பயனர் பேச்சு:Jagadees1808

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Jagadees1808! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Jagadees1808, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Jagadees1808, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! நல்வரவு! --செல்வா 20:19, 2 ஏப்ரல் 2010 (UTC)

உள்ளடக்கம் நீக்கியது ஏன்?[தொகு]

தாங்கள் மூன்று கட்டுரையின் உள்ளடக்கங்களை முற்றிலும் நீக்கியுள்ளீர்கள் . அது ஏன்? --இராஜ்குமார் 18:03, 9 ஏப்ரல் 2010 (UTC)

ஜெகதீஸ், நீங்கள் உங்கள் மாசி பெரியண்ணன் கோவில் கட்டுரையில் தெரிவித்திருந்தது: //என்னுடைய இணையதள இணைப்பை மட்டும் எடுத்தெரிந்துவிட்டு நண்பர் மீண்டும் மீண்டும் இப்பக்கத்தை சீரமைக்கின்றார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. நான் தேடித் தேடி சேகரித்தவைகளை என் உரிமையின்றி மற்றவர்கள் பயன்படுத்துவது சரியில்லை. எனவே என்னுடைய முழு பங்களிப்புகளும் விக்கியிலிருந்து நீக்கப்படுகிறது.// என்று எழுதியிருக்கிறீர்கள். முதலில் நீங்கள் விக்கியின் பொது விதிகளை அறிந்திருக்க வேண்டும். இங்குள்ள ஒரு கட்டுரைக்கு எவரும் உரிமை கோர முடியாது. நீங்கள் ஒரு கட்டுரையை இங்கு எழுதுவீர்களானால், அக்கட்டுரையை நீங்கள் பொதுவுக்கு விடுகிறீர்கள். அதாவது, அக்கட்டுரையில் தேவையான மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. இது ஒருவரின் சொந்த வலைப்பதிவு அல்ல எனபதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்களின் மாசி பெரியண்ணன் கோயில் கட்டுரையில் நீங்கள் நீக்கிய உள்ளடக்கங்களை மீள்வித்திருக்கிறேன். இங்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 05:57, 24 ஏப்ரல் 2010 (UTC)
ஜெகதீஸ், நீங்கள் இன்று விக்கியில் உள்ள பல கட்டுரைகளில் உள்ளடக்கத்தை காரணம் எதுவும் இன்றி நீக்கியிருக்கிறீர்கள். உங்களது இந்தத் தகாத செயல் நீடிக்குமானால் உங்கள் பயனர் கணக்கு தடை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது குறித்து ஏதாவது தெரிவிக்க விரும்பின் விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:07, 25 ஏப்ரல் 2010 (UTC)
நீக்கப்பட்ட உள்ளடக்கங்களை மீளமையுங்கள் . -- இராஜ்குமார் 09:19, 25 ஏப்ரல் 2010 (UTC)

ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் மாசி பெரியண்ணன் --- கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. எல்லோருக்கும் விளங்கும்படி, பெரியண்ணன் --- பெரியசாமி பற்றிய விவரங்களை தாங்கள் தேடிக்கண்டு பிடித்து எழுதியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.

ஒன்றுமட்டும் புரியவில்லை. தாங்கள் தங்களின் குல தெய்வத்தை பற்றி எழுதிய பின், ஏன் அழிக்க வேண்டும் ??? விளக்கம் தேவை.

பெரியண்ணசுவாமி, பெரியசுவாமி --- தங்களுக்கு மட்டும் குல தெய்வமல்ல --- எனக்கும் குல தெய்வம் தான். எனக்கும் கெல்லிமலை தெரியும். கொல்லிமலை சென்றிருக்கிறேன்.

திரும்பவும் தாங்கள் இக்கட்டுரையை அழித்தீர்களானால், இதே கட்டுரையை நான் வேறு விதமாக மாற்றி எழுதிவிட எண்ணியுள்ளேன். ஆகவே தங்களின் பதிலைக்கூறுங்கள். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 00:37, 27 ஏப்ரல் 2010 (UTC)

பயனர் கணக்கு முடக்கம்[தொகு]

பல பக்கங்களின் உள்ளடக்கத்தை நீக்கியதோடு, தகாத சொற்களை விக்கியில் இட்டதால் இப்பயனர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது--ரவி 06:11, 27 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jagadees1808&oldid=516382" இலிருந்து மீள்விக்கப்பட்டது