பயனர் பேச்சு:வைகுண்ட ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருக[தொகு]

தமிழ் விக்கிபீடியாவிற்கு வருக வைகுண்ட ராஜா! இங்கும் அய்யாவழி, மற்றும் கன்னியாகுமரி தொடர்பான கட்டுரைகளை தரமான முறையில் விரிவாக்குவீர் என எதிர்பார்க்கிறேன். ஏதும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கவும் -ஸ்ரீநிவாசன் 03:50, 12 செப்டெம்பர் 2005 (UTC) (en:User:Srini81)

வருக வருக. தங்கள் வரவு தமிழ் விக்கிபீடியாவிற்கு மேலும் பலம் சேர்க்கும் என நம்புகிறேன். தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. -Sivakumar 07:14, 12 செப்டெம்பர் 2005 (UTC)

அண்ணன்வழிஇணைப்புத் தலைப்பு

வைகுண்ட ராஜாவிர்க்கு வணக்கம் இளம் புயல்கள் சினிமவை நோக்கி செல்கின்ற்ற பதையில் தம்பி தளம் வழி பதை கட்டுரைகள் எல்லாம் எனக்கு தென்றலாக், உள்ளது ஏன் என்றல் என்க்கு புயலை பிடிக்கது தென்றலை பிடிக்கும் --Anbudanatj 20:29, 13 ஏப்ரல் 2007 (UTC)அன்புடன் ஹனிபா[பதில் அளி]


--Anbudanatj 20:29, 13 ஏப்ரல் 2007 (UTC)எனது ஈ மெயில் bismihani@gmail.com[பதில் அளி]

தமிழ் தட்டச்சு[தொகு]

பார்க்கவும் தமிழ் தட்டச்சு உதவி--ரவி 21:22, 22 ஜனவரி 2006 (UTC)

சில கேள்விகள்[தொகு]

  • எப்படி இப்படியான ஒரு ஈடுபாடு இச்சமயத்தின் மீது கொன்டீர்கள்?
  • இச் சமயத்தை இந்து சமயத்தில் இருந்து எப்படி வேறுபடுத்துகின்றீர்கள்?
  • இச் சமயத்தின் சமூக பின்புலத்தை (social background) பற்றி சற்று கூறுவீர்களா?
  • இச் சமய்த்தின் அடிப்படை மொழி எது? (தமிழ் போல தெரிகின்றது; சமஸ்கிரதத்தின் பங்கு என்ன?)


நீங்கள் தொன்மவியல் கதைகளுடன் வரலாற்று தகவல்களை கலந்துள்ளீர்கள், அது சமய விபரிப்பில் இயல்புதான். எனினும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீங்கள் இச்சமயத்தீன் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பது மிக தெளிவு. --Natkeeran 01:55, 29 மார்ச் 2006 (UTC)[பதில் அளி]


வைகுண்ட ராஜா, விரிவான பதில்களுக்கு மிக்க நன்றி. நான் சில விமர்சன நோக்குள்ள கருத்துக்களை பகிர முனைகின்றேன். தயவு செய்து உங்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாகவோ, அல்லது உங்கள் நம்பிக்கைகளை எந்த விதத்திலும் தாக்குவதாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.


உங்கள் கட்டுரைகளில் ஒரு புது சமய உருவாக்கத்துக்கு ஒரு வடிவம், நியாயம், மற்றும் கதையாக்கம் (meta narrative) தர முயற்சிக்கின்றீர்கள் என்பது போல தெரிகின்றது. அதற்குரிய மூலத்தை நீங்கள் பரந்த ஒரு சமூகத்தில் இருந்து பெறுகின்றீர்கள் என்பதால் அதை நான் எந்த விதத்திலும் ஆட்சோபிக்கவில்லை. உங்கள் கட்டுரைகளுக்கு மேலதிக தகவல்களை இணைப்பதன் மூலம் ஒரு முழுமையான பார்வையை முன்வைக்க முடியும்.


பின்வரும் கருத்துக்கள் உங்கள் கட்டுரைகளை பற்றியது அல்ல, அய்யாவழி பற்றி எதுவும் தெரியாத ஒரிவரின் (உங்கள் கட்டுரைகளை தவிர) சற்று விலகி நின்ற பார்வையும் மூலமான கருத்துக்கள்.


சமயம் என்பது வெறும் புராணம், சடங்கு, கதையாடல்கள் மட்டுமல்ல. அதில் ஒரு பரந்த தேடல் இருக்கின்றது. இந்நோக்கில் அய்யாவழி ஒரு குறுகிய தளத்தில் இயங்குவதாக தெரிகின்றது.


