பருமலை வலிய பனையன்னர்காவு தேவி கோயில்
பருமலை வலிய பனையன்னர்காவு தேவி கோயில் பத்ரகாளிக்கும் சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோவில் ஆகும். இக்கோயில்இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பருமலையில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1] கேரளாவில் உள்ள மூன்று முக்கிய பத்ரகாளி கோவில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். மலபாரில் உள்ள திருமந்தம்குன்று கோயில், கொச்சியில் உள்ள கொடுங்கல்லூர் கோயில் மற்றும் திருவிதாங்கூரில் உள்ள பனையன்னர்காவு கோயில் ஆகிய மூன்று கோயில்களும் சற்றொப்ப சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. [2] திரேதா யுகத்தில் துர்வாச முனிவர் மற்றும் நாரதர் ஆகியோரால் நிறுவப்பட்ட சிவன் மற்றும் தேவி சிலையை பரசுராம முனிவர் நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். [3]
கோயில், கட்டிடக்கலை
[தொகு]இக்கோயில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றியும் உயரமான பனைமரங்களும் அழகிய பசுமையான காடுகளும் காணப்படுகினறன. கோயிலின் மேற்குப் பகுதியில் பம்பா நதி ஓடுகிறது. கோயில் கட்டிடக்கலையை உற்றுநோக்கும்போது சிவன் கோயில்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன எனலாம். கோயில் வளாகம் வடக்கு நோக்கி உள்ளது.
மூலவர்
[தொகு]கோயிலின் மூலவர் சிவனமாக இருப்பினும் சப்த மாதர் மூலவருக்குரிய முதன்மை இடத்தைப் பெறுகின்றனர். தினசரி பூஜைகளில் ஆளும் சக்தியாக சப்த மாதா வழிபடப்படும் கேரளாவில் உள்ள கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். [4]
கோயில் சுவரோவியங்கள்
[தொகு]இக்கோயிலில் காணப்படுகின்ற சுவரோவியங்களின் தொகுப்பு இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றதாகும். நுணுக்கத்திற்கும், வண்ணக் கலவைக்கும், தெளிவான கோட்டு வடிவத்திற்கும் அது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பினும் இந்த ஓவியத்தொகுப்பு இரு நிலைகளில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. செவ்வக வடிவ மூலவர் சன்னதியை ஒட்டியுள்ளவை ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவையாகும். பின்னர் உள்ள, சதுர வடிவ சன்னதியைச் சேர்ந்த ஓவியங்கள் பின்னர் வடிக்கப்பட்டவையாகும். ஒடநாட்டின் கடைசி மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்த ஓவியங்கள் தீட்டும் பணி நிறைவுற்றதாக நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில், வைணவ பழக்கவழக்கங்களும், தூய்மையான வழிபாட்டு முறையும் இங்கு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. [5]
மேலும் காண்க
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]-
கருவறை (மகாகாளி)
-
வடக்குத் திருச்சுற்று (பத்ரகாளி)
-
கருவறை (சிவன்)
-
மேற்குத் திருச்சுற்று (சிவன்)
-
கிழக்குத் திருச்சுற்று (மகாகாளி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pilgrimage to Temple Heritage.
- ↑ Aithihyamala (Malayalam).
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
- ↑ Diamond, Books (2004). Durga (The Universal Mother). 1 (Issue No. 1 ed.). X-30, Okhla Industrial area, Phase-II, New Delhi-110020, India: Diamond Pocket books (Pvt) Ltd. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128806100.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ "Mathrubhumi Daily News: Panayannarkkavu Murals".