பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு05

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாகிப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுகோள்[தொகு]

வணக்கம் சூரியப் பிரகாசு. உங்களின் ஈடுபாடு, பங்களிப்பு, விக்கி நுட்ப அறிவு, தமிழ் கல்வி, பராமரிப்புப் பணிகள், தொடர்பாடல் பணிகள் ஆகியவை மிகச் சிறப்பாக அமைகின்றன. உங்களை நிர்வாகியாப் பெற்றால் த.வி நன்மை பெறும். உங்கள் கல்விக்கு இடையூறு வராது என்றால், உங்களை நிர்வாகியாக பரிந்துரைக்க விரும்புகிறேன். --Natkeeran 14:12, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன். தங்களது அழைப்புக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள தகுதிகளைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மேலும் அதிகமாகப் பயன்படுத்தி வளஞ்சேர்ப்பேன். தங்களது அழைப்பை ஒத்துக்கொள்கிறேன். நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:02, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க மனமார்ந்த வாழ்த்துகள்--இரவி 16:02, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி நிருவாகி சூர்யபிரகாசு. மனமார்ந்த வாழ்த்துகள்--P.M.Puniyameen 16:57, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சூரியா. உங்கள் ஆர்வம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளட்டும். --Natkeeran 16:34, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி சூர்யபிரகாசு, தமிழ் விக்கியில் உங்கள் சிறப்பான பணி நீண்ட காலம் தொடர வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 18:10, 15 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. புன்னியாமீன் நிருவாகி சூர்யபிரகாசெல்லாம் வேண்டாம். நன்றி நக்கீரன், அதுதான் என் ஆசையும் கூட. நன்றி மயூரநாதன். சிறப்பாகப் பங்களிப்பேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:07, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சூர்யா.--மணியன் 05:13, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி மணியன்.
உங்கள் பணி சிறக்க வழ்த்துக்கள் சூர்யா.--சஞ்சீவி சிவகுமார் 02:58, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சஞ்சீவி. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:02, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

எனது விக்கி பங்களிப்பை அங்கீகரித்து நீங்கள் அளித்த பதக்கத்திற்கு மிக்க நன்றி ! இது என்னை இன்னும் முனைப்போடு செயல்பட ஊக்குவிக்கும் !!--மணியன் 14:58, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

மணியன், இது போன்று பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் பயனர்களை முனைப்புடனும் செயல்பட வைத்தலையும் மனதிற்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் விக்கியன்பு கருவி. நீங்களும் இக்கருவியைப் பயன்படுத்திப் பயனர்களை ஊக்குவித்துப் பங்களிப்புகளை அதிகரிக்கச் செய்யலாமே! (எனது, அவா!) (மேலும் உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே பதிலளிக்கலாம். உரையாடலில் ஒரு தொடர்ச்சித்தன்மை இருக்கும் என்பதால்!) நன்றி. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:06, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

எனது விக்கி வருகையை அங்கீகரித்து நீங்கள் அளித்த வரவேற்பிற்கு மிக்க நன்றி ! இது என்னை இன்னும் முனைப்போடு செயல்பட ஊக்குவிக்கும் !!--ஜாசலின்

வாழ்த்துகள் ஜாசலின். உங்களிடமிருந்து நிறைய பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். :) உதவி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். :) நன்றி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:04, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
புதிய புதிய பயனர் யாவாக் கருவிகளை உருவாக்கி தமிழ் விக்கி சூழலை இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். இப்பணி மேன்மேலும் சிறக்க சிறக்க வாழ்த்துக்கள் !! மணியன் 12:11, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி மணியன். எனது முதன்மையான நோக்கமே "பயன்படுத்துந்தன்மையை அதிகரிப்பதே" ஆகும். (Usability). அதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விளைவுகள் தான் விக்கியன்பு, தொடுப்பிணைப்பி, உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம் போன்றவை. இவை பலரது கூட்டுமுயற்சியால் உருவானவை. :) சென்னையில் ஜூலை மாதம் ஒரு பட்டறை நடத்தலாம் என்று திட்டமும் உள்ளது. சென்னை லினக்சு குழுவிலிருந்து திரு. டி. சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். அதனை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய கருவிகள் குறித்த அறிமுகத்தையும் லினக்சு குழுவில் கூறினால் நமக்கு நிரலர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. :) தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நிரலர்களின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. :) இது குறித்து சென்னை விக்கிப்பீடியர் மடலாடற்குழுவில் உரையாடலாம். :) உங்கள் கருத்துகளைக் கூறவும் மணியன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:22, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]
அண்மையில் நீங்கள், சோடாபாட்டில்,ஸ்ரீகாந்த் அணி சேர்ந்து வடிவாக்கும் நிரல்கள் விக்கியாக்கத்திற்கு மிகவும் பயனாகின்றன. தமிழ் தட்டச்சினை கொணர்ந்த மலையாள விக்கிப்பீடியர்கள் மற்றும் மாகிரின் நிரல்களும் மிகவும் பயனுள்ளவை. எனவே நிரலாளர்களின் பங்கு உள்ளுரை வழங்குவோருக்கு பெருந்துணையாக இருப்பதால் அளவிடற்கரியது. இவர்கள் எண்ணிக்கைக் கூட்ட நீங்கள் ஒருங்கிணைக்கும் சூலை மாத விக்கி சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும். நிச்சயமாக சென்னை விக்கிப்பீடியா மடலாடற்குழுவில் கலந்துரையாடலாம். இந்த சந்திப்பில் நான் கொல்லன் பட்டறையில் மாட்டிய ஈ தான் ;) --மணியன் 13:36, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