நீங்கள் அய்யாவழியை சமய பின்புலத்திலே, குறிப்பாக இந்து சமயத்தில் இருந்தும் பிற சமயங்களில் இருந்தும் வேறுபடுத்தி ஒரு அடையாளத்தை குடுக்க பார்க்கின்றீர்கள். வேறுபடுத்துவதால் மாத்திரம் தன்னிர்ச்சையாக் ஒன்றை நிலை நிறுத்த முடியாது. குறிப்பாக மேலோட்டமான மாற்றங்கள் (எ.கா: தலையில் துண்டு அணிவது, புராண கதையை மாற்றி சொல்லது) எந்த வகையான உண்மைகளை விளக்க முனைகின்றன என்பதற்கு ஒரு அடித்தளமாக அமையாது.


சமயம் என்றால் இது இது வெல்லாம் இருக்கும், அய்யாவழிக்கு இது இது வெல்லாம் இருக்கின்றது, ஆகவே இது ஒரு சமயம். ஆம். அய்யாவழி ஒரு சமயம். ஆனால் அதனால் என்ன? இங்கே சமயத்தினால் பயன் என்ன என்ற ஒரு பரந்த கேள்வியை முன்வைக்கின்றேன். பிற சமயங்களால் என்ன பயனோ அதே பயந்தான் என்று உங்கள் பதில் அமையலாம். இல்லாவிட்டால், புராணக்கதையை வைத்து ஒரு பயனை நீங்கள் தரலாம். எப்படி இருந்தாலும், அய்யாவழி காட்டும் வழி என்ன? புராணத்தில் அடைக்கலம் புகாமல் விளக்கமளித்தால் நன்று.


அய்யாவழி புராணத்தில் மூழ்ந்திருக்கு ஒரு சமயம் போல தெரிகின்றது. சமயத்தின் மீதும், புத்தத்கத்தின் மீதும், வைகுண்டர் மீதும் நம்பிக்கை அடிப்படையிலான ஒரு வழி போன்றே தெரிகின்றது. இது ஒரு குறுகிய அடிப்படை என்பது போல எனக்கு தென்படுகின்றது.


கிரேக்க புராணங்களில் உலகம் எப்படி தோன்றியது, அதன் முழுமுதற் கடவுள் யார் என்று கணக்கற்ற கதைகள் உண்டு, சடங்குகள் உண்டு. அதை நம்புவர்கள், பின்வற்றுவர்கள் இன்று மிக சிலரே. அதே போல இந்து சமயத்திலும் பல கதைகள் உண்டு. இந்து சமயத்தில் இருந்து சில இடங்களில் ஒத்து போவதாலும், சில இடங்களில் வேறுபடுவதாலும் அய்யாவழி உலகை பற்றிய ஒர் உண்மை எடுத்துரைக்கின்றது என்று சொல்ல முடியாது.

  • என்ன கோர முனைகின்றேன் என்றால், அய்யாவழியின் சிறப்பு என்ன? (இந்து சமயத்தோடு ஒப்பிடாமல், இன்னுமொரு சமயம் என்று சொல்லாமல்).
  • அவதாரம், பேய்கள், மந்திரம், வைகுண்டம் இவற்றுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு அய்யாவழி என்ன சொல்கின்றது?
  • நான் அய்யாவழியை பின்பற்றினால் எனக்கு என்ன கிடைக்கும்?
  • அய்யாவழியின் தத்துவ பின்புலம் என்ன?


சற்று நீண்டு விட்டது....சுருக்கமாக முடித்து விடுகின்றேன். நீங்கள் இளைஞர் என்பதை அறிவேன். அதற்காக உங்களின் வாதங்கள் குறிய பார்வையை கொண்டவை என்று சொல்ல நான் முனையவில்லை. ஆனால், சற்று பரந்த, பலக்கிய, வெளி சிந்தனையோட்டங்களையும் நீங்கள் நிச்சியம் இனி அறிய பல சந்தர்ப்பங்கள் இருக்கும். அவை அய்யாவழி நோக்கி புதிய பார்வைகளுக்கு இட்டு செல்லலாம்.


உங்களின் அதீத ஈடுபாடு, எனக்கு அய்யாவழி பற்றி மேலும் அறிய சற்று ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவே இக்குறிப்புகள். --Natkeeran 02:41, 6 ஏப்ரல் 2006 (UTC)[பதில் அளி]


விரிந்த பதில்களுக்கு நன்றி. உங்களின் வாசிப்பு பின்புலம் பரந்த அடிப்படையில் இருப்பதை உங்கள் எடுத்துக்காட்டுக்களில் இருந்து உணரக்கூடியதாக உள்ளது.


அறிவின் மார்க்கம் என்ன என்ற கேள்வியை கேட்கின்றீர்கள்? அறிவியலும் அடிப்படையில் ஒரு நம்பிக்கையில்தான் இயங்குகின்றது. அதாவது இவ்வுலகின் இயல்பில் மாற அம்சங்கள் சில உண்டு, அவற்றை எம்மால அறிய முடியும் என்பதுதான் அந்த அடிப்படை நம்பிக்கை.


நிஜம் எது என்ற கேள்வியையும் முன்வைக்கின்றீர்கள்? எம் புலன்களால் அறிய கூடிய நிஜத்துக்கும் உண்மையான நிஜத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று சுட்டுகின்றீர்கள். ஆம். ஆனால் நிஜம் இதுதான் என்ற ஒன்று உண்டா? எம்மால் இவ்வுலகை அறிய எம் புலன்களும், எம் மூளையும் தான் அடிப்படை.


மனிதன் மூளையால் சிந்த்திதால் விடை கிட்டாது என்று ஆதி மனிதன் குந்தியிருந்தால் இன்னும் அப்படியே இருந்திருப்போம். எம்மால் அறியப்படவேண்டிய பல அம்சங்கள் பல இருக்கின்றன.


புராணங்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. ஏன் என்றால் அவற்றின் பின்புலத்தில் வைத்து பார்த்தால் பல பயனுள்ள தகவல்களை பெறமுடியும் என்றும் நினைக்கின்றேன்.


ஆனால் நிச்சியமா அப்படியே எடுத்துக்கொள்வது சற்று குழந்தைதனமானது. சினிமா படத்திற்கும் நிஜ வாழ்விற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? இராமாயணம் ஒரு கதை.


டர்வினின் கொள்கையில் பல ஓட்டைகள் உண்டு, பல விஞ்ஞானிகள் அதை மறுத்து வருகின்றார்கள். எனினும் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு திறமான கோட்பாடு. ஆனால் அதைவைத்து இராவணன் இருந்தான் என்று வாதிடுவது சற்று பொருந்தாது. எதிர்காலத்தில், using genetic engineering and biotechnology, it might be possible to produce design beings in the future.


நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்? என்னத்தை வேண்டி? அறிவு இல்லாவிட்டால் எதை வைத்து முடிவு கட்டுவது?


சில நோய்களை பக்றீரியா போன்ற கிருமிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன என்று அறியப்படும் முன், அவை பேய்களால் தோற்றுவிக்கப்படுதாக பலர் நம்பினர். சந்திரனில் மனிதன் கால்வைக்க முன்பு, அதை நோக்கி பல புரணாக்கதைகள் இருந்தன. எனவே புரணா கதைகளை அப்படியே நம்புவது ஏற்றுக்கொள்வது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை?


இவ்வுலகில் அறிப்பட்டவை என்று சில இருக்கின்றன. அறிப்படாமல் இன்னும் அறிப்படவேண்டி பல இருக்கின்றன. இதுவே உலகு, இதுவே இன்றைய மனித நிலை. நாளைய மனிதன் இறப்பை மீறலாம் அல்லது பல நூற்றாண்டுகள் பின்போடலாம், அண்டதை ஆளலாம் அவற்றையெல்லாம் இன்றே நாம் தீர்மானிக்க முடியாது.


அய்யாவழி மீதானா அல்லது உங்களுடைய நம்பிக்கையின் மீதான தாக்குதலாக தயவு செய்து என் கருத்துக்களை எடுத்துகொள்ளாதீர்கள். வெறும் கருத்து பரிமாற்றம் என்றே எடுத்துகொள்ளுங்கள். --Natkeeran 00:56, 7 ஏப்ரல் 2006 (UTC)[பதில் அளி]எது உண்மை எது பொய் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றௌ தான் சொல்கிறேன்.

எது உண்மை, எது பொய் என்று இறுதியாக எல்லா விடயங்களை நோக்கியும் நாம் தீர்மானிக்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் உங்கள் இருப்பை, இக் கண இருப்பை நம்புகின்றீர்கள் தானே, அது உண்மை.

இந்து மதத்தின் மாயா வாதத்தை படிப்போருக்கு இது இன்னும் எளிதில் புரியும். மனம் (பெரும்பாலும் அறிவு) என்பது மயை. நாம் சிந்திப்பது புற உலகு என வைத்துக்கொள்வோம். புற உலகும் மாயையே.

மனம் (மூளை) மாயை என்பதை எப்படி அறிவது? இந்து மதம் சொல்கின்றது மனம் (மூளை) மாயை என்று, அதனால் மாயை. வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எம்மால் அறியப்பட்ட சில உலக இயல்புகள் உண்டு (உதாரணம்: புவி ஈர்ப்பு), அதே போல் எம்மால் அறியப்படாமல் பல அம்சங்கள் உண்டு. ஆனால், எல்லாம் மாயை என்பது அர்த்தமற்றது. அப்படியானால், அந்த மாயையும் மாயைதானே.

எனக்கு தெரியாது. அது தான் சரணாகதி.

