பாகுபலி (ஒலி வரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகுபலி தொடக்கம்
ஒலிவரி
கீரவாணி
வெளியீடு
ஒலிப்பதிவு2015
நீளம்
இசைத்தட்டு நிறுவனம்
  • லஹாரி இசை நிறுவனம்- தமிழ், தெலுங்கு
  • மனோரமா- மலையாளம்
இசைத் தயாரிப்பாளர்கீரவாணி
கீரவாணி காலவரிசை
தில்லுக்கு சோடக்கு ராமைய்யா பாகுபலி தொடக்கம்

பாகுபலி என்பது 2015 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் வெளியான திரைப்படத்தின் ஒலிவரி ஆகும்.

தயாரிப்பு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் இராஜமௌலியின் உறவினரும் , ஆஸ்தான இசையமைப்பாளருமான கீரவாணி (இசையமைப்பாளர்) இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார். படத்திற்குத் தேவையான போர்க்காட்சிகளைப் படமாக்கிய பின் மார்ச் 5, 2015 இல் கீரவாணியின் இசையில் இரு பாடல்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவிடமிருந்து அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தது. தமிழ்ப் பதிப்பிற்கான பாடலாசிரியராக மதன் கார்க்கி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[1] சூலை 2, 2014 இல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் , ஐதராபாத்தில் உள்ள பிரசாத் படமனையில் கீரவாணி இசையில் தீபு அவர்கள் பாடிய பாடல் வெளியானது.[2] அக்டோபர் 28, 2014 இல் தி டெக்கன் குரோனிக்களுக்கு கீரவாணி அளித்துள்ள நேர்காணலில் படத்தின் பாடலாசிரியர்கள் பாடலை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.[3] பல்காரியாவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது படத்தின் ஒலிவரியானது பெப்ரவரி 2015 இல் வெளியாகும் எனக் கருதப்பட்டது.[4] லஹாரி இசை நிறுவனம் இந்த ஒலிவரிக்கான இசை வெளியீட்டு உரிமையை சுமார் 30 மில்லியன் மதிப்பில் பெற்றது. இதனை யூடியூப் தளத்திலிருந்தும் அனுகவும் வகை செய்யப்பட்டிருந்தது[5][6]. படக்குழுவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பாடல் வெளியீட்டானது திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் வைத்து நடைபெறும் என சூன் 13 இல் அறிவித்தது[7][8]. மேலும் இந்தத் திரைப்படத்தின் ஒலிவரியானது இந்தி, மலையாளம் மொழிகளிலும் வெளியானது.

இந்தத் திரைப்படம் எட்டு பாடல்களைக் கொண்டது. எட்டு பாடல்கள் மற்றும் பின்ணனி இசை அமைத்தவர் இசையமைப்பாளர் கீரவாணி ஆவார். பாடல்கள் சூன் 13,2015 அன்று வெளியானது. இந்தப்படத்தின் பாடல்களை இகந்தி சுந்தர், அனந்த ஸ்ரீராம், ராம யோகய்யா சாஸ்திரி ,கே. சிவ சக்தி தத்தா , சைதன்யா பிரசாத் ஆகியோரும் ஆதித்யா மற்றும் நீல் சான் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கான இசை வெளியீட்டு உரிமையை டி சீரிஸ் இசை நிறுவனமும் இந்தி இசை வெளியீட்டு உரிமையை ஜீ இசை நிறுவனமும் பெற்றுள்ளன.[9][10]

விமர்சனம்[தொகு]

123தெலுங்கு.காம் இந்தத் திரைப்படத்தின் பாடல்களுக்கு நேர்மறையான விமர்சனத்தையே வழங்கியது. மேலும் அதில் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படத்தின் சூழ்நிலைக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. ராஜமௌலியின் பாடல் காட்சியமைப்புடன் பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும் எனவும் கூறியது[11]. இந்தியா கிளிட்ஸ் 5 க்கு 3.25 புள்ளிகள் அளித்தது. இதில் பல்வேறு விதமான இசை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. பாகுபலி படத்தின் பாடல்களுக்கு ஃபில்மீஈவென்ட்ஸ்.காம் எனும் தளத்தில் பார்வையாளர்கள் 5 க்கு 4 தரப்புள்ளிகள் அளித்தனர்[12]. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 க்கு 4 தரப்புள்ளிகள் வழங்கியது.[13]

தமிழ்[தொகு]

அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். பச்சைத் தீ எனும் பாடலை கார்த்திக், தாமினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலின் நீளம் 4.33 மணித்துளி ஆகும். ஜீவ நதி எனும் பாடலை கீதா மாதுரி பாடியுள்ளார். இதன் நீளம் 1.55 மணித்துளி ஆகும். தீரனே எனும் பாடலை ரம்யா பெகரா, தீபு ஆகியோர் பாடியுள்ளனர். இதன் நீளம்5.43 மணித்துளி. இருள் கொண்ட வானில் எனும் பாடலை தீபிகா பாடியுள்ளார். இதன் நீளம்4.04 மணித்துளியாகும்.

மூச்சிலே தீயுமாய் எனும் பாடலை கைலாஷ் கெர் பாடியுள்ளார்.மனோகரி எனும் பாடலை மோகன போகராஜு, ஹரிசரன் ஆகியோர் பாடியுள்ளனர். சிவ சிவாய போறியே எனும் பாடலை இசையமைப்பாளர் கீரவாணியும், வைக்கம் விஜயலட்சுமி அகியோர் பாடியுள்ளனர். வீரனே எனும் ஆங்கிலப் பாடலை ரம்யா பெஹாரா மற்றும் ஆதித்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Our Mahaabali lyricist and dialogue writer Madan Karky with our music director MM Keeravaani garu. They are discussing the music composition for a song". baahubali.com. 12 June 2014. Archived from the original on 12 August 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
  2. "Our Music Director M M Keeravani Garu recording a song with singer Deepu at Prasads Labs". baahubali.com. 2 July 2014. Archived from the original on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2014.
  3. "Yet to start on Baahubali". Deccan Chronicle. 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  4. Veena (2 December 2014). "Baahubali Audio Launch In Feb, 2015". Oneindia Entertainment. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  5. "Bahubali audio sold for Rs 3 cr". Bangalore Mirror. 21 May 2015. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "Bahubali Audio Jukebox". 13 Jun 2015.
  7. "Baahubali (@BaahubaliMovie) on Twitter".
  8. "Official: Baahubali Audio Launch On June 13". Filmibeat. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 12 December 2016.
  9. "T-series to market content rights of 'Baahubali'". Deccan Chronicle. 28 May 2015. http://www.deccanchronicle.com/150527/entertainment-bollywood/article/t-series-market-content-rights-baahubali. 
  10. "Baahubali -The Beginning - Audio Jukebox". —via Zee Music YouTube Channel. 30 June 2015.
  11. "Music Review : Baahubali – Universal Album". 123telugo.com. பார்க்கப்பட்ட நாள் 12 December 2016.
  12. http://www.indiaglitz.com/channels/telugu/musicreview/18058.html
  13. "Music Review: Baahubali". Times of India. 25 June 2015. பார்க்கப்பட்ட நாள் 12 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபலி_(ஒலி_வரி)&oldid=3587502" இலிருந்து மீள்விக்கப்பட்டது