உள்ளடக்கத்துக்குச் செல்

பஷ்மினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஷ்மினா என்பது ஒரு சிறந்த வகைக் காஷ்மீர் கம்பளி ஆடை ஆகும் . அதிலிருந்து தயாரிக்கப்பட்ட துணி முதன் முதலில் காஷ்மீரில் நெய்யப்பட்டது.[1] பஷ்மினா என்ற பெயர் பெரிசிய மொழியில் இருந்து பெறப்பட்டதாகு, (Persian /pašmina). அதாவது "கம்பளியில் இருந்து தயாரிக்கப்பட்டது" என்பது இதன் பொருள்.[2] ஐரோப்பியர்கள் இந்த இழையை முதன்முதலில் முதன் முதலில் காஷ்மீரில்கண்டறிந்ததால் பஷ்மினா மேற்குலகில் 'காஷ்மீரி' என்று அழைக்கப்படுகிறது.[3] கம்பளி காஷ்மீர் ஆட்டின் பல்வேறு இனங்களிலிருந்து பெறப்படுகிறது. லடாக் பீடபூமியில் உள்ள சாங்தேங்கி என்ற இடத்தில் சாங்தேங்கி அல்லது பஷ்மினா ஆடு, கார்கில் லடாக் பகுதியில் உள்ள மால்ரா ஆடு, இமாசலப் பிரதேசத்தில் மற்றும் வட இந்தியாவின் இமயமலையில் இருந்து சேகு ஆடு, நேபாளத்தின் சியாங்கரா ஆடு அல்லது நேபாளா ஆடு ஆகிய ஆட்டினங்களிலிருந்து பஷ்மினா பெறப்படுகிறாது. காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் வளரும் ஆடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பஷ்மினாவில் நெய்யப்படும் சால்வைகள் ’ ஷாஹ்மினா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சால்வைகள் மிகச் சிறந்த காஷ்மீர் இழைகளிலிருந்து கைநூற்பால் சுழற்றப்பட்டு நெய்யப்படுகின்றன .[4]

மூல (இடது) மற்றும் டி-ஹேர்டு (வலது) காஷ்மீர் பாஷ்மினா கம்பளி

வரலாறு[தொகு]

தெற்காசியாவில் நெய்யப்பட்ட சால்வைகள் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கத்திலேயே அணியப்பட்டு வந்திருந்தன. ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு மொஹெஞ்சதாரோவில் காணப்படும் ஒரு பாதிரியார்-ராஜாவின் சிலை, மூவிலைச் செடி வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட சால்வையை அவர் அணிந்துள்ளது போன்று சிலை காணப்படுகிறது.

காஷ்மீரில் தயாரிக்கப்பட்ட கம்பளி சால்வைகள் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஆப்கானிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இருப்பினும், 15 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரின் ஆட்சியாளர்களால் குறிப்பாக ஜெயிநுல்-அப்தீன் என்பவர் தான் பஷ்மினா தொழிற்துறை பாரம்பரியமாக நிறுவப்பட்டது. இவர் மத்திய ஆசியாவிலிருந்து நெசவாளர்களை அழைத்து வந்து காஷ்மீரில் அறிமுகப்படுத்தினார். பிற ஆதாரங்கள் மூலம், மீர் சையித் அலி ஹமதானி என்பவர் பாரம்பரியமான 700 பஷ்மினா நெய்யும் கைவினைஞர்களுடன் பெர்சியாவிலிருந்து காஷ்மீருக்கு வந்து பஷ்மினாவை அறிமுகப்படுத்தியதாகக் கருதுகின்றனர்.[6][7]

பஷ்மினா சால்வைகள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் உள்ள அரச குடும்பம் மற்றும் மேற்குடியினரால் அணியப்பட்டு வந்துள்ள்ன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் பணக்கார பெண்களின் திருமணத்தில் வரதட்சணையாக பாஷ்மினா போர்வைகள் முக்கிய சீராகக் கொடுக்கப்பட்டன். அவை இந்த நாடுகளில் ஒரு வகையான கௌரவ அடையாளமாகக் கருதப்பட்டது.[8] பஷ்மினா கைவினைப் பாணி காஷ்மீரில் மிர் சையித் அலி ஹமதானியால் பிரபலப்படுத்தப்பட்டன.[9]

