உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:பூமிநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், பூமிநாதன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

வாருங்கள் பூமிநாதன் ! நல்வரவு!--செல்வா 21:01, 20 ஜூன் 2008 (UTC)

நல்வரவு

[தொகு]

உங்களின் ஆய்வுகளின் தகவல்களை தமிழில் நேரடியாக பகிர்வது மிக்க மகிழ்சியாக இருக்கின்றது. இலங்கையில் தாய்மொழிக் கல்வி வந்த போது 1970 களில் இவ்வாறு பல்வேறு ஆய்வு முயற்சிகள் உயிரியல் துறையில் மேற்கொள்ளப்பட்டன என்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். குறிப்பாக தாம் வாழும் சுற்றுச்சூழலில் காணப்பட்ட தாவரங்கள், விலங்குகள், மற்றும் பிற உயிரினங்களைப் பற்றிய ஆய்வுகள். மேலும், பனையியல், தென்னை, நெல் வளர்ப்பு தொடர்பான பல நிறைய தகவல்கள் இலங்கையில் தமிழில் பெற முடியும். இப்போதைய நிலைமை பற்றி தெரியவில்லை.


நீங்கள் உங்கள் ஆய்வை ஆங்கிலத்தில் செய்தாலும், சூழல் சார்ந்த தகவல்கள் அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் பயன் மிக்கதாக இருக்கும். அந்த நோக்கில் இந்திய மொழிகளில் பகிர்வதும் முக்கியமாக அமையும். தமிழில் நீங்கள் பகிர்வது நல்ல எடுத்துக்காட்டாக அமையும். நன்றி. --Natkeeran 19:04, 21 ஜூன் 2008 (UTC)

இது எவ்வினம்?

[தொகு]

இந்த உரையாடலில் காட்டப்பட்டுள்ள மெல்லுடலியை உங்களால் அடையாளம் காண முடிந்தால் தகவலை பேச்சுப் பக்கத்தில் சேர்க்கவும். -- சுந்தர் \பேச்சு 18:14, 22 மார்ச் 2009 (UTC)

நீரின் மின் கடத்துதிறன்

[தொகு]

பூமிநாதன் நீங்கள் நீரின் மின் கடத்துதிறன் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை துவங்கலாமே! இது உங்களுக்கு மிகவும் பரிச்சயமான தலைப்பு என்பதில் பரிந்துரைக்கிறேன். உதவி ஏதேனும் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். நன்றி--கார்த்திக் 19:33, 23 மே 2009 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்‎

[தொகு]

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:06, 19 ஜூலை 2009 (UTC)

இணைப்பு உதவி

[தொகு]

இந்த இணைப்பு (http://www.marinemammals.in/) () நீங்கள் ஆக்கப்போகும் கடற்பாலூட்டிகள் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்கும் பூமி, வாழ்த்துக்கள்--கார்த்திக் 08:13, 27 ஜூலை 2009 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:24, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் பூமிநாதன்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பூமிநாதன்&oldid=837728" இலிருந்து மீள்விக்கப்பட்டது