உள்ளடக்கத்துக்குச் செல்

பலேடியம்(II) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம்(II) அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பலேடியம்(II) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பலேடியம் டையசிட்டேட்டு
எக்சாகிசு(அசிட்டேட்டோ)டிரைபல்லேடியம்
பிசு(அசிட்டேட்டோ)பலேடியம்
இனங்காட்டிகள்
3375-31-3 Y
ChemSpider 146827 Y
InChI
  • InChI=1S/2C2H4O2.Pd/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2 Y
    Key: YJVFFLUZDVXJQI-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C2H4O2.Pd/c2*1-2(3)4;/h2*1H3,(H,3,4);/q;;+2/p-2
    Key: YJVFFLUZDVXJQI-NUQVWONBAH
யேமல் -3D படிமங்கள் Image

அயன வடிவம்
Image coordination form (cyclic trimer)

பப்கெம் 167845
வே.ந.வி.ப எண் AJ1900000
  • [Pd+2].[O-]C(=O)C.[O-]C(=O)C அயன வடிவம்
  • [o+]0c(C)o[Pd-2]3([o+]c(C)o1)[o+]c(C)o[Pd-2]1([o+]c(C)o2)[o+]c(C)o[Pd-2]02[o+]c(C)o3 coordination form (cyclic trimer)
பண்புகள்
Pd(CH3COO)2
வாய்ப்பாட்டு எடை 224.50 கி/மோல்
தோற்றம் பழுப்பு மஞ்சள் திண்மம்
அடர்த்தி 2.19 கி/செ.மீ3
உருகுநிலை 205 °C (401 °F; 478 K) சிதைவடையும்
கொதிநிலை சிதைவடையும்
குறைவு
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றை சாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
சதுரத் தளம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கற்றது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
R-சொற்றொடர்கள் 41
S-சொற்றொடர்கள் 24/25
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பலேடியம்(II) குளோரைடு]]
ஏனைய நேர் மின்அயனிகள் பிளாட்டினம்(II) அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பலேடியம்(II) அசிட்டேட்டு (Palladium(II) acetate) என்பது [Pd(O2CCH3)2]n அல்லது [Pd(OAc)2]n என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். பலேடியத்தின் அசிட்டேட்டு உப்பு என்றும் இதை வகைப்படுத்தலாம். இதனை ஒத்த பிளாட்டினம் சேர்மத்தை விட இது அதிக வினைத்திறன் கொண்டதாக செயல்படுகிறது. வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள n இன் மதிப்பிற்கேற்ப பலேடியம்(II) அசிட்டேட்டு சேர்மம் கரிமக் கரைப்பான்கள் பலவற்றில் கரைகிறது. கரிம வேதியியல் வினைகளில் பொதுவாக ஒரு வினையூக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது.

கட்டமைப்பு

[தொகு]

பலேடியம் அணுக்கள் மற்றும் அசிடேட்டு ஈந்தணைவிகள் 1: 2 என்ற விகிதவியல் விகிதத்துடன், இச்சேர்மம் மூலக்கூறு மற்றும் பல்பகுதிய கட்டமைப்பு வடிவங்களாக உள்ளது. பலேடியம் இரு வடிவங்களிலும் தோராயமான சதுரத்தள ஒருங்கிணைப்பை ஏற்றுள்ளது.

1965 ஆம் ஆண்டில் வில்கின்சன் மற்றும் சக ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு, பின்னர் 1970 ஆம் ஆண்டில் சிகேப்சுக்கி மற்றும் சுமார்ட்டு ஆகியோரால் ஒற்றை படிக எக்சுகதிர் வளைவு சோதனையால் வகைப்படுத்தப்பட்டது, பலேடியம்(II) அசிடேட்டு ஒருசெம்பழுப்பு நிறம் கொண்ட திண்மமாகும். பலேடியம் அசிட்டேட்டு சேர்மம் ஒற்றை சாய்வு தகடுகளாகப் படிகமாக்குகிறது. மேலும் பலேடியம் அசிட்ட்டேட்டு முப்படி கட்டமைப்பில் உள்ளது. பலேடியம் அணுக்களால் ஆன ஒரு சமபக்க முக்கோண அமைப்பைக் கொண்டு , ஒவ்வொரு இணையும் ஒரு பட்டாம்பூச்சி இணக்கத்தில் இரண்டு அசிடேட்டு குழுக்களுடன் இணைக்கப்பட்டு பாலமாகின்றன [1][2].

பலேடியம்(II) அசிடேட் வெளிர் இளஞ்சிவப்பு நிற வடிவமாகவும் தயாரிக்கப்படலாம்.. எக்சுகதிர் தூள் விளிம்பு வளைவு ஆய்வின்படி இந்த வடிவம் பல்பகுதியங்களை கொண்டிருக்கிறது [3].