உமது சிந்தனைகளில் எவையெல்லாம் உண்மை என்று வகை செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் உமக்கு சிந்தனை உண்டல்லவா. "நான் சிந்திக்கின்றேன், அதனால் நான்." என்பது டெஸ்கராஸ்சின் பிரபல வாக்கு. நான் இருக்கின்றேன், இதில் எந்த மாயையும் நான் காணவில்லை. என் இருப்பே முதன்மை, அதன் பின்னரே எல்லாம். எனக்கு தெரியும், நான் இருக்கின்றேன் என்று, அதனால்தான் "எனக்கு தெரியாது" அதுதான் சரணாகதி என்ற கோட்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அனைத்து வேற்றுமைக்கும் அப்பால் காணும் ஒரு ஒற்றுமையையே அய்யாவழி ஏகம் என்கிறது. அதையே முழுமுத்ற்பொருளாக காண்கிறது. அதை இறைவன் என்ற தனி பெயரிட்டு கூட அய்யாவழி அழைக்கவில்லை. நீங்கள் என்னிடம் "நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்?" என்று ஒரு கேல்வி எழுப்பி இருந்தீர்கள். அது இந்த "ஏகத்தை" தான், இந்த ஒருமையை, அடிப்படை ஒருமையை.

ஏகம் என்றும் ஒன்று என்றும் நீங்கள் குறிப்பிடும் எண்ணக்கருக்கும், டாஃவ் என்று டாஃவிசத்தில் குறிக்கும் ஒருவித பிரபஞ்ச இயல்புக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எப்படி மின்காந்த சத்தி இருக்கின்றதோ, எப்படி புவியீர்ப்பு சக்தி இருக்கின்றதோ அப்படி டாஃவ். அப்படி ஒன்றாகவே உங்களின் ஏகம் என்ற எண்ணக்கருவையும் பார்க்கின்றேன். அதன் இயல்போடு செல்வது எம் வாழ்க்கைக்கு உதவலாம். ஆனால், நான் என்ற ஒன்றும் உண்டு.

உலகை நான் அறிவேன் என்றால் அது உங்கள் மூளை எனப்படும் தனித்தன்மைக்கு உள்ளிருந்து எழுந்த ஒன்றாகும். உங்களை நீங்கள் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி உங்கள் தனித்தன்மையிலிருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும்.

(குறிப்பு: நான் உலகை அறிவேன் என்று குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். நாம், மனிதர்கள் என்ற ரீதியிலேயே குறிப்பிட்டேன்...)நான் என்ற ஒன்று உண்டு. நானும் இயற்கையே. இயற்கையின் ஒர் அம்சமே. அது தெளிவு. நான் என்ற நானுக்கும் இயற்கைக்கும் எங்கு எல்லைகள் என்பதில் எனக்கு அவ்வளவு தெளிவு இல்லை. ஆனால் அந்த நானுக்கு ஒரு உணர்வு உண்டு. அந்த உணர்வு இவ்வுலகில் தன்னால் சுதந்திரமாக சில முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புகின்றது. அப்படியான ஒரு நம்பிக்கையே என் வாழ்வுக்கு இருக்கும் அடிப்படை அர்த்தம். There exist a consciousness with some sort of free will, which is I. I might be an element of nature, but that does not destroy its existence.

அடுத்து புராணத்தை ஏன் கதை என்கிறீர்கள்? நம்பமுடியவில்லை என்பதர்க்காகவா? அப்படியென்றால், சிலவற்றை கூறுகிறேன்.

புராணத்தை கதைகள் என்றேன் ஏன் என்றால் அவை கதைகள் என்பதால். சினிமாக் கதையை கதை என்பேன் ஏன் என்றால் அது ஒரு கதை என்பதால். எவ்வளவு நிஜமாக சித்தரிக்கப்பட்ட சினிமாக் கதை என்றாலும் ஒரு கதையாசிரியரின் கற்பனையில் இருந்து உதித்தது என்றால் அது கதைதான்.

ஆனால் இது இவ்வறு இருக்க நான் இதை இப்படித்தன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இது இவ்வாறு இருக்கவே முடியாது, இவ்வறு சிந்திப்பது குழந்தைத்தனமானது என்று எவ்வாறு சொல்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது சரிதான். இராமாயணம் முற்றிலும் புராணக்கதை என்று சொல்ல என்னிடம் எந்த ஆதாரமும் தற்சமயம் இல்லை. ஆனால் அது கதையில்லை, அது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு என்ன ஆதாரங்கள் உண்டு? (இராமர் அணை, இலங்கை, அயோத்தி கோயில், குரங்குகள் என்று கூறிவிடாதீர்கள்...)

ஆனால் 35 வருடங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்தத்தை 10 வயது சிறுவன் அப்படியே சொல்கிறான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் பற்றிய உண்மை இச்சிறுவனது தந்தைக்கு கூட தெரியாது. ஏனென்றால் அவை அவரின் தந்தையின் காலகட்டத்தில் நடந்தசம்பவங்களாம். இதை நான் நேரடியாக கண்டேன். இதர்க்கு உளவியல் என்ன சொல்கிறது?

