பரோன் பட்டாக்கத்தி பாம்பு
பரோன் பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. பரோனி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் பரோனி (எம். ஏ. சுமித், 1916) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஒலிகோடான் பரோனி (Oligodon barroni) அல்லது பரோன் பட்டாக்கத்தி பாம்பு என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் தென்கிழகாசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][2]
சொற்பிறப்பியல்
[தொகு]இதன் சிற்றினப் பெயர், பரோனி, பி. ஏ. ஆர். பரோன் நினைவாக, பரோன் இச்சிற்றின நிறைவகை உட்பட முதல் மூன்று மாதிரிகளைச் சேகரித்ததற்காக இடப்பட்டது.[3]
புவியியல் வரம்பு
[தொகு]ஓ. பரோனி கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1]
வாழ்விடம்
[தொகு]ஓ. பரோனியின் இயற்கையான வாழிடம் காடுகளாகும். இது 300 முதல் 1,000 மீ உயரப் பகுதிகளில் காணப்படுகிறது.[1]
விளக்கம்
[தொகு]ஓ. பரோனி 40 செ. மீ. மொத்த நீளத்தை அடையலாம். முதுகெலும்பு செதில்கள் 17 வரிசைகளில் உடலின் மையப்பகுதிகளில் அமைந்துள்ளன.[2]
உணவு
[தொகு]ஓ. பரோனி முக்கியமாகச் சிறிய அரணை மற்றும் பிற ஊர்வனவற்றின் முட்டைகளை உணவாகக் கொள்கிறது.[1]
இனப்பெருக்கம்
[தொகு]ஓ. பரோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Thy, N.; Nguyen, T.Q.; Chan-Ard, T.; Vogel, G. (2012). "Oligodon barroni". IUCN Red List of Threatened Species 2012: e.T191934A2017565. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T191934A2017565.en. https://www.iucnredlist.org/species/191934/2017565. பார்த்த நாள்: 25 September 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Oligodon barroni at the Reptarium.cz Reptile Database
- ↑ Beolens B, Watkins M, Grayson M (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Oligodon barroni, p. 18).
மேலும் வாசிக்க
[தொகு]- Tanya Chan-ard, Jarujin Nabhitabhata, John W. K. Parr. (2015). A Field Guide to the Reptiles of Thailand. New York: Oxford University Press. 352 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199876181.
- Smith MA. (1916). "Descriptions of Three New Lizards and a New Snake from Siam". Journal of the Natural History Society of Siam 2 (1): 44–47. (Simotes barroni, new species, pp. 46–47).
- Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Oligodon barroni, new combination, pp. 210–211, Figure 68).