சேலம் சந்திப்பு[தொகு]

சூர்யா! நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு, வாழ்த்துக்கள். விக்சனரி வடிவமைப்பு சிறப்பாக வர, உங்களைப் போன்றவரின் ஆலோசனை மிக மிக அவசியம். ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்திலேயே, இதுவரை செயற்பட்டேன். இப்பொழுது அனுதினமும், விக்சனரிக்கு பலர் வருவது கண்டு மகிழ்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு, விக்கிப்பீடியாவிலும் என்னால் இயன்றதை செய்யத் துவங்க உள்ளேன். கடந்த சனிமுதல், சேலத்தில் தான் இருக்கிறேன். அப்பாவுக்கு(வயது76) அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை. அதனால் தான். உங்களுக்கு மின்னஞ்சல், ஒன்றினை அனுப்பியுள்ளேன். முடிந்தால் சந்திப்போம். உங்களைச் சந்திக்க மிக்க ஆவலாக உள்ளேன். என்றும் நட்புடன்,07:44, 9 சூன் 2011 (UTC) உழவன்+உரை..

நன்றி தகவலுழவன். நானும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். இடம், நேரம் போன்றவற்றை மின்னஞ்சல் வழி முடிவு செய்துகொள்ளலாம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:47, 9 சூன் 2011 (UTC) [பதிலளி]

மின்னஞ்சலைக் காண்கிறேன்.00:53, 11 சூன் 2011 (UTC)உழவன்+உரை..

வாழ்த்துகள்[தொகு]

சூரியப்பிரகாசு, தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளுள் ஒருவராக நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த அணுக்கம் உங்கள் விக்கிப்பங்களிப்புகளுப்புக்குப் பெரிதும் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 10:11, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றி கனக்சு. இனி முதற்பக்க இற்றைப்படுத்தலை மேலும் எளிமையாகச் செய்யமுடியும் என்பதில் ஐயமில்லை. ;) வாழ்த்துக்கு நன்றி. விக்கிசெய்திகள் பற்றி கொஞ்சம் உதவி தேவை கனக்சு. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:37, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் சூரியப்பிரகாசு--செந்தி//உரையாடுக// 12:22, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி செந்தி. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:24, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

சிறு வரைவி படம்[தொகு]

நண்பா அவை இணையத்தில் எடுக்கப்பட்டவை. எனக்கு என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சற்று விளக்கவும் :) --Msudhakardce 07:37, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பயனர் பெயர்[தொகு]

என்னுடைய பயனர் பெயரை நான் விக்கியில் எவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும். இது பலருக்கும் உதவும் என்று நம்புகிறேன்

சுதாகர் உரையாடல் பக்கங்களில் கையெழுத்திட மறக்க வேண்டாம் :)