உளவியலில் பல அம்சங்களை neuroscience மூலம் ஒரு தளத்தில் விளக்க முடியும். ஆனால், எல்லாவற்றை பற்றியும் விளக்கங்கள் தற்சமயம் இல்லை. ஆராச்சியகள் நடைபெறுகின்றன. காலப்போக்கில் மேலும் விளக்கங்கள் கிடைக்கலாம். சிறுவன் எப்படி சொல்கிறான் என்பதற்கு விளக்கம் என்னிடம் இல்லை. சிலவேளை சிறுவன் எதோ ஒரு விதத்தில் அந்நிகழ்ச்சிகளை அறிந்திருக்க முடியும், அல்லது ஒருவித odd coincidence அல்லது probability. It maybe a fraud or maybe not be. உலகில் எல்லாவற்றுக்கும் விளக்கம் இன்று இருக்கு என்று கூறவில்லை, ஆனால் சிலவற்றுக்கு உண்டு. --Natkeeran 01:31, 8 ஏப்ரல் 2006 (UTC)[பதில் அளி]

உரையாடல் சற்று நீண்டு விட்டது. பல விடயங்களை பற்றி ஒரே தடவையில் உரையாடுவது சில குழப்பங்களுக்கு காரணமாயிருக்கலாம். மாயை விளக்க வேதியலை மற்றும் தர்க்கதை கையாண்டது எனக்கு முரன்பாடாக தெரிகின்றது.


இவ்வுலகில் மாற அம்சங்கள் சில உண்டு என்ற அடிப்படையில் நான் உங்களிடம் இருந்து வேறுபடுகின்றேன். எல்லாம் மாயை என்பதில் இருந்து நான் உங்களிடம் இருந்து வேறுபடுகின்றேன்.


நீங்கள் ஒருமையிடம் "சரணாகதி" என்றுவிட்டு உங்கள் நடத்தைகளின் விளைவுகளில் (behavioral responsibilities) இருந்து விலகிவிட பார்பாதாக தெரிகின்றது. உங்களிடம் இருக்கும் சுதந்திரத்தை (Free will), உணர்வை (consciousness) ஏன் மறுக்கின்றீர்கள் என்று புரியவில்லை. ஏகம் (collective or cosmic consciousness!) இருக்கலாம், அதன் இயல்போடு இயல்பதால் எம் வாழ்வு நன்மை பெறலாம்.


விஞ்ஞானத்தின் மீது இருக்கும் நம்பிக்கை ஒரு விதத்தில் புலன்களிலும் பகுத்தறிவிலும் தங்கியிருக்கின்றது. ஆனால் புராணம் மீது நம்பிக்கை வேறுபட்டது. தொல்பொருள் ஆராச்சி, வரலாற்றியல், போன்ற துறைகள் துணைகொண்டு புராணக்கதைகள் சம்பவங்களா என்று ஓரளவு நிரூபிக்கலாம்.


உங்கள் நம்பிக்கையை சீண்ட நான் முயலவில்லை. உங்களின் இவ் பரந்த ஆழுமை உங்களின் கட்டுரைகளில் முழுமையாக வெளிப்படவில்லை. குறிப்பாக, அய்யாவழியின் தத்துவ பின்புலம் நோக்கி விளக்கமான ஒரு கட்டுரை எழுதினால் நன்று. குறிப்பாக ஏகம், சரணாகதி, மாயை போன்ற எண்ணக்கருக்களை விளக்கி எழுதினால் நன்று. பொதுவாக, இந்துக்கள் தங்கள் தத்தவங்களையும் புராணங்களையும் பிரித்து ஆய்வது வழக்கம். பல இந்து தத்துவங்கள் புராண பின்புலம் இல்லாமல் தனித்து நிற்ககூடியவை.


தூய தமிழ் என்பதை விட பயன்பாட்டு தமிழே அவசியம். சமஸ்கிரத எழுத்துக்கள் சமஸ்கிரத சொற்களை எழுத, மற்றும் தமிழில் இல்லாத ஒலிகளை உள்வாங்க அவசியம். சமஸ்கிரதம் மீது நாம் இனி பயம் கொள்ள தேவையில்லை. அது ஒரு தனி விவாதம், பின்னர் செய்யலாம் :-) --Natkeeran 22:32, 11 ஏப்ரல் 2006 (UTC)[பதில் அளி]

பிற பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம்[தொகு]

சிறப்புக் கட்டுரையாக ஒரு கட்டுரை பட்டியலிடப்படமுன், அக்கட்டுரை த.வி. சிறப்புக்கட்டுரை நியமன வழிமுறையூடாக சிறப்புக்கட்டுரையாக நியமிக்கப்பட வேண்டும். அதுதான் வழமை. இக்கட்டுரையை முன்வைத்துள்ளேன், பிற பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம். --Natkeeran 05:50, 9 ஜூன் 2006 (UTC)

கடினமான சொற்கள், இருப்பினும் முயற்சிகின்றேன். --Natkeeran 18:06, 14 ஜூன் 2006 (UTC)

