பல்பீர் சிங் சித்து
பல்பீர் சிங் சித்து Balbir Singh Sidhu | |
---|---|
பஞ்சாப், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் | |
பதவியில் 16 மார்ச்சு 2018 – 18 செப்டம்பர் 2021 | |
முதல் அமைச்சர் | அமரிந்தர் சிங் |
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் 2007–2012 | |
முன்னையவர் | பிர் தேவிந்தர் சிங் |
பின்னவர் | இயக் மோகன் சிங் கங்கு |
தொகுதி | கரார் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2012 – 10 மார்ச்சு 2022 | |
பின்னவர் | குல்வந்து சிங் |
தொகுதி | எசு.ஏ.எசு. நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1, 1959 தபா மண்டி, பர்னாலா, பஞ்சாப் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி (சூன் 2022 முதல் 13 அக்டோபர் 2023 வரை ) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (தற்பொழுது) |
துணைவர் | தல்சித் கவுர் |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 1 மகள் |
பெற்றோர் | எசு. இயங் சிங் மற்றும் இரஞ்சித் கவுர் |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
பல்பீர் சிங் சித்து (Balbir Singh Sidhu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பஞ்சாப் சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினராகவும் பஞ்சாப் அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1] [2]
தொழில்
[தொகு]பல்பீர் சிங் சித்து 1990 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். பஞ்சாப் இளைஞர் காங்கிரசு குழுவின் இணைச் செயலாளராகவும், பின்னர் துணைத் தலைவராகவும், மூத்த துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பஞ்சாபில் காங்கிரசு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இவர் கரார் சட்டமன்றத் தொகுதியில் சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் இயசுசித்து சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார். [3] மீண்டும் எசு.ஏ.எசு நகர் சட்டமன்றத் தொகுதியில் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [4]
2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று சண்டிகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இராச் குமார் வெர்கா, குர்ப்ரீத் சிங் கங்கர், சுந்தர் சாம் அரோரா மற்றும் பலருடன் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Members Official website of Punjab Legislative Assembly. 24 March 2020.
- ↑ Council of Ministers of Punjab punjab.gov.in. 24 March 2020.
- ↑ Kharar Assembly constituency www.elections.in. Retrieved 24 March 2020.
- ↑ S A S nagar Assembly election resultuniversity.com.
- ↑ "Tip of iceberg: Captain Amarinder Singh as Congress logs 5 defections in Punjab".