உள்ளடக்கத்துக்குச் செல்

பயணிப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயணிப்புறா
ஒரு பெண் புறா 1896/98ல், சி.ஓ. விட்மனின் பறவைக் கூண்டில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஸ்வைன்சன், 1827
இனம்:
E. migratorius
இருசொற் பெயரீடு
Ectopistes migratorius
(லின்னேயசு, 1766)
பயணிப்புறா பரவல்:      இடம்பெயரும் இடங்கள்     வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்
  • Columba migratoria லின்னேயசு, 1766
  • Columba canadensis லின்னேயசு, 1766
  • Ectopistes migratoria ஸ்வைன்சன், 1827

பயணிப் புறா (ஆங்கிலப் பெயர்: Passenger pigeon, உயிரியல் பெயர்: Ectopistes migratorius) என்பது ஒரு அற்றுவிட்ட புறா இனம் ஆகும். இது வட அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு அகணிய உயிரி ஆகும். இதன் ஆங்கிலப் பெயர் பிரெஞ்சு வார்த்தையான பேசஜரில் இருந்து தோன்றியது. இதற்குக் "கடந்து செல்லும்" என்று பொருள். இதன் உயிரியல் பெயர் இதன் இடம்பெயரும் பண்பையும் குறிக்கிறது. இதன் வடிவம் ஆமைப் புறாவை ஒத்திருக்கும். ஆமைப்புறா இதன் நெருங்கிய உறவினர் என்று கருதப்பட்டது. சில சமயங்களில் இரண்டும் குழப்பிக்கொள்ளப்படும். ஆனால் மரபியல் ஆய்வானது படஜியோனஸசு என்கிற பேரினமே பயணிப்புறாவுடன் நெருங்கிய தொடர்புடையது, ஆமைப்புறாவின் பேரினமான ஜெனைடா அல்ல என்கிறது.

பயணிப்புறாவானது அளவு மற்றும் நிறத்தில் பால் ஈருருமை கொண்டது. ஆண் 390-410 மி.மீ. நீளம் இருக்கும். மேல்பகுதிகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். கீழ் பகுதிகள் வெளிர் நிறத்தில் இருக்கும். கழுத்துப்பகுதி இறகுகள் பட்டுப்போன்று ஒளிரும். இறக்கைகளில் கருப்புப் புள்ளிகள் இருக்கும். பெண் 380-400 மி.மீ. நீளம் இருக்கும். பொதுவாக ஆணைவிட மங்கிய மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். குஞ்சானது பெண் புறாவைப்போலவே இருக்கும், ஆனால் இறகுகளில் பட்டுப்போன்ற ஒளிரும் தன்மை இருக்காது. இது பொதுவாகக் கிழக்கு வட அமெரிக்காவின் இலையுதிர் காடுகளில் வாழ்ந்தது. பிற பகுதிகளிலும் இவை பதிசெய்யப்பட்டுள்ளன. எனினும் அமெரிக்கப் பேரேரிகளைச் சுற்றியே இவை வளர்ந்தன. இவை இடம்பெயரும்போது பெரிய கூட்டமாக இடம்பெயரும். தொடர்ந்து உணவு மற்றும் இருப்பிடத்தைத் தேடும். ஒருகாலத்தில் வட அமெரிக்கவில் அதிகம் காணப்பட்ட பறவையாக இது இருந்தது. இதன் உச்ச நிலையில் இதன் எண்ணிக்கை 300-500 கோடியாக இருந்தது. இது எப்போதுமே தொடர்ந்து அதிகப்படியாக இல்லை. இதன் எண்ணிக்கைக் காலப்போக்கில் குறைந்தது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது. இது கொட்டைகள், பழங்கள் மற்றும் முதுகெலும்பிலிகளை உணவாக உட்கொண்டது. இது கூட்டமாகத் தங்கும், குஞ்சுகளைப் பெற்றோர் மட்டுமின்றி மற்ற புறாக்களும் பேணும். இதன் அதிகப்படியான சமூக விலங்குத் தன்மை உணவு தேடுவதுடனும், கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிப்பதுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

பயணிப் புறாக்கள் தொல்குடி அமெரிக்கர்களால் வேட்டையாடப்பட்டன. ஆனால் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பிறகே வேட்டை தீவிரமாக நடைபெற்றது, முக்கியமாக 19ம் நூற்றாண்டில். இதன் இறைச்சி, விலை குறைந்ததாக இருந்ததால் வணிகமயமாக்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளுக்கு இவை பெரும் அளவில் வேட்டையாடப்பட்டன. இவற்றின் எண்ணிக்கைக் குறைவு மற்றும் அழிவிற்கு வேறு பல காரணங்களும் உண்டு. காடுகள் அழிப்பு இதன் வாழ்விடத்தை அழித்தது. 1800-1870ல் இவை மெதுவாக அழியத் தொடங்கின, 1870-1890ல் வேகமாக அழியத் தொடங்கின. கடைசிக் காட்டுப் பறவையானது 1901ல் சுடப்பட்டது. கடைசிக் கூண்டுப் பறவைகள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் சில பறவைகள் உயிருடன் இருக்கும்போது புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. மார்த்தா, என்ற புறாவே கடைசிப் பயணிப்புறாவாகக் கருதப்படுகிறது. இது சின்சினாட்டி மிருகக் காட்சிச் சாலையில் செப்டம்பர் 1, 1914ல் இறந்தது. மனித நடவடிக்கைகளால் உயிரினங்கள் அழிவதற்கு இதுவே ஒரு குறிப்பிடத்தகுந்த எடுத்துக்காட்டாகும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ectopistes migratorius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பன்னாட்டுத் தர தொடர் எண் 2307-8235. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. BirdLife International (2016). "Ectopistes migratorius". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22690733A93285636. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690733A93285636.en. http://www.iucnredlist.org/details/22690733/0. பார்த்த நாள்: 1 September 2017. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பயணிப்புறா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணிப்_புறா&oldid=4071861" இலிருந்து மீள்விக்கப்பட்டது