செங்குறுமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன்மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது.

இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான வகையாக செங் குறுமீன் விளங்குகின்றது. சூரியனுக்கு அண்மையில் உள்ள விண்மீனான புரோக்சிமா சென்டோரி ஒரு செங்குறுமீன் ஆகும். குறைவான ஒளிர்வளவின் காரணமாக இவை இலகுவில் தென்படாது. புவியில் இருந்து எந்தவொரு செங் குறுமீனையும் வெற்றுக்கண்ணால் நோக்க முடியாது.[1]

விண்மீன் மாதிரிகளில் இருந்து சூரியனின் நிறையிலும் 35% குறைவான சிவப்பு குள்ளர்கள் முழுமையான வெப்பச்சலனத்தைக் கொண்டுள்ளன என்று அறியமுடிகின்றது. [2] எனவே ஐதரசனின் வெப்ப கருப்பிணைவில் இருந்து உருவாகும் ஹீலியம் மாற்றமின்றி விண்மீனுக்குள் மீள்கலப்புக்குட்பட்டுக் கொண்டே இருக்கும், இதனால் விண்மீனின் கரு மையப் பகுதியில் உருவாக்கம் நடைபெறுவது தவிர்க்கப்படுகின்றது. இக்காரணத்தால் செங்குள்ளிகள் மிகவும் மெதுவான வேகத்திலேயே உருவாகுகின்றன; இவற்றின் எரிபொருள் வற்றும்வரை சில நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு நிரந்தரமான ஒளிர்வையும் நிறமாலை வகுப்பையும் கொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் பேரண்டத்தின் குறைவான வயது காரணமாக செங் குறுமீன்களின் பிந்திய படிநிலை தற்போதைய காலத்தில் காணமுடியாதுள்ளது என நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Brightest Red Dwarf", by Ken Croswell (Accessed 6/7/08)
  2. Reiners, A.; Basri, G. (March 2009). "On the magnetic topology of partially and fully convective stars". Astronomy and Astrophysics 496 (3): 787–790. doi:10.1051/0004-6361:200811450. Bibcode: 2009A&A...496..787R. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குறுமீன்&oldid=1580315" இருந்து மீள்விக்கப்பட்டது