பயனர் பெயரை மாற்றுவதால், உங்கள் பிற விக்கிப்பீடியாக்களுடனான தொடர்பு அறுந்து விடும். (If you've contributed something in English Wikipedia they won't be anymore under your contribution. My suggestion is Let it be Msudhakardce Latin scripts are better than than indic scripts). Otherwise your wish. I am just an admin. I can't change the user names. But beauracrats can change it. Here natkeeran, mayooranathan, ravi and sundar are the beauracrats. You better ask them. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:39, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
சுதாகர், - பெயரை மாற்ற சூர்யா மேற்குறிப்பிட்ட நான்கு அதிகாரிகளுள் ஒருவரை அணுகுங்கள். பெயர் மாற்றம் ஏற்படுவதால் சில சிக்கல்கள் உள்ளன
1) ஒருங்குறி / தமிழில் மாற்றினால் பல தரவு கருவிகளில் ஒருங்குறிக்கு ஏற்பு இல்லாமல் தற்போது உள்ளது. எனவே உங்கள் பங்களிப்பு விவரங்கள் போன்றவற்றைப் பார்ப்பதில் சிக்கல் வரும்
2) நீங்கள் தமிழ் விக்கி தவிர பிற விக்கித் திட்டங்களில் இப்பெயர் கொண்டு பங்களித்திருந்தால், இங்கும் அங்குமுள்ள தொடர்பு அறுந்து விடும், ஒவ்வொரு விக்கித் திட்டத்திலும் போய் பெயர் மாற்ற வேண்டுகோள் வைக்க வேண்டும்.

--சோடாபாட்டில்உரையாடுக 08:46, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பேசாமல் அப்படியே இருப்பது தான் நல்லது போல

--சுதாகர்

படிமம்[தொகு]

சூரியப்பிரகாசு, வேறு மொழிப் பயனர் ஒருவருடைய படிமத்தை உங்களுடையது என உரிமை கோர முடியாது. பதிலாக வார்ப்புரு:PD-enuser என்பதைப் பயன்படுத்தலாம்.-Kanags \உரையாடுக 11:50, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

கனக்சு, ஆக்கம் என்று அவரது பெயரையும் மூலம் என்று ஆங்கில விக்கிப்பக்கத்தையும் தானே கொடுத்துள்ளேன். மேலும் அவர் அப்படிமத்திற்கு என்ன அனுமதி கொடுத்திருந்தாரோ அதையே தான் கொடுத்துள்ளேன். அப்படிமத்தை ஆக்கியவன் என்று நான் குறிப்பிடவில்லையே! :( மேலும் இந்த வார்ப்புரு பற்றி இதுகாரும் நான் அறிந்ததில்லை. எனவே அதனைப் பயன்படுத்தவில்லை. மன்னிக்கவும். இனிமேல் அவ்வார்ப்புருவைப் பயன்படுத்தித் தேவைப்படும் படிமங்களைப் பதிவேற்றிவிடுகிறேன். நன்றி. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:54, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
சாதாரண உரிம வார்ப்புருவைப் பயன்படுத்தினால் “நான்” “எனது” என்ற சொற்கள் வரும் அது பதிவேற்றியவர் சொல்வது போன்ற தோற்றத்தைத் தரும். எனவே self என்ற வார்த்தை வரும் வர்ப்புருவை இணைக்க வேண்டாம் அதை நீக்கிவிட்டால் “தன்னிலை” வார்த்தைகள் இல்லாத சொற்களுடன் உரிமம் இருக்கும். இப்போது நான் செய்துள்ள மாற்றங்களைப் பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 12:01, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில். இனி தேவைப்படும் படங்களை இந்தவார்ப்புரு கொண்டு பதிவேற்றுகிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:05, 20 சூன் 2011 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

சூரியப்பிரகாசு, உ.தெ. கட்டுரைகளின் பங்களிப்பாளர்களுக்கு அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பது போல முதற்பக்கக் கட்டுரைகளின் முக்கிய பங்களிப்பாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும். முக்கியமாக புதிய பயனர்களை இவ்வாறு ஊக்குவிக்க வேண்டும். நன்றி. ஏன் நானே இதனை செய்யலாமே என்று மட்டும் திருப்பிக் கேட்டு விடாதீர்கள்:).--Kanags \உரையாடுக 08:34, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

சூர்யா ஏற்கனவே இந்த ஐடியாவைக் குடுத்தார். நான் தான் எல்லாம் பழைய பயனர்கள் தானே எழுதுகிறோம் தேவையா என்று தட்டி கழித்தேன். உங்களுக்கும் இதே ஐடியா தோன்றியுள்ளது. செய்யலாம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 08:38, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
தோராயமாக ஒரு அறிவிப்பு வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன் - வார்ப்புரு:முதற்பக்கக் கட்டுரை பயனர் அறிவிப்பு--சோடாபாட்டில்உரையாடுக 08:50, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]

http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm