பன்னியூர் வராகமூர்த்தி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

பன்னியூர் வராகமூர்த்தி கோயில், இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பி வட்டத்தில், கும்பிடி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். இக்கோயில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் கோயில் என்று நம்பப்படுகிறது.

மூலவர்[தொகு]

இந்த கோயிலின் மூலவர் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராகம் ஆவார். அவர் பூமாதேவியுடன் இருக்கிறார். இக்கோயில் வைஷ்ணவ 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

புராணம்[தொகு]

இக்கோயில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளாக இந்த கோயில் கேரளாவின் முதன்மை கோயிலாக கருதப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

கி.மு. 800 முதல் (பிராமணர்கள் கேரளாவை ஆண்ட காலம்) கி.பி. 600 வரை தோராயமாக 1300 ஆண்டுகள், கிட்டத்தட்ட பெருமக்கள் ஆட்சியின் நிறைவுக்காலத்தில், கேரளாவின் புகழ்பெற்ற கிராமமான பன்னியூரில் வராஹ மூர்த்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. கேரளாவின் உயர்ந்த கடவுள். 1200 ஆண்டுகளுக்கு முன்பு 'பன்னியூராயிரம்' என்ற பெயரில் ஒரு அமைப்பினர் இருந்ததாக சமீபத்தில் பன்னியூரில் கண்டறியப்பட்டுள்ளது. பெயருக்கேற்றாற்போல 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பல்வேறு கலாச்சார, மத நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர். இந்தக் அன்றைய காலத்தில் இக்கோயில் அந்த அளவிற்கு பெற்றிருந்ததை அறியமுடிகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Varaha Temples in Kerala".

படத்தொகுப்பு[தொகு]