பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Theni.M.Subramani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


வருக!--செல்வா 05:32, 14 டிசம்பர் 2008 (UTC)

ஒரு கேள்வி ஒரு வேண்டுகோள்[தொகு]

இல்லத்துப்பிள்ளைமார் என்னும் கட்டுரையையும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கட்டுரையையும் இதே போல வேறுபல கட்டுரைகளையும் நீங்கள் அண்மையில் இங்கு இட்டிருப்பதாகத் தோன்றுகின்றது. நீங்கள்தானா அது? என் கணிப்பு தவறாக இருந்தால் மன்னிக்கவும். முத்துக்கமலம் இணைய இதழுக்கும் மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் எல்லாவற்றுக்கும் இணைப்பு தந்திருப்பதாகவும் உணருகின்றேன். ஸ்ரீ நாராயணகுரு போன்ற பல கட்டுரைகளுக்கு நீங்கள் முத்துக்கமலம் இணைய இதழ் இணைப்பு தந்துள்ளது பயனுடையதாகவே நான் கருதுகின்றேன், ஆனால் விளம்பர நோக்கமாகவும் தருவது போல தெரிகின்றது. விளம்பர போக்கை சற்று குறைத்துக் கொண்டு, கட்டுரைகளை கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றார்போல மாற்றி எழுதினால் பயனுடையதாக இருக்கும். முத்துக்கமலம் இணைய இதழுக்கும் இணைப்பு தாருங்கள், ஆனால் சற்றே கவனமாக விளம்பர நோக்கம் என்று பிற எண்ணாதவாறு இருக்குமாறு இட வேண்டுகிறேன். நீங்கள் இட்ட கட்டுரைகள், இணைப்புகள் யாவுமே நன்றாக உள்ள்ன ஆனால் இன்னும் கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றார்போல திருத்தி எழுதவேண்டும். இவை வளர்முக நோக்கில் எழுதும் கருத்துகள். தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தாருங்கள்! மிக்க நன்றி.--செல்வா 06:04, 14 டிசம்பர் 2008 (UTC)

நன்றி & உதவி கோருதல்[தொகு]

தங்களது ஆலோசனைக்கு நன்றி. அடுத்து அதிக விளம்பரமில்லாமல் இணைப்பு தருகிறேன். புகைப்படம் (படிமங்களை)இணைப்பது எப்படி என்பது தெரியவில்லை. சற்று விளக்கம் தந்தால் சில புகைப்படங்களை இணைக்க உதவியாக இருக்கும். -தேனி.எம்.சுப்பிரமணி

சுப்பிரமணி அவர்களுக்கு, புகைப்படங்களை ஏற்றுவதற்கு இடப்பக்கத்திலுள்ள menu வில் "கோப்பைப் பதிவேற்று" என்ற தொடுப்பைப் பயன்படுத்தவும். உதவிக்கு விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \பேச்சு 10:47, 28 டிசம்பர் 2008 (UTC)
Kutchanur saneeswaran.JPG படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. அதனை குச்சனூர் சனீஸ்வரன் கோயில் கட்டுரையுடன் இணைத்துள்ளேன். இப்படிமத்தை பொதுவில் தருகிறீர்களா? அல்லது காப்புரிமை கொண்டதா? பின்வரும் ஏதாவதொரு வார்ப்புருவை சேருங்கள்: {{copyrightedFreeUse}}, {{PD-self}}.--Kanags \பேச்சு 12:51, 28 டிசம்பர் 2008 (UTC)

குச்சனூர் சனீஸ்வரன் படிமம் (Kutchanur saneeswaran.JPG)தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. இந்தப்படத்தை இங்கு பிரதி (Scan)செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை {{>{{copyrightedFreeUse}}ஆகப் பயன்படுத்துவதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.

தலைப்புக்கு நகர்த்த உதவி தேவை[தொகு]

நான் கட்டுரைக்குத் தலைப்பிடும் போது தந்தைவழி முறை என்று தலைப்பிட்டு பக்கத்தைச் சேமித்து விட்டேன். ஆனால் அந்தக் கட்டுரைக்குத் தந்தைவழி உறவு முறை என்ற தலைப்பே சரியானது என்பதால் அந்தத் தலைப்பில் ஒரு பக்கத்தை உருவாக்கி விட்டேன். தந்தைவழி முறை என்ற தலைப்பில் உள்ள கருத்துக்களை அப்படியே தந்தைவழி உறவு முறை பக்கத்திற்கு நகர்த்த முயன்றேன் முடியவில்லை. பக்க மாற்ற வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப்பக்கங்களையும் சரியானபடி மாற்றி உதவிடவும் வேண்டுகிறேன். நன்றி.-தேனி.எம்.சுப்பிரமணி.

தலைப்பை மாற்ற வேண்டுமென்றால், மேலே நகர்த்துக என்பதைக்க் கிளிக் செய்து புதிய தலைப்புக்கு மாற்றலாம். தந்தைவழி முறையை மாற்றியுள்ளேன்.--Natkeeran 15:46, 15 மார்ச் 2009 (UTC)


அருமையான நடை, அருமையான தகவல்கள்[தொகு]

உங்கள் கட்டுரைகள் மிகவும் ஈடுபாட்டுடன் வாசிக்கிறேன். மிக அழகான பொருத்தமான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு எழுதுகிறீர்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள். --Natkeeran 15:46, 15 மார்ச் 2009 (UTC)

மிக்க நன்றி[தொகு]

நக்கீரன் அய்யா அவர்களுக்கு, என்னுடைய கட்டுரைகளைப் படித்துப் பாராட்டியமைக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் பல. உங்கள் ஊக்கம் மேலும் பல கட்டுரைகளை வெளிக் கொணர எனக்கு உதவும்.- தேனி எம்.சுப்பிரமணி.

நற்கீரன் என்ற பெயரைப் பார்த்தவுடன் எல்லோரு ஐயா என்று முடிவு செய்து விடுகிறார்கள் :-) உங்களிடம் நிறைய விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிறு விழுக்காட்டையாவது தமிழ் விக்கியில் கட்டுரைகளாக, பட்டியல்களாக, அட்டவணைகளாக, படங்களாக பகிர முடிந்தால் சிறப்பாக இருக்கும். பொருளியல், இதழியல், தொடர்பியல், தமிழ், இலக்கியம், நிர்வாகம், மின்னியல் என உங்கள் ஆளுமை வியக்க வைக்கிறது. இயன்றவரை நாம் உங்களுக்கு உதவுவோம். தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உரையாடல்களிலும் கலந்துகொண்டால் நன்று. நன்றி. --Natkeeran 15:46, 15 மார்ச் 2009 (UTC)

பாராட்டுகள்[தொகு]

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை இல்லாத பயனுள்ள தலைப்புகளில் விரிவான கட்டுரைகளை எழுதி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --Ravidreams 15:46, 15 மார்ச் 2009 (UTC)

வணக்கம், நீங்கள் அண்மையில் தொடங்கிய உபநிஷத்துக்கள் என்ற கட்டுரையின் முக்கிய பகுதிகளை ஏற்கனவே உள்ள உபநிடதம் கட்டுரையில் இணைக்க முடியுமா? உபநிடதம் என்ற தலைப்பையே முதன்மைப்படுத்துமாறும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 23:00, 28 மார்ச் 2009 (UTC)
அன்புடையீர், எனது உபநிஷத்துக்கள் கட்டுரையை உபநிடதம் கட்டுரையுடன் இணைத்துக் கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. நன்றி. -தேனி எம்.சுப்பிரமணி. பயனர்: Theni.M.Subramani

வருக[தொகு]

சுப்பிரமணி, தாங்கள் தமிழ் விக்கிக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சிகுரியது. தங்களிந் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள். நீங்கள் முத்துக்கமலம் இணைய இதமிழ் எழுதியுள்ள கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்.--கார்த்திக் 11:20, 29 ஜூலை 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா நூல்[தொகு]

உங்கள் குறுங்கட்டுரையை ஆலமரத்தில் செய்தியாக இணைத்துவிட்டு அக்கட்டுரையை நீக்கியுள்ள்ளேன். ஏனெனில் அது விக்கிப்பீடியாவின் ஒரு கட்டுரை அல்ல. அது உங்கள் வேண்டுகோள், செய்தி அல்லவா. நூல வெளியிட்ட பின்னர் அதனைப்பற்றிய குறிப்புகளைத் தொகுத்தி ஒரு குறுங்கட்டுரையாக உள்ளிடலாம். நல்வாழ்த்துகள்--செல்வா 15:29, 24 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா குறித்து தாங்கள் எழுதி வரும் நூல் சிறக்க வாழ்த்துக்கள். எழுதுவதற்குப் பாராட்டுக்களும் நன்றியும். --சிவக்குமார் \பேச்சு 19:22, 9 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

கூடலூர்[தொகு]

தங்களால் மூன்றாம் நிலை நகராட்சியான கூடலூர் (தேனி மாவட்டம்) பற்றி எழுத முடியுமா? கூடலூர் என்றாலே எல்லோருக்கும் நீலகிரி மாவட்ட கூடலூர் தான் நினைவுக்கு வருகிறது. --குறும்பன் 18:07, 11 டிசம்பர் 2009 (UTC)

கருத்துக்கள் வேண்டுதல்[தொகு]

வணக்கம் எம்.சுப்பிரமணி. அண்மைக்காலமாக மிகவும் நன்றாக உங்கள் பங்களிப்புகள் அமைகின்றன. நன்றி. நாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 02:55, 18 டிசம்பர் 2009 (UTC)

செயற்திட்டம்-2010[தொகு]

நற்கீரன் அவர்களுக்கு 2010 செயற்திட்டம் குறித்து என்னிடம் கருத்து கேட்டமைக்கு நன்றி.

அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களிலும் பங்களிப்பவர்கள் தங்கள் பங்களிப்பில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கம் தொடங்கப்பட்ட பின்பு பங்களிப்புகள் சற்று அதிகரித்திருக்குமென நம்புகிறேன். மேலும் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் எனும் தலைப்பிலான செய்தியும் நல்ல முயற்சி. விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இடதுபுறம் அதிக பங்களிப்பு செய்து வரும் விக்கிப்பீடியாவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் சுமார் 50 பங்களிப்பாளர்களின் பட்டியலை வெளியிடலாம். இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருப்பதுடன் பங்களிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும்.

நான் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் எழுதியிருக்கும் நூல் சென்னை மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு மயூரநாதன் அய்யா அணிந்துரை அளித்துள்ளார்கள். இந்நூல் வெளியிடப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறேன்.

--தேனி.எம்.சுப்பிரமணி 02:02, 20 டிசம்பர் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு எப்போது?[தொகு]

தேனி சுப்பிரமணி! சிறப்பான பணியைச் செய்து வருகின்றீர்கள். தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு எப்போது என்பது குறித்து ஆவலாக உள்ளேன். 2010 சென்னைப் புத்தகத் திருவிழாவில் எதிர்பார்க்கலாமா? மயூரநாதனை அணிந்துரை அளிக்கச் செய்தது மிகவும் பொருத்தம் -- சிறப்பு. தொடருங்கள் உங்கள் பணியை. --பரிதிமதி 08:43, 20 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் நூல் பற்றி மேலும் தகவல்கள் அறிய ஆவல். நன்றி. --Natkeeran 15:42, 20 டிசம்பர் 2009 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியா நூல் சென்னை மணிவாசகர் பதிப்பகத்தின் அச்சில் உள்ளது. இந்நூல் 2010 சென்னைப் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் என்று மணிவாசகர் பதிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நூல்

  1. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
  2. தமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்
  3. தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்
  4. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்
  5. தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்
  6. தமிழ் விக்கிபீடியா பயிற்சிக் கட்டுரைகள்
  7. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்
  8. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்
  9. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை வார்ப்புருக்கள்
  10. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்
  11. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்
  12. தமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்
  13. தமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்
  14. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்
  15. தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்
  16. தமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்
  17. தமிழ் விக்கிபீடியா முக்கியப் பயனர்கள்
  18. தமிழ் விக்கிபீடியா ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள்
  19. விக்கி மீடியா பிற திட்டங்கள்
  20. தமிழ் விக்கிப்பீடியா அழைப்பு

என்கிற 20 தலைப்புகளில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மணிவாசகர் பதிப்பகம் எவ்வளவு விலை நிர்ணயிக்க உள்ளது என்பது தெரியவில்லை. இந்நூல் தமிழ் விக்கிப்பீடியா குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்பும் புதிய பயனர்களுக்கு கட்டுரைகள் எழுத உதவும் சிறந்த கையேடாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

பரிதிமதி, நற்கீரன் ஆகியோர்க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.--தேனி.எம்.சுப்பிரமணி 01:00, 21 டிசம்பர் 2009 (UTC)

தேனி சுப்பிரமணி! குறிப்பிடப்பட்ட காலத்தில் உங்கள் நூல் வெளிவரும் என்று வாழ்த்துகிறேன். அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். சொத்து வரி பக்கம் நன்றாக வருகிறது. ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் திரட்டும் தகவல்களின் மூலம் அல்லது மேற்கோள் (ஆதாரம்) தரப்பட வேண்டும் -- Independent Verifiability (சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை) தேவை என்பதால். த.வி.க்கு நீங்கள் அளிக்கும் நேரத்திற்கும் உழைப்பிற்கும் நன்றி. -- பரிதிமதி 07:34, 23 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

நன்றிகள்[தொகு]

சுப்பிரமணி, மிகவும் அழகான ஒரு "சிறப்புச் சான்று" ஒன்றை உருவாக்கி அளித்திருக்கிறீர்கள். எனது மனமார்ந்த நன்றிகள். சேர்ந்து பணியாற்றும் எல்லாத் தமிழ் விக்கிப்பீடியர்களும் அளித்துவரும் ஊக்கமும் ஒத்துழைப்புமே என்னை இயக்குகிறது. இந்த ஒத்துழைப்புடன் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றுவேன் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 15:42, 13 ஜனவரி 2010 (UTC)

  • நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே--Hibayathullah 17:33, 2 மார்ச் 2010 (UTC)

நூல் எழுதியமைக்குப் பாராட்டு[தொகு]

ஆமாம் ஐயா, நான் ஊரில் இல்லை, மன்னிக்கவும். நீங்கள் உங்கள் நூலை எனக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி. இப்படியொரு அருமையான நூலை எழுதியமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நூல் வணிக நோக்கிலும் பயன் விளைவிப்பதிலும் பெரு வெற்றி பெற என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். --செல்வா 06:30, 28 ஜனவரி 2010 (UTC)

அன்பின் சுப்பிரமணியம்,உங்களை தவறாக புரிந்து கொண்டதற்கு பொருத்து கொள்ளவும். உங்களின் அருந்ததியர் கட்டுரை அருமை. உங்களின் இதழ் எல்லோரையும் சென்றடைய வாழ்த்த்துகள்.

நன்றி -- மகிழ்நன் 02:04, 16 பெப்ரவரி 2010 (UTC)

கருத்து வேண்டல்[தொகு]

கருத்து அளிக்க வேண்டுகிறேன்

உங்களுக்குத் தெரியுமா 21 பெப்ருவரி 2010 + தமிழ் இணைய மாநாட்டிற்கான கட்டுரை[தொகு]

தேனி சுப்பிரமணி! உங்களுக்குத் தெரியுமாவில் சிறப்பான தகவல்களை அளித்துள்ளீர்கள். சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். கவனிக்கவும். மேலும், விக்கிப்பீடியா நூல் எழுதியுள்ள நீங்கள் கோவை - தமிழ் இணைய மாநாட்டிற்காக (த.வி. பற்றிய) கட்டுரை எழுதப் பொருத்தமானவர். எழுதலாமே? --பரிதிமதி 17:06, 21 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்[தொகு]

--Arafat 05:40, 23 பெப்ரவரி 2010 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!--மணியன் 05:45, 23 பெப்ரவரி 2010 (UTC)
அராபத், மணியன் வழங்கிய வாழ்த்துக்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.--Theni.M.Subramani 07:10, 23 பெப்ரவரி 2010 (UTC)
நேரங்கழித்து கூறுவதற்கு மன்னிக்கவும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! --பரிதிமதி 16:31, 23 பெப்ரவரி 2010 (UTC)

பிறந்த நாள் வாழ்த்துகள்.கால நீட்சியாக வாழ்த்துவதற்கு பொருத்து கொள்ளவும்.

-- மகிழ்நன் 16:46, 23 பெப்ரவரி 2010 (UTC)

பிறந்த நாள் வாழ்த்து வழங்கிய பரிதிமதி, மகிழ்நன் ஆகியோருக்கு என் இதயப்பூர்வமான நன்றி...--Theni.M.Subramani 16:52, 23 பெப்ரவரி 2010 (UTC)க
கனடாவிலே இன்னிக்குதாங்க உங்களுக்குப் பிறந்தநாள் :) பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! --செல்வா 17:36, 23 பெப்ரவரி 2010 (UTC)
பிறந்த நாள் வாழ்த்து வழங்கிய செல்வா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி...--Theni.M.Subramani 01:06, 24 பெப்ரவரி 2010 (UTC)

தமிழில் தலைப்பு[தொகு]

சுப்பிரமணி, நான் குறிப்பிட்டுள்ள தலைப்புகளுக்கு இணையான (சரியான) தமிழ் சொல் எனக்கு தெரியவில்லை :( வேறு எவருக்கேனும் சரியான தமிழ் சொல் தெரிந்தால் அதை மொழி பெயர்த்து ஆங்கில சொல்லை நீக்கிவிடலாம்.--கார்த்திக் 08:33, 7 மார்ச் 2010 (UTC)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி[தொகு]

சுப்பிரமணி! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)

இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.

மேலும் பேசுவோம்.

அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.

நன்றி. பரிதிமதி

கட்டுரைத் தலைப்புகளில் முனைவர்[தொகு]

வணக்கம் சுப்ரமணி, கட்டுரைத் தலைப்புகளில் முனைவர், டாக்டர் போன்ற விளிச்சொற்கள் இடுவதில்லை. பெயர் மட்டும் இருந்தால் போதுமானது. கட்டுரை உள்ளடக்கத்தில் அவற்றைக் குறிப்பிட தடை ஏதும் இல்லை. மேலும் தலைப்புகளில் முதல் எழுத்துக்கும் பெயருக்கும் இடையில் கட்டாயம் ஓர் இடைவெளி வரவேண்டும். உ+ம்: முனைவர்.ந.அருள் என்பது ந. அருள் எனத் தலைப்பிட வேண்டும். இனிமேல் இவற்றைக் கணக்கில் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடு 10:10, 14 மார்ச் 2010 (UTC)

நன்றி. இனி வரும் கட்டுரைகளில் தாங்கள் கூறிய ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படும். அவ்வப்போது திருத்தங்களும் ஆலோசனைகளும் அளிப்பதற்கு நன்றி. --Theni.M.Subramani 10:18, 14 மார்ச் 2010 (UTC)

நண்பருக்கு[தொகு]

  • பகுப்பு:தமிழ்ச் சமூகம் தலைப்பை ஒருமுறை படிக்கவும்.நன்றி--Hibayathullah 17:02, 16 மார்ச் 2010 (UTC)
  • நன்பரே புதியபக்கம் எதையும் நான் உருவாக்கவில்லை. ஒன்றிணைக்க வேண்டிய பக்கங்களை இணைக்கிறேன்.நன்றி--Hibayathullah 15:08, 21 மார்ச் 2010 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நன்றி--ரவி 11:38, 17 மார்ச் 2010 (UTC)

  • தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு பற்றி நன்கு அறிந்த பயனரான தாங்கள் பல பயனுள்ள கட்டுரைகள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!--Hibayathullah 12:30, 17 மார்ச் 2010 (UTC)

உங்கள் அறிமுகம் முதற்பக்கத்தில் இருப்பதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். அருமை அருமை! நல்வாழ்த்துகள்! உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கவும் நல்வாழ்த்துகள்! --செல்வா 13:52, 17 மார்ச் 2010 (UTC)

சிறந்த பங்களிப்புகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்; முதற்பக்கத்தில் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. --பரிதிமதி 16:16, 17 மார்ச் 2010 (UTC)
தமிழ்நாடு சார்ந்த பல கட்டுரைகளை அளித்து சிறப்பாக பங்களித்துவரும் உங்கள் அறிமுகத்தைக் கண்டு மகிழ்வுற்றேன். உங்கள் ஆர்வமும் பங்களிப்பும் தொடர நல்வாழ்த்துகள் !!--மணியன் 04:38, 18 மார்ச் 2010 (UTC)
சுப்பிரமணி, தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவராகவும், அதன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட ஒருவராகவும் உள்ள உங்களை அறிமுகப்படுத்தும் பகுதி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளதைப் பார்த்தேன். பொருத்தமான அறிமுகம். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மயூரநாதன் 03:35, 19 மார்ச் 2010 (UTC)

நன்றி[தொகு]

  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் என்னை அறிமுகம் செய்த ரவி மற்றும் அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் நன்றி.
  • வாழ்த்துக்கள் தெரிவித்த Hibayathullah மற்றும் செல்வா ஆகியோர்க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.--Theni.M.Subramani 14:39, 17 மார்ச் 2010 (UTC)
  • வாழ்த்துக்கள் தெரிவித்த பரிதிமதி-க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.--Theni.M.Subramani 16:46, 17 மார்ச் 2010 (UTC)
  • வாழ்த்துக்கள் தெரிவித்த மணியன் -க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.--Theni.M.Subramani 05:27, 18 மார்ச் 2010 (UTC)
  • வாழ்த்துக்கள் தெரிவித்த மயூரநாதன் -க்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.--Theni.M.Subramani 07:56, 19 மார்ச் 2010 (UTC)

மடல்[தொகு]

சுப்பிரமணி அவர்களுக்கு, உங்களுக்கு ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடு 02:17, 30 மார்ச் 2010 (UTC)

பயனர் கணக்கைத் தடை செய்தல்[தொகு]

நீங்கள் எனது உரையாடல் பக்கத்தில் விட்ட குறிப்புத் தொடர்பாக:

இது எல்லாமே ஒரே நபர் என்கிறீர்களா? நான் இப்பொழுது நீக்கிய ஆங்கிலப் பதிவையும், வொக்கலிக்கர் பக்கத்தில் எழுதப்பட்டவைகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் மற்றப் பதிவுகளை நான் கவனிக்கவில்லை. இன்றைய ஆங்கிலப் பதிவு தடை செவதற்குப் போதியதல்ல. வொக்கலிக்கர் பதிவுகள் நல்ல முறையில் இல்லாவிட்டாலும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். தொடர்ந்து கவனித்து வருவோம். தொடர்ந்தும் வேண்டுமென்றே தொந்தரவு செய்வதாகத் தெரிந்தால் பின்னர் தடை செய்யலாம். மயூரநாதன் 19:02, 12 ஏப்ரல் 2010 (UTC)