தயாரிப்பு

[தொகு]

முப்படி வடிவ பலேடியம் அசிடேட்டை மீத்தூய பலேடியம் உலோகத்துடன் அசிட்டிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தின் கலவையை சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். கலப்பு நைட்ரிடோ-அசிடேட்டால் (Pd 3 (OAc) 5 NO 2 ) ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க கூடுதலாக பல்லேடியம் உலோகம் அல்லது நைட்ரசன் வாயு ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது [4][5].

Pd + 4 HNO3 → Pd(NO3)2 + 2 NO2 + 2 H2O
Pd(NO3)2 + 2 CH3COOH → Pd(O2CCH3)2 + 2 HNO3.

முப்படி அசிட்டேட்டுடன் தொடர்புடைய, கலப்பு நைட்ரேட்டு-அசிடேட்டு மாறுபாடு வடிவம் வெவ்வேறு கரைதிறன் மற்றும் வினையூக்க செயல்பாட்டைக் கொண்டுள்ளது. பல்லேடியம்(II) அசிடேட்டின் நம்பகமான பயன்பாட்டிற்கு இந்த தூய்மையற்ற தன்மை யை தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கலாம். பல்லேடியம்(II) புரோப்பியோனேட்டு இதே முறையில் தயாரிக்கப்படுகிறது; பல்லேடியம்(II) அசிடேட்டுடன் பொருத்தமான கார்பாக்சிலிக் அமிலத்தை சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் பிற கார்பாக்சிலேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன [6]. அதேபோல், பல்லேடியம்(II) அசிடேட்டை மற்ற பலேடியம்(II) கார்பாக்சிலேட்டுகளை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட பிற கார்பாக்சிலேட்டிலிருந்து தொடங்கும் இந்த ஈந்தணைவி பரிமாற்றம் நைட்ரோ அசுத்தத்திலிருந்து விடுபட்ட பல்லேடியம்(II) அசிடேட்டை தயாரித்து ஒருங்கிணைக்க ஒரு மாற்று தயாரிப்பு வழியாகும் [6].

ஆல்ககால்களுடன் சேர்த்து சூடாக்கும்போது, அல்லது பிற கரைப்பான்களுடன் சேர்க்கப்பட்டு நீண்ட நேரம் கொதிக்கும்போது, பலேடியம்(II) அசிடேட்டு பலேடியமாக சிதைகிறது.

வினையூக்கி

[தொகு]

பலேடியம் அசிடேட்டு பல கரிம வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகும், குறிப்பாக ஆல்க்கீன்கள், டையீன்கள், மற்றும் ஆல்க்கைல், அரைல் மற்றும் வினைல் ஆலைடுகள் வினையில் ஈடுபட்டு சேர்க்கைப் பொருள்களை உருவாக்குகின்றன [7].

பலேடியம்(II) அசிடேட்டு மூலம் வினையூக்கப்படுத்தப்பட்ட வினைகள்:

•வினைலேற்றம் : எக் வினை மற்றும் தொடர்புடைய செயல்முறைகள் உதாரணமாகும் [8].

•வளையமற்ற டையீன்களின் மறுசீரமைப்பு வினை: கோப் மறுசீரமைப்பு வினை இதற்கு எடுத்துக்காடாகும்.

•கார்பனைலேற்ற வினைகள்: எடுத்துக்காட்டாக, அரைல் அயோடைடுகள், கார்பன் மோனாக்சைடு, ஒரு ஆல்கககால் அல்லது பினால் ஆகியவற்றிலிருந்து எசுதர்களை உருவாக்குதல் [9].

•பொட்டாசியம் பார்மேட்டு மூலம் ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களின் ஒடுக்க அமீனேற்ற வினை [10].

•வேக்கர் செயல்முறை : எத்திலீனை நீரால் ஆக்சிசனேற்றம் செய்து அசிட்டால்டிகைடாக மாற்றும் வினை (பாலி (வினைல் அசிடேட்டு)க்கு முன்னோடிச் சேர்மம்).

•புச்வால்ட்டு -ஆர்ட்விக் அமீனேற்றம் : அரைல் ஆலைடுகள், ஆல்க்கைல், அரைல் அமீன்களுடன் ஈடுபடும் வினை [11][12].

•அரைல் புரோமைடுகளை டிட்ரைமெத்தில் சிலேன்களாக மாற்றும் வினை.

பலேடியம் அசிட்டேட்டின் மின்னணு பண்புகள் அரைல் புரோமைடுகளின் மின்னணு பண்புகளுடன் ஒத்துப்போகும். மற்ற தயாரிப்பு முறைகளைப் போல இம்முறைக்கு அதிக அழுத்தக் கருவிகள் அவசியமில்லை [13].

பலேடியம் சேர்மங்களின் முன்னோடி

[தொகு]

பீனைல் பலேடியம் அசிட்டேட்டு போன்ற பிற பலேடியம் சேர்மங்களைத் தயாரிக்க பலேடியம் அசிட்டேட்டு ஒரு முன்னோடிச் சேர்மமாக பயன்படுகிறது :[14].அல்லைல் ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாக மாற்றும் வினையில் பீனைல் பலேடியம் பெரிதும் உதவுகிறது.

