பல்லேகலை
பல்லேகலை | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 60622[1] |
பல்லேகலை (Pallekele, சிங்களம்: පල්ලෙකැලේ) எனப்து இலங்கையின் கண்டி நகரின் ஒரு புறநகராகும். கண்டி நகரில் இருந்து 8 கிமீ தூரத்த்கில் அமைந்துள்ளது.
இங்கு முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி திரித்துவக் கல்லூரியின் ரக்பி விளையாட்டரங்கு, இலங்கை பன்னாட்டு பௌத்த கல்விக்கழகம் ஆகியன அமைந்துள்ளன. இங்குள்ள ஆயோஜன கம அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பிரபலமானது .இவ்வாலயம் மிக பிரம்மாண்ட திருக்கோயிலாக திகழ்கின்றது. அத்துடன் ஆயோஜனகம பாரதி விளையாட்டு கழகம் உள்ளது. இப்பிரதேசத்து பாடசாலைகள் க.வ. வாணி தமிழ் வித்தியாலயம் மற்றும் க. வ. விவேகநந்தா தமிழ் மகா வித்தியாலயம் போன்றவை உள்ளது .மேலும் ஆயுா்வேத வைத்தியசாலை மற்றும் மத்திய மாகாண சபை கட்டிட தொகுதி, இப்பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்கள் ஆகும். பல்லேகலை பல்லின மக்கள் வாழும் பிரேதசம் ஆகும். இங்கு பெரும்பான்மையாக தமிழா்களே வாழ்கின்றனா்.