பயனர் பேச்சு:ஜெயமோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், ஜெயமோகன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சோடாபாட்டில் 04:28, 9 நவம்பர் 2010 (UTC)

முகவரிகள்[தொகு]

நீங்கள் உருவாக்கிய/விரிவாக்கிய கட்டுரைகளிலிருந்து அஞ்சல் முகவரிகளை நீக்கியுள்ளேன். சம்பந்தப்பட்டவர்களின் பிரைவசி கருதி, பொதுவாக விக்கியில் முகவரிகளை இடுவதில்லை.--சோடாபாட்டில் 04:42, 9 நவம்பர் 2010 (UTC)

வழிமாற்றுகள்[தொகு]

ஒரே கட்டுரைக்கு பல தலைப்புகள் பொருந்தி வரும் போது, அனைத்து தலைப்புகளிலும் அக்கட்டுரையை உருவாக்கத் தேவையில்லை. ஒரு தலைப்பில் உருவாக்கி விட்டு மற்ற தலைப்புகளில் இருந்து பக்க வழிமாற்று கொடுக்கலாம். எ. கா

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற தலைப்பில் கட்டுரை உருவாக்கி விட்டு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற கட்டுரையிலும் முழு உள்ளடக்கங்களை இணைக்கத் தேவையில்லை. இது இரட்டிப்பு வேலை. மாறாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற தலைப்பில் #redirect[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] என்று சேர்த்து விடுங்கள். அங்கிருந்து தானாக முந்தைய பக்கத்துக்கு வழி மாறி விடும்.--சோடாபாட்டில் 05:12, 3 திசம்பர் 2010 (UTC)

மாற்றங்கள் செய்யப்பட்டன![தொகு]

உங்கள் கட்டுரையில் தேவையான மாற்றங்கள் செய்துள்ளேன். பார்க்கவும். மேலும் மாற்றம் தேவைப்படின் நீங்கள் செய்யவும் அல்லது பேச்சுப் பக்கத்தில் கூறவும். செய்கிறேன்.

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:11, 29 திசம்பர் 2010 (UTC)

என் கட்டுரைகளில் சில இணைப்புகள் இல்லை. உதாரணமாக சொல்புதிது பற்றி ஜெயமோகன் கட்டுரையில். யுவன் சந்திரசேகர் பற்றி...

கொற்றவை நாவல் பற்றியும் இணைப்பு இல்லை... எப்படி சேர்ப்பது?

சேர்க்கமுடியுமா?

ஜெ

இணைப்புகள் கொடுத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:25, 30 திசம்பர் 2010 (UTC)
  • எனக்கு முன்னர் கனக்சு செய்து விட்டார் ஜெயமோகன். :)

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 06:32, 30 திசம்பர் 2010 (UTC)

கொற்றவை மற்றும் இன்று உருவாக்கிய ஏனைய புத்தக கட்டுரைகளுக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:03, 30 திசம்பர் 2010 (UTC)

ஐயம்[தொகு]

நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் தானா அல்லது அவர் மீது உள்ள பிரியத்தில் அவரது பெயரை சூட்டிக் கொண்ட ரசிகரா. இது எனி தனிப்பட்ட ஐயமே. ஏனெனில் ஜெயமோகன் விக்கியில் பல கட்டுரைகள் பதிந்துள்ளார் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவர் அது ஜெயமோகன் தான் என்று உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டு விட்டார் :-). எனவெ உங்களை வினவுகிறேன்.--சோடாபாட்டில் 05:34, 30 திசம்பர் 2010 (UTC)

நன்றி அன்புள்ள சோடாபாட்டில்

ஜெயமோகனேதான். என் மின்னஞ்சலை பார்க்கலாமே. முன்பு பதிவுசெய்யாமல் இருந்தேன். ப்போது பதிவுசெய்து தகவல்களை அளிக்கிறேன். இலக்கியம் தொடர்பான தகவல்கள் இதில் இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்

தெளிவு படுத்தியமைக்கு நன்றி :-). பயனர்கள் பதிவு செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை பிற பயனர்கள் (நிர்வாகிகள் உட்பட) பார்க்க முடியாது என்பதால் என்னால் முன்னரே தெளிவு படுத்திக் கொள்ள முடியவில்லை. சொல் புதிது கட்டுரையில் உள் இணைப்புகளை கனக்ஸ் தந்துள்ளார். பிற கட்டுரைகளில் நான் செய்கிறேன்.--சோடாபாட்டில் 06:36, 30 திசம்பர் 2010 (UTC)


என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்து சிலவற்றை நான் வலையேற்றம் செய்கிறேன் -தகவல்கட்டுரைகளை. அவற்றுக்கு காப்புரிமை இல்லை. நீங்கள் செய்தாலும் சரி

ஜெ

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம் ஜெயமோகன். தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் பன்முகத்தை எடுத்துக்காட்டும் வகையில் முதற்பக்கத்தில் தொடர்ந்து அவர்களைப் பற்றிய குறிப்புகளை இட்டு வருகிறோம். உங்களின் விக்கி ஆர்வம் பற்றிய அறிமுகமும் இருந்தால் நன்றாக இருக்கும். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெயமோகன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 09:03, 30 திசம்பர் 2010 (UTC)

அன்பு ஜெ[தொகு]

தாங்கள் விக்கியில் பங்கேற்பது வியப்பாக இருக்கிறது. உங்கள் வலைப்பூவே ஒரு தகவல் களஞ்சியம்தான். அதில் எழுத தாங்கள் நேரம் ஒதுக்குவதே வியப்பு, இப்போது விக்கயிலும் பங்கேற்க முனைந்திருப்பது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.

உங்களுடைய கம்பனும் காமமும் இணையக்கட்டுரைகளின் இணைப்பினை பாலின்ப இலக்கியங்கள் பக்கத்தில் சேர்க்க விக்கியன்பர்களிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். தாங்களே இங்கு வந்து எழுவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

நன்றி.

அன்புடன்,

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தங்களின் சுய அறிமுகத்தினை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெயமோகன் பக்கத்தில் இணைத்துள்ளேன்.

உங்கள் விக்கி பயணம் வெற்றிகரமாக அமைந்து, அதன் மூலம் தமிழ் வளர வாழ்த்துகள்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு


சுய அறிமுகம். தமிழில் 1986 முதல் எழுதிவரும் எழுத்தாளர். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருது,பாவலர் விருது போன்றவை கிடைத்துள்ளன. 1962ல் குமரிமாவட்டத்தில் திருவரம்பு என்ற ஊரில் பிறந்தேன். www.jeyamohan.in என்ற இணையதளத்தில் தொடர்ந்து என் படைப்புகல் பிரசுரமாகின்றன.

கி. கண்ணன்[தொகு]

கி. கண்ணன்


Crystal Clear app help index.png

வணக்கம் ஜெயமோகன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!