பாஷ்மினா ஆடு காப்ரா ஹிர்கஸ் என்ற மலை இனங்களிலிருந்து பெறப்படுகிறது. பாஷ்மினா மற்றும் பொதுவான காஷ்மீர் ஆடுகளிடையே இடையே ஒரு தனித்துவமான வேறுபாடு நாரிழை விட்டம் ஆகும். பொதுவான காஷ்மீர் இழை (15–19 மைக்ரான்) [10] ஆகும். இதனை விட பஷ்மினா இழைகள் மெல்லியதாகவும், தரமானதாகவும் (12–15 மைக்ரான்) அளவில் உள்ளன, எனவே மெல்லிய ரக ஆடைகளை நன்றாக மேலாடை போன்றி தயாரிப்பதற்கு ஏற்றதாக பஷ்மினா இழைகள் உள்ளன. இழைகளின் விட்டம் மிகக் குறைவாக இருப்பதால், பாஷ்மினாவை கையால் பதப்படுத்தி, சால்வைகள், மேலாடைகள், மறைப்புகள், அங்கிகள், ஸ்டோல்கள் போன்ற தயாரிப்புகளில் நெய்யப்படுகிறது. இருப்பினும், ஒரு முடிக்கப்பட்ட பஷ்மினா சால்வையின் தரம் இழை விட்டம் சார்ந்தது மட்டும் அல்ல ஆனால் கம்பளி கைவினைஞர்களின் திறன்களிலும் அது அமைந்துள்ளது. பஷ்மினா பொருட்கள் பெரும்பாலும் காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் தயாரிக்கப்படுகின்றன .

இன்று, "பாஷ்மினா" என்ற சொல் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இயற்கை அல்லது செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் பல மேலாடைகள் "பஷ்மினா" என்ற பெயரில் விற்கப்படுகின்றன, இது சந்தையில் குழப்பத்தை உருவாக்குகிறது. ஒரு உண்மையான பஷ்மினா சால்வையின் அதிக விலையானது, ஒவ்வொரு சால்வையையும் உருவாக்கும் நிபுணர் கைவினைத்திறன் மற்ரும் அரிதான பஷ்மினா கம்பளி, ஆகியவற்றைப் பொறுத்ததாகும் உயர் ரக சாங்தேங்கி இன ஆடுகளிலிருந்து பெற்படும் கம்பளியே காஷ்மீரி பஷ்மினா சால்வையில் பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலும் உலகளாவிய காஷ்மீர் சால்வை உற்பத்தியில் இந்த ஆட்டின் இனம் 0.1% க்கும் குறைவாகவே உள்ளது.[11]

உற்பத்தி[தொகு]

பஷ்மினாவுக்குப் பயன்படுத்தப்படும் ஆடுகள் தனது குளிர்கால மயிர்களைக் ஒவ்வொரு வசந்த காலத்திலும் உதிர்த்து விடுகின்றன இதனைக் கொண்டே பஷ்மினா தயாரிக்கப்படுகின்றன. ஒரு ஆடு சுமார் 80 கிராம் முதல் -170 கிராம் வரை (3–6 அவுன்ஸ்) நார்ச்சத்தை தனது மயிர்களில் கொண்டுள்ளது.

வசந்த காலத்தில் (முடி உதிர்ப்பருவம்), ஆடுகள் இயற்கையாகவே தங்கள் மென்மயிர்களைக் கொட்டுகின்றன, குளிர்காலத்தில் இம்மென்மயிர்கள் மீண்டும் வளர்கின்றன. இந்த மென்மயிர்கள் ஆடுகளை சீவுவதன் மூலம் சேகரிக்கப்படுகிறது, வெட்டுவதன் மூலம் அல்ல, மற்ற சிறந்த கம்பளிகளைப் போல. இமயமலையின் லடாக் பகுதியில் பஷ்மினா கம்பளி பாரம்பரியமாக தயாரிப்பவர்கள் சாங்பா என்று அழைக்கப்படும் மக்கள் ஆவர். இவர்கள் ஒரு நாடோடியின மக்களாவர். சாங்பா மக்கள் மற்றும் திபெத்தின் சாங்தாங் பீடபூமியில் வசிக்கின்றனர், இது கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு குளிர்கால வெப்பநிலை −40 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இந்த கடுமையான காலநிலைகளில் சாங்க்பா ஆடுகள் இறைச்சிக்காகவும், பாஷ்மினா ஆடுகள் கம்பளிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

மூல பஷ்மினா இழை காஷ்மீருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீவுதல் (அசுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு முடியை அகற்றுதல், மற்றும் இழைகளை சீரமைத்தல்) மற்றும் நூற்பு, நெசவு மற்றும் முடித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பாரம்பரியமாக சிறப்பு கைவினைஞர்கள் மற்றும் பெண்களால் கைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. பஷ்மினா துணி உற்பத்தியின் முக்கிய மையம் ஸ்ரீநகர் நகரின் பழைய மாவட்டத்தில் உள்ளது. ஒரு பாரம்பரிய பஷ்மினா ஸ்டோலை (70x200cm) உற்பத்தி செய்வதற்கான தோராயமான நேரம் 180 மணி நேரம் ஆகும்.

உலக காஷ்மீர் சால்வைகள் உற்பத்தியில் சீனா 70%, மங்கோலியா 20%, மீதமுள்ள 10% உற்பத்தி ஆப்கானித்தான்,ஆத்திரேலியா,இந்தியா. ஈரான்,நேபாளம், பாக்கிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, மத்திய ஆசியக் குடியரசுகள் மற்றும் பிற இடங்களில் உள்ளது. இந்த உற்பத்தியில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே மிகச்சிறந்த தரமான காஷ்மீர் தயாரிப்பு எனப்படும் பஷ்மினா ஆகும்.[12]

பாஷ்மினா தயாரிப்புகள்[தொகு]

பாஷ்மினா துணி ஒரு அடுக்கு
ஒரு காஷ்மீர் மனிதர் இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு சந்தையில் காஷ்மீரில் இருந்து ஒரு பஷ்மினா சால்வை விற்கிறார்.
ஊசி மற்றும் பட்டு நூல்களைப் பயன்படுத்தி கை எம்பிராய்டரி கொண்டு தயாரிக்கப்ப்பட்ட காஷ்மீரி பஷ்மினா சால்வை

குறிப்புகள்[தொகு]

 1. Franck, Robert R. (October 2001). Silk, Mohair, Cashmere and Other Luxury Fibres. Woodhead Publishing. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85573-540-7. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
 2. "Pashmina." The Oxford English Dictionary. 2nd ed. 1989.
 3. Ahmed, Monisha. The Politics of Pashmina: The Changpas of Eastern Ladakh. 
 4. Morse, Linda (October 2005). Luxury Knitting: The Ultimate Guide to Exquisite Yarns. Sterling Publishing. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931543-86-0. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
 5. Encyclopædia Britannica (2008). kashmir shawl.
 6. Shereza number (2004) Kashmir Academy Arts and Culture (edit.), Jeelani Allaie kashmeri
 7. UNESCO report 2014 by Jeelani Allaie
 8. Reis, José; Varela, Gonzalo (October 2013). "Can Tourism Encourage Better Export Performance and Diversification in Nepal?". The World Bank.
 9. Hamid Naseem Rafiabadi. Saints and Saviours of Islam.
 10. "Pashmina Technical Data – Department of Animal Husbandary, Government of Jammu and Kashmir". Archived from the original on 2018-01-04. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
 11. "Directorate of Sheep Husbandry, Kashmir Division, Government of Jammu & Kashmir". jksheephusbandrykashmir.nic.in. Archived from the original on 2018-01-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-09.
 12. Shakyawar, D B; Raja, A S M; Ajay, Kumar; Pareek, P K; Wani, S A. "Pashmina Fibre – Production, Characteristics and Utilization" (PDF). Indian Journal of Fibre and Textile Research. Indian Journal of Fibre and Textile Research. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015. Note this work uses the word pashmina to refer to cashmere in general.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஷ்மினா&oldid=3562460" இலிருந்து மீள்விக்கப்பட்டது