Hg(C6H5)(OAc) + Pd(OAc)2 → Pd(C6H5)(OAc) + Hg(OAc)2
எர்மான் வினையூக்கியின் கட்டமைப்பு

.[15]]]

பலேடியம்(II) அசிட்டேட்டு அசிட்டைல் அசிட்டோனுடன் வினைபுரிந்து பலேடியம்(II)பிசு(அசிட்டைல் அசிட்டோனேட்டு) அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.

ஒளி அல்லது வெப்பம் பலேடியம்(II) அசிட்டேட்டை ஒடுக்கமடையச் செய்து மெல்லிய அடுக்குகளாக பலேடியத்தையும் அதிலிருந்து நுண்கம்பிகள் மற்றும் கூழ்மங்களை தருகிறது [4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. T. A. Stephenson; S. M. Morehouse; A. R. Powell; J. P. Heffer; G. Wilkinson (1965). "667. Carboxylates of palladium, platinum, and rhodium, and their adducts". Journal of the Chemical Society (Resumed): 3632. doi:10.1039/jr9650003632. 
  2. Skapski, A C.; M. L. Smart (1970). "The Crystal Structure of Trimeric Palladium(II) Acetate". J. Chem. Soc. D (11): 658b–659. doi:10.1039/C2970000658b. 
  3. Kirik, S.D.; Mulagaleev, S.F.; Blokhin, A.I. (2004). "[Pd(CH 3 COO) 2 ] n from X-ray powder diffraction data". Acta Crystallogr. C 60 (9): m449–m450. doi:10.1107/S0108270104016129. 
  4. 4.0 4.1 Bakhmutov, V. I.; Berry, J. F.; Cotton, F. A.; Ibragimov, S.; Murillo, C. A. (2005). "Non-Trivial Behavior of Palladium(II) Acetate". Dalton Transactions (11): 1989–1992. doi:10.1039/b502122g. பப்மெட்:15909048. 
  5. "High Purity Homogeneous Catalyst" (PDF). Engelhard. September 2005. Archived from the original (PDF) on 17 March 2006. பார்க்கப்பட்ட நாள் 24 February 2006.
  6. 6.0 6.1 Ritter, Stephen K. (May 2, 2016). "Chemists introduce a user's guide for palladium acetate". Chemical & Engineering News 94 (18): 20–21. 
  7. Suggs, J W. "Palladium: Organometallic Chemistry." Encyclopedia of Inorganic Chemistry. Ed. R B. King. 8 vols. Chichester: Wiley, 1994.
  8. Keary M. Engle, Navid Dastbaravardeh, Peter S. Thuy-Boun, Dong-Hui Wang, Aaron C. Sather, Jin-Quan Yu (2015). "Ligand-Accelerated ortho-C-H Olefination of Phenylacetic Acids". Org. Synth. 92: 58. doi:10.15227/orgsyn.092.0058. 
  9. Nikitin, Kirill V.; Andryukhova, N.P.; Bumagin, N.A.; Beletskaya, I.P. (1991). "Synthesis of Aryl Esters by Pd-catalysed Carbonylation of Aryl Iodides". Mendeleev Communications 1 (4): 129–131. doi:10.1070/MC1991v001n04ABEH000080. 
  10. Basu, B., Satadru J., Mosharef H. B., and Pralay D. (2003). "A Simple Protocol for the Direct Reductive Amination of Aldehydes and Ketones Using Potassium Formate and Catalytic Palladium Acetate". ChemInform 34 (30): 555–557. doi:10.1002/chin.200330069. 
  11. Linli He, Shawn P. Allwein, Benjamin J. Dugan, Kyle W. Knouse, Gregory R. Ott, Craig A. Zificsak (2016). "Synthesis of α-Carboline". Org. Synth. 93: 272. doi:10.15227/orgsyn.093.0272. 
  12. "Buchwald-Hartwig Cross Coupling Reaction". Organic Chemistry Portal.
  13. Gooben, L J. "Research Area "New Pd-Catalyzed Cross-Coupling Reactions"" 28 Feb. 2006<http://www.mpi-muelheim.mpg.de/kofo/bericht2002/pdf/2.1.8_gossen.pdf> பரணிடப்பட்டது சூலை 12, 2007 at the வந்தவழி இயந்திரம்.
  14. Richard F. Heck. "Aldehydes from Allylic Alcohols and Phenylpalladium Acetate: 2-Methyl-3-Phenylpropionaldehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0815. ; Collective Volume, vol. 6, p. 815
  15. Herrmann, W. A.; Brossmer, C.; Reisinger, C.-P.; Riermeier, T. H.; Öfele, K.; Beller, M. (1997). "Palladacycles: Efficient New Catalysts for the Heck Vinylation of Aryl Halides". Chemistry – A European Journal 3 (8): 1357–1364. doi:10.1002/chem.19970030823. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(II)_அசிட்டேட்டு&oldid=2869132" இலிருந்து மீள்விக்கப்பட்டது