானின் பொதுத் தேர்தல்களை மேற்பார்வை செய்தல் மற்றும் வல்லுநர்கள் மன்றம், ஈரானின் குடியரசுத தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஒப்புதல் அளிக்கும்.[6] மேலும் இந்த மன்றம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், ஈரானின் அரசியலமைச் சட்டப் பிரிவு 96 மற்றும் 94-இன் படி இசுலாமிய சமய நெறிப் படி உள்ளதா என்பதையும் ஆராயும்.[7]

இம்மன்றம் இசுலாமிய நெறிப்படி, ஈரானின் இசுலாமியச் சட்டங்கள் உள்ளதா என்பதை கீழ்கண்ட வழிகளில் விளக்கும்:

  • ஈரான் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான வேட்பாளர்களின் கண்காணிப்பை மேற்பார்வையிடுகிறது மற்றும் தேசிய அலுவலகத்தை யார் இயக்க முடியும் மற்றும் இயங்க முடியாது என்பதை தீர்மானிக்கிறது [8]
  • சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களையும், மிகவும் பிரபலமானவர்களையும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு மறுக்கப்படுகிறது [9]
  • தகுதி நீக்கம் (வீட்டோ) செய்யப்படாத சட்டங்கள் நாடாளுமன்றம் இயற்றுகிறதா என்பதை கண்காணிக்கும். [10][11]
  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தாக்கம் ஈரான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் உள்ளதா என்பதை ஆராயும.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaul, Bakhash (12 September 2011). "Iran's Conservatives: The Headstrong New Bloc". Frontline. PBS. March 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "GUARDIAN COUNCIL". Encyclopædia Iranica XI. (2003). New York, NY: Encyclopaedia Iranica Foundation. 379–382. ISBN 0933273711. 
  3. "Council of Guardians | Definition, Role, Selection, & History". Encyclopedia Britannica (ஆங்கிலம்). 2021-03-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. Inc., Manou & Associates. "Iranian Government Constitution, English Text". 2011-06-17 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  5. Article 98 of the constitution
  6. Article 99 of the constitution
  7. Articles 96 and 94 of the constitution.
  8. The Guardian Council Expands Power: Election Monitoring Boards, Arseh Sevom, Arseh Sevom, Feb 18, 2020. Retrieved February 24, 2020.
  9. https://www.atlanticcouncil.org/blogs/iransource/factbox-irans-2020-parliamentary-elections/, Arash Azizi, Atlantic Council, February 14, 2020. Retrieved February 24, 2020.
  10. Whose Iran?, Laura Secor, த நியூயார்க் டைம்ஸ், January 28, 2007. Retrieved September 22, 2008.
  11. Iran: Voices Struggling To Be Heard, U.S. Department of State Fact Sheet, April 9, 2004. Retrieved September 22, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 35°41′16.36″N 51°24′4.35″E / 35.6878778°N 51.4012083°E / 35.6878778; 51.4012083