பாண்டா கரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாண்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய பாண்டா
Giant Panda Washington DC.JPG
வாஷிங்டன், டி.சி.யின் தேசியப் பூங்காவிலுள்ள பான்டா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Ursidae
பேரினம்: Ailuropoda
இனம்: A. melanoleuca
இருசொற் பெயரீடு
Ailuropoda melanoleuca
(David, 1869)
துணையினம்
Mapa distribuicao Ailuropoda melanoleuca.png
Giant Panda range

பாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்லது "பெரிய கரடி பூனை"; ஆங்கிலம்: Giant Panda) சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும். இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய்(மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி), கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும்.

வளர்ச்சி[தொகு]

  • பிறந்த பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும், சுமார் 800கிராம் எடையளவு கொண்டிருக்கும், கண் தெரியாது.
  • பத்து நாட்களுக்கு பிறகு அதன் நிறம் மாறத் தொடங்கி, அதன் வழக்கமான நிறமான கருப்பு-வெள்ளையை அடையத்தொடங்கும்.
  • நாற்பது நாட்களுக்கு பின்பு கண் தெரியத் தொடங்கும்.
  • ஆறு மாதங்களுக்குப் பிறகு மரம் ஏறத் தொடங்கும்.
  • ஒரு வருடத்தில் 45கிலோகிராம் அளவு எடை கொண்டிருக்கும்.
  • ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் எடை 100கிலோவை அடைந்திருக்கும், இனப்பெருக்கம் செய்யுமளவுக்கு தகுதி பெற்றிருக்கும். தோராயமாக 30 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உயிர் வாழ்கிறது, வனங்களில் 14 முதல் 20 வருடங்கள் வரையே உயிர் வாழ்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டா_கரடி&oldid=2228454" இருந்து மீள்விக்கப்பட்டது