பகுதி பகுதியாக வாசித்து என்னால் முடிந்தளவு செய்கின்றேன். எனக்கும் இலக்கணத்தில் அவ்வளவு தேர்ச்சி இல்லை. பிற பயனர்களும் திருத்துவார்கள் என்று எதிர்பார்ப்போமாக. --Natkeeran 23:59, 14 ஜூன் 2006 (UTC)

நல்ல ஒரு வார்ப்புரு, கட்டுரை[தொகு]

பாராட்டுக்கள் நல்ல ஒரு வார்ப்புரு, இதை பிற மாவட்டங்களுக்கும் உபயோகிக்கலாம். நன்றி. கட்டுரையும் நீங்கள்தான் தனியே மொழி பெயர்த்துள்ளீர்கள், அதற்கும் சேர்த்துத்தான்.  :-)--Natkeeran 00:02, 15 ஜூன் 2006 (UTC)

கருத்து[தொகு]

வைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம். அய்யாவழிக் கட்டுரைகள் தவிர்த்து பிற தலைப்புகளிலும் நீங்கள் பங்களிக்கத் தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி. தற்பொழுது பங்களிப்பாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தில் இது போன்ற பரந்துபட்ட பல்துறைப் பங்களிப்புகள் விக்கிபீடியா வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று. கட்டுரைகளை முழு மூச்சாக தட்டச்சு செய்வது, உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று.--ரவி 08:38, 16 ஜூன் 2006 (UTC)

வலைவாசல் அமைத்தல்[தொகு]

உங்கள் நுட்பங்களை பகிர்ந்தால் நன்று. --Natkeeran 05:36, 28 ஜூன் 2006 (UTC)

எடுத்துக்காட்டுக்கள் ??[தொகு]

நீங்கள் அய்யாவழிக்கு ஏற்படித்தியிருக்கும் நுழைவாயில் (வலைவாசல்) முறையை விளக்கினால், அதிலிருந்து செம்மைப்படுத்தி கொள்ளலாம். நன்றி.

மிக்க நன்றி. --Natkeeran 22:54, 29 ஜூன் 2006 (UTC)

Wikipedia:கலைச்சொல் ஒத்தாசை[தொகு]

The words that you listed are challenging. I have some suggestions. It is difficult to get direct translations from the sources that are avilable to me. I'll let you know if I come across good words. Good luck. --Natkeeran 17:54, 30 ஜூன் 2006 (UTC)

அய்யாவழியின் சமூக பின்புலம்[தொகு]

அனைத்து கட்டுரைகளையும் விரிவாக படிக்கவில்லை, ஆனால் படித்தவற்றை வைத்து பார்க்கும் பொழுது அய்யாவழியின் சமூக பின்புலத்தை நீங்கள் நிச்சியம் ஒரு தனிக் கட்டுரையாக இணைக்கவேண்டும். சமூக பின்புலம் அச்சமயத்தை புரிந்து கொள்ள மிக அவசியம்.

நான் உங்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்விகள் ஆத்மீக அடிப்படையிலானது. ஆனால் சமயம் என்ற ஒன்று உண்டு. அது வாழ்க்கையில், சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அத்தாக்கங்கள் கொடியனவாக ஒரு சாரருக்கு அமையும் பொழுது அதற்கு மாற்றாக எழும் வழிமுறைகள் வேறொரு சமயமாக சில வேளைகளில் உருவாகின்றது. அந்தவிதத்தில் அச்சமயம் சமூக புலத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் முக்கியமானவை. அவை ஆத்மீக புலத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை விட நேரடியாக உடனடியாக பயனளிக்க கூடியவையாக இருக்கலாம்.

சிறுவயதில் சைவ சமயத்தை பாடமாகவும் (இலங்கையில் சமயம் ஒரு கட்டாய பாடம்), வாழ்வின் ஒரு அங்கமாகவும் கொண்டவன். அச்சமயத்தில் இருந்து நான் எடுத்துகொண்ட, எனக்கு புரிந்து ஒரே ஒரே ஒரு விடயம் அன்பு ஒன்று மட்டுந்தான். பின்னர் சைவ சமயத்தை அலசிய போது அதன் இந்து பின்புலத்தையும், குறிப்பாக நாவலர் அவர்களின் சாதி வலியுறுத்தல்களையும் அறிய முடிந்தது. அதன் பின்னர் எனது தேடல்கள் விரிந்து வேறு விதமாக சென்று விட்டன.

இந்து சமயத்தை சாதியின் காரணமாய் ஒதுக்கிவிடமுடியாது, அப்படி செய்வது எம்முன்னோர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கிவிடுவது போலாகும். 80% இந்துக்கள் கொண்டதே இந்தியா. அதன் அரசியலமைப்பு சட்டம் அம்போத்கர் போன்றோரால் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது. சிக்கல் அதை பின்பற்றுவதிலதான்.

இந்து சாதியமைப்பின் ஆழ்ந்த வேர்களை கல்வி - பொருளாதாரம் என்ற இரு வாள்களால் அறுக்கலாம். சாதியமைப்பு திருமணம் மூலமே தன்னை பிறப்பித்து கொள்கின்றது, எனவே திரைப்படங்கள் காண்பிக்கும் நடைமுறையில் அரிதான மார்கமான காதலே சாதியின் மற்றொரு எதிரி. இந்து சாதியமைப்பின் சமய கட்டமைப்பையும் உடைக்க வேண்டும், அதற்கு அய்யாவழி ஒரு உதாரணம்.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அதிகாரபடி நிலை தவிர்க்க முடியாததா? சாதி என்ற ஒரு இறுக்கமான கட்டமைப்புக்கு மாற்று என்ன? போன்ற மேல்தள கேள்விகளும் இங்கு முக்கியமானவை.

அய்யாவழியையும் அதனை தோற்றுவித்தவரை பற்றி அறிவதற்கு சாதி - சமூக பின்புலம் அவசியம். அய்யாவழியின் தாக்கம் சமூக புலத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கின்றது என்பதை நீங்கள் தந்த சுட்டிகள் மூலம் அறிய முடிகின்றது. ஆரம்பித்திலேயே சுட்டியது போன்று, ஒரு தனிக்கட்டுரையாக இவ்விபரங்களை ஒரு தனிக்கட்டுரையாக விரிவாக தந்தால் நன்று. (உடனடியாக அல்ல, நேரம் கிடைக்கும்பொழுது.) உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.

--Natkeeran 07:03, 14 ஜூலை 2006 (UTC)

நன்றி[தொகு]

பாராட்டுக்கு நன்றி. நீங்கள் கூறியது உண்மைத்தான். இயேசு,திரித்துவம் என்பன பற்றி எழுதவேண்டுந்தான். இவை மிக அதிகளவு வாசித்து கிறகித்து சரியான வசன பிரயோகத்துடன் எழுதவேண்டியவை நேரன் அதிகம் தேவை. இவற்றை இந்த கோடை விடுமுறையில் தான் செய்யவேண்டும். விவிலிய நபர்கள் பற்றியும் எழுதவேண்டும்... பார்ப்போம். இயேசு கூறியது போல அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு. --டெரன்ஸ் 08:17, 16 ஜூலை 2006 (UTC)

அய்யாவழி[தொகு]

சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டேன். மன்னிக்கவும். சொற்களை பயன்படுத்துங்கள், ஆனால் அவற்றை நோக்கி ஒரு குறிப்பு தந்தால் நன்று.

நீங்கள் சுட்டியவாறே, இரு அல்லது அதற்கு மேலான பார்வைகளையும், யார் யார் அவற்றை கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் கட்டுரையில் இணைக்கலாம். இதற்கு உங்களுக்கு உடன்பாடோ தெரியவில்லை. இயேசு கடவுள் என்று நம்புவர், இயேசு கடவுள் இல்லை என்று கருதுபவரை பார்த்து பயப்படுவதாகவோ அல்லது தனது நம்பிக்கையில் வலு இழப்பதகாவோ நான் கருதவில்லை; சில வேளைகளில் பரிதாபப்படலாம். அதேபோல் பல பார்வைகள் நம்பிக்கைகளை சிதைப்பதாக நான் கருதவில்லை.

இயேசுவையும் காந்தியையும் ஒரே தட்டில் எடைபோடுவது சரியா என்றால், பதில் கேள்வி கேட்கப்படுவரை பொறுத்தே அமையும். அதற்காக எல்லோருடைய பார்வையையும் கருத்தில் கொள்வது கடினம், முக்கியமான பார்வைகளை மட்டும் முன்வைத்தாலே நன்று.

அய்யாவழி தமிழர்களிடம் காணப்படும் பன்மிய சமய முறைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தர், சித்தர், இயேசு, என்று யார் வந்தாலும் அதை இந்துவாக்கி கொள்வது இந்துமதத்தின் சிறப்பா அல்லது இழிவா என்று தெரியவில்லை. ஒரு விதத்தில் விமர்சனத்தில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ஏற்படுத்தி கொண்ட ஒரு வழிமுறை போன்றே தெரிகின்றது. எனினும், இந்து மற்றைய சமயங்களிடம் அல்லது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலைத்து நிற்பதை சாதரணமாக எடுத்து கொள்ள கூடாது. --Natkeeran 12:47, 18 ஜூலை 2006 (UTC)


சமயம் தொடர்பான கட்டுரைகளை ஒரு கலைக்களஞ்சியத்தில் எப்படி எழுதுவது என்பது சிக்கலான ஒரு கேள்விதான். கனகு அவர்கள் எழுதிய சில கட்டுரைகள் "பக்தி இதழ் நடை" என்று ரவி விமர்சித்து இருந்தார். எல்லா விடயங்களையும் வெறும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்பது தவறு என்று சுந்தர் சுட்டியதும் நினைவில் வருகின்றது. இந்த இரு துருவங்களுக்கும் இடையேயான ஒரு அணுகுமுறை தேவை. நீங்கள் ஒரு மதிப்பீடு செய்து எழுதுங்கள்.


சமூக பின்புலத்தை பற்றி எழுதும் பொழுது, அப்போது இருந்த இந்து சாதி கட்டமைப்பு (மனு, வேதங்கள், அப்போதைய சமூக சூழல்) ஆகியவற்றை ஆய்ந்து, ஒரு புது அல்லது மாற்று வழிக்கான தேவை எப்படி உணரப்பட்டது, அது எப்படி எழுந்தது, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள், அது வெற்றியடைந்ததா போன்ற விடயங்களை ஆயலாம். இந்த தலைப்பில் எழுத நீங்களே நல்ல பொருத்தம்.


இந்து என்ற வார்த்தை இந்தியாவை குறிக்கின்றது, அதை ஒரு சமயமாக கருதுவது தவறு என்பது என் கருத்து. இந்து பின்புலத்தில் இருக்கும் பல அம்சங்கள் என் வாழ்க்கையில் பல வழக்கமாக இருக்கின்றது, அதற்காக நான் இந்துவா? தெரியவில்லை. வெளிநாடுகளின் அந்த அடையாளம் வகைப்படுத்தலில் பயன்படலாம், ஆனால் என்னைப்பொறுத்தவரை அது இந்தியா நோக்கிய ஒரு சுட்டி மட்டுமே. இந்திய பண்பாட்டுக்கு மிக வலுவான integrative தன்மை உண்டு. எவ்வளவுதான் சாதி கொடுமை இருந்தாலும், அடிப்படையில் ஒருவித fairness sense இந்திய பண்பாட்டில் உண்டு. இந்தியா மேற்குநாடுகளுக்கு முற்றிலும் மாற்றான அடிப்படைகளில் அமைந்த நாடு இல்லை, ஆனால் அது தகுந்த மாற்றுக்களை என்றும் தோற்றுவித்து தந்துள்ளது. அகிம்சை அல்லது வன்முறையற்ற போராட்ட வழிமுறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆகவே இந்திய பண்பாட்டில் universal தத்துவங்கள் பரவிகிடக்கின்றன, அதனால் "புத்தர், சித்தர், இயேசு என்று யார் வந்தாலும்" அந்த தத்துவங்களை உள்வாங்கிகொள்வதில் இந்திய (=இந்து) வெற்றியடைகின்றன எனலாம். --Natkeeran 15:12, 28 ஜூலை 2006 (UTC)


"Universal Acceptance ஐ ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளை இந்தியத் தத்துவம், Universal Acceptance என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதெனில், அவ்வாறான கருத்துக்களை கூறுபவரை அவரது கருத்துக்காக ஏற்றுக்கொள்ள முடியாது. எனில், யார் வந்தாலும் அவரை உடனே இந்து என்று சொல்ல முடியாதல்லவா?"

ஆமாம், நீங்கள் சொவது சரிதான். --Natkeeran 21:52, 28 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)[தொகு]

வைகுண்ட ராஜா,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:03, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

அய்யாவழி கட்டுரை[தொகு]

இங்கு ஒரு பதிவு செய்யாதபயனர் பல இடங்களில் உசாத்துணைகளை நீக்கியுள்ளார். அவற்றின் சரி பிழை எனக்க்கு தெரியாதப் படியால் அவைகளை மூன்னிலைப்படுத்த வில்லை. நீங்கள் கட்டுரை வரலாற்றை பார்த்து திருத்தவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:53, 22 ஆகஸ்ட் 2006 (UTC) அப்படியானால் சரி --டெரன்ஸ் \பேச்சு 06:23, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

Ayyavahzi request on hindi wiki[தொகு]

Sorry, I didn't know where to post this message so I put it here. I have tranlated the page. DaGizza 09:55, 31 ஆகஸ்ட் 2006 (UTC)FARC[தொகு]

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)[பதில் அளி]

அகிலத்திரட்டு அம்மானை[தொகு]

http://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88

--Natkeeran 17:27, 9 செப்டெம்பர் 2007 (UTC)

அகிலம் ஒன்றின் உட்தொடர்கள் இயன்குகின்றன! மற்றயவை சிகப்பாகத்தான் உள்ளன. மற்றயவையும் சேர்க்கப்பட்டனவா? --Natkeeran 21:06, 8 அக்டோபர் 2007 (UTC)[பதில் அளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:16, 21 சூலை 2011 (UTC)[பதில் அளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் வைகுண்ட ராஜா,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் வைகுண்ட ராஜா,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - சென்னை சந்திப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவிக்கலாம். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பக்கத்தில் இருக்கும் கலந்து கொள்வோர் / கலந்து கொள்வோர் (உறுதி இல்லை) பட்டியலில் தங்கள் விருப்பத்தினைப் பதிவு செய்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:06, 3 சூலை 2013 (UTC)[பதில் அளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:19, 18 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]