நீலக் குறுமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலக் குறுமீன் (blue dwarf) அல்லது நீலக் குறளிஎன்பது ஒரு செங்குறுமீன் தன்நீரக எரிபொருள் தீர்ந்ததும் உருமாறும் புதிய வடிவமாகக் கருதப்படும் விண்மீனின் வகையாகும். இது நிலவும் விண்மீன் வகையல்ல. எதிர்காலத்தில் உருவாகும் என கோட்பாட்டின்படி முன்கணித்த விண்மீன் வகையாகும். செங்குறுமீன்கள் மிக மெதுவாக நீரக அணுக்கருப் பிணைவை நிகழ்த்தி அகட்டில் உள்ள நீரகத்தை மட்டுமன்றி முழுப்பகுதி நீரகத்தையும் வெப்பச் சுழற்சியால் எரிக்க தேவையான கால அளவுக்கு நம் புடவி போதுமான அகவை முதிராததால் இதுநாள்வரை நீலக் குறுமீன் ஏதும் உருவாகவில்லை. ஆனால் அவை எதிர்காலத்தில் உருவாகும் எனக் கோட்பாட்டியலாக முன்கணிக்கப்பட்டுள்ளது.[1]

அகவை முதிர முதிர, விண்மீன்கள் ஒளிர்மையில் கூடுவதால் ஆற்றலை வேகமாக கதிர்வீச வேண்டும். அப்போது தான் அவை சமனிலையில் இருக்க முடியும்.. செங்குறுமீனைவிடப் பெரிய விண்மீன்கள் தம் அளவைப் பெருக்கிக் கூடுதல் மேற்பரப்புள்ள செம்பெருமீன்களாகி இப்பணியை நிறைவேற்றும். ஆனால் 0.25 சூரியப் பொருண்மையினும் சிறிய செங்குறுமீன்கள் விரிவடையாமல், தம் கதிர்வீசும் வீத்த்தை மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்துவதால் கூட்டுகின்றன. இதனால் அவை நீல விண்மீன் ஆகின்றன. வெப்பநிலை உயரும்போது செங்குறுமீன்களின் அடுக்குகள் ஒளித்தடுக்க முடியாத்தால் இந்நிலை ஏற்படுகிறது.[1]

நீரக எரிபொருள் முழுவதும் தீர்ந்ததும் நீலக் குறுமீன்கள் வெண்குறுமீனாகப் படிமலரும்.[1] அதே போல வெண் குறுமீன் அறுதியாகக் கருப்புக் குறுமீன் ஆக மாறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Adams, F. C.; P. Bodenheimer; G. Laughlin (2005). "M dwarfs: planet formation and long term evolution". Astronomische Nachrichten 326 (10): 913–919. doi:10.1002/asna.200510440. Bibcode: 2005AN....326..913A. http://adsabs.harvard.edu/abs/2005AN....326..913A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலக்_குறுமீன்&oldid=2079914" இலிருந்து மீள்விக்கப்பட்டது