பழுப்புக் கன்ன புல்வெட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Alcippe|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பழுப்புக் கன்ன புல்வெட்டா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Alcippe
இனம்:
இருசொற் பெயரீடு
Alcippe poioicephala
(ஜெர்டன், 1841)

பழுப்புக் கன்ன புல்வெட்டா அல்லது பழுப்புக் கன்ன அல்சிப்பே (brown-cheeked fulvetta or brown-cheeked alcippe) ( புல்வெட்டாக்கள் இந்த இனத்துடன் நெருங்கிய தொடர்புடையவை அல்ல [2] ) என்பது அல்சிப்பீடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். இது முன்பு கலகலப்பான் சிலம்பன் என்று அழைக்கப்பட்டது. [3]

சில தொடர்பில்லாத பறவையினங்கள் அல்சிப்பே பேரினத்தில் இருந்து நீக்கப்பட்டபிறகு இந்த இனம் பேரினத்தில் தக்கவைக்கப்பட்டது. இதன் நெருங்கிய உறவினர்களாக அநேகமாக பழுப்பு புல்வெட்டா மற்றும் கரும் புருவ புல்வெட்டா போன்றவை உள்ளன. ஜாவான் புல்வெட்டா மற்றும் நேபாள புல்வெட்டா ஆகியவையும் இந்தக் குழுவைச் சேர்ந்தவையாக இருக்கலாம். [4]

பழுப்புக் கன்ன புல்வெட்டா வங்காளதேசம், இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்து வசிக்கும் பறவையாகும். இதன் வாழிடம் ஈரப்பதமான காடுகலும், புதர்க்காடுகலும் ஆகும். இந்த இனம், பெரும்பாலான சிலம்பன்களைப் போலவே, வலசை போவதில்லை. இவை குறுகிய வட்டமான இறக்கைகளைக் கொண்டவை. அவ்வளவு சிறப்பாக பறக்கக் கூடிய திறன் கொண்டவை அன்று.

இந்த பாப்லர் தனது கூட்டை மரங்களில் அடர்த்தியான இலைகளின் மறைவில் கட்டுகிறது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகிறது.

பழுப்புக் கன்ன புல்வெட்டா அதன் நீளமான வால் உட்பட 15 செ.மீ. நீளம் உடையது. இதன் தலையும் பிடரியும் பழுப்புத் தோய்ந்த சாம்பல் நிறம். உடலின் மேற்பகுதி ஆலிவ் தோய்ந்த பசுமை பழுப்பு.

பழுப்புக் கன்னப் புல்வெட்டா குறுகிய, கருமையான அலகைக் கொண்டுள்ளது. இதன் முதன்மை உணவு பூச்சிகள் மற்றும் தேன் ஆகும். இது அடர்த்தியான தாவரங்களில் விரும்பி வாழ்வதால் இதைக் கவனிப்பது கடினம். இவை ஓயாது கலகலப்பாகக் கத்தியபடி ஆங்காங்கு தாவித் திரியும்.

கூடு கட்டுதல்[தொகு]

பழுப்புக் கன்னப் புல்வெட்டா சனவரி முதல் சூன் வரை கூடு கட்டுகின்றன. அச்செய்கை சனவரி-பிப்ரவரி மாதங்களில் உச்சத்தில் இருக்கும். அனூப் தாஸ் மற்றும் விஜயன் ஆகியோர் நடத்திய ஆய்வில், 50,000 சதுர மீட்டரில் மொத்தம் 38 கூடுகள் கண்டறியப்பட்டன. இதன் கூடுகளானது பாசி, வேர்கள், மரக்காளான், இலை, புல் ஆகியவனைக் கொண்டு ஒழுங்கற்ற கோப்பை வடிவிலானதாக இருந்தன. கூடுகள் தரையில் இருந்து சராசரியாக 68.21 செமீ உயரத்தில் சிறு கிளைகளில் அமைக்கபட்டிருந்தன. சராசரியாக கூட்டின் அகலம் 91.8 மிமீ என்றும் ஆழம் 48.7 மிமீ. என்றும் இருக்கும். [5]

இது இரண்டு முதல் மூன்று முட்டைகளை இடும். அடைகாக்கும் காலம் 10 ± 2 நாட்கள். மேலும் கூடு கட்டும் காலம் 12 ± 2 நாட்கள். வெற்றிகரமான குஞ்சு பொரிப்பு 55% ஆகவும், கூட்டில் வளர்ந்து ஆளாகும் விகிதம் 32% ஆகவும் இருந்தது. கூடு கட்டுவதற்கு மிகவும் விருப்பமான தாவரங்களாக லாசியன்தஸ் சிலியடஸ் (36%) புதர்கள், அதைத் தொடர்ந்து சப்ரோஸ்மா ஃபிராக்ரான்ஸ் (27%) மற்றும் தொட்டேயா சிலிகோசா (23%) போன்றவை உள்ளன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Alcippe poioicephala". IUCN Red List of Threatened Species 2017: e.T22716633A111108243. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22716633A111108243.en. https://www.iucnredlist.org/species/22716633/111108243. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Brown-cheeked Fulvetta aka Brown-cheeked Alcippe".
  3. "Brown-cheeked Fulvetta (Alcippe poioicephala)".
  4. Pasquet et al. 2006
  5. Brown-cheeked Fulvetta. Cornell Lab of Ornithology. doi:10.2173/bow.brcful1.01. https://birdsoftheworld.org/bow/species/brcful1/cur/introduction. பார்த்த நாள்: 31 July 2021.