பயாக் செம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயாக் செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. chalybeus
இருசொற் பெயரீடு
Centropus chalybeus
(சால்வதோரி, 1875)

பயாக் செம்பகம் (Biak coucal-சென்ட்ரோபசு சாலிபியசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

பயாக் தீவில் அதிகம் அறியப்படாத, நடுத்தர அளவிலான செம்பகம் இது. இதனுடையுஅ அனைத்து இறகுகளும் கருப்பு நிறமுடையன. தனித்துவமான மஞ்சள் கருவிழி, நேரான அலகு மற்றும் கடுமையான தோற்றம் கொண்ட முகமுடையது. அடர்ந்த காடுகளில் அனைத்து மட்டங்களிலும் இரண்டாம் நிலை வாழ்விடங்களில் காணப்படுகிறது. பியாக்கில் காணப்படும் ஒரே செம்பகச் சிற்றினம் இதுவாகும்.[2]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாக்_செம்பகம்&oldid=3635023" இலிருந்து மீள்விக்கப்பட்டது