பன்னாட்டு கல்லூரி நிரலாக்கப் போட்டி

ஐசிபிசி என அழைக்கப்படும் சர்வதேச கல்லூரி நிரலாக்க போட்டி (ஆங்கில மொழி : International Collegiate Programming Contest ( ICPC ) ), உலக பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பல அடுக்குகள் கொண்ட வருடாந்திர நிரலாக்க போட்டியாகும். பேலர் பல்கலைக்கழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆறு கண்டங்களை உள்ளடக்கிய பிராந்திய போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிராந்திய வெற்றியாளர்கள் உலக இறுதிச் சுற்றில் கலந்து கொள்வார்கள். 2018 இல், 110 நாடுகளில் உள்ள 3,233 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 52,709 மாணவர்கள் கலந்து கொண்டனர். [1]
போட்டி விதிகள்
[தொகு]ஐசிபிசி போட்டிகள் அணி போட்டிகள் ஆகும் . ஒவ்வொரு அணியும் மூன்று மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தற்போதைய விதிகள் கூறுகின்றன. பங்கேற்பாளர்கள் பல்கலைக்கழக மாணவராக இருக்க வேண்டும், அவர்கள் போட்டிக்கு முன் ஐந்து வருடங்