பழுப்புக் குறுமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பழுப்புக் குறுமீன் அல்லது பழுப்புக் குள்ளன் என்பது விண்மீன் வகைகளில் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்தது. அண்டத்தில் நெபுலா விண்மீன்கள் உருவாகியக் காலகட்டத்தில், சில விண்மீன்கள் உருவெடுக்கும் போது அது விண்மீன் ஆவதற்குத் தேவையான எடையை கிரகிக்காமல் போயிருக்கும். அதனால் அதில் அணுச்சேர்க்கை நடக்காமல் நாளடைவில் பழுப்பு நிறத்தில் மாறுவதால் அதைப் பழுப்புக் குறுமீன் என்கிறார்கள்.

வியாழன்[தொகு]

சூரியனில் 8 சதவீதம் கூட எடையிலா விண்மீன்கள் பழுப்புக் குறுமீனாக உருவெடுக்கும். வியாழன் (கோள்) ஒரு பழுப்புக் குறுமீனாக மாற எல்லாத் தகுதிகளையும் ஆரம்பத்தில் கொண்டிருந்தது. ஆனால் அது சூரிய மண்டல ஈர்ப்புவிசை ஆதிக்கத்தில் இருந்ததால் அது ஒரு கோளாகவே இருக்கிறது.

கண்டறிந்த முறை[தொகு]

கி.பி. 1930ல் இரும விண்மீன்களுள் ஒன்றான ஒரு ஒளி மங்கிய விண்மீன் தன்னைச் சுற்றி வேறொரு பொருளைச் சுற்ற வைப்பதை அறிந்த வானியலார், அவைகளைத் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த போது ஒரு குறுமீன் அப்பாதையில் குறுக்கிட்டது. அதிலிருந்தே அவ்விண்மீன் ஒரு பழுப்புக் குறுமீன் என வானியலார் ஒரு முடிவிற்கு வந்தனர்.

மூல நூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்புக்_குறுமீன்&oldid=1832727" இருந்து மீள்விக்கப்பட்டது