மகுமூத் அகமதிநெச்சாத்
மகுமூத் அகமதிநெச்சாத் محمود احمدینژاد | |
---|---|
![]() | |
ஈரான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகஸ்ட் 3 2005 | |
துணை குடியரசுத் தலைவர் | பர்விஸ் தர்வூதி |
தலைவர் | அலி காமெனி |
முன்னவர் | முகமது கத்தாமி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 அக்டோபர் 1956 அரதான், ஈரான் |
அரசியல் கட்சி | இசுலாமிய ஈரானை படைத்தவர்களின் கூட்டமைப்பு |
சமயம் | சியா இசுலாம் |
மகுமூத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad, மஃமூத் அஃமதிநெச்சாத் பாரசீக மொழி: محمود احمدینژاد) ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார்.[1]2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார். இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்தார்.
ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1976ல் சேர்ந்து குடிசார் பொறியியல் படித்தார். இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987ல் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார்.
2005ல் மஃமூத் அஃமதிநெச்சாத் இசுரேல் நாடு இருக்கக்கூடாது என்று கூறியதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் கண்டனம் செய்தார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், மற்றும் வேறு சில நாடுகள் மஃமூத் அஃமதிநெச்சாத்தும் அவரின் ஈரானிய அரசும் யூதர்களுக்கு எதிரிகள் என்று குற்றம் சாட்டி, ஈரான் நாடுஅணுஆயுதத்தை படைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி, ஈரான் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்த முயன்று வருகிறார்கள்.
இதனையும் காண்க[தொகு]
- பகலவி வம்சம்
- முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
- ஈரானியப் புரட்சி
- ரூகொல்லா கொமெய்னி
- அலி காமெனி
- அசன் ரவ்கானி
- முகமது கத்தாமி
- மகுமூத் அகமதிநெச்சாத்
- இப்ராகிம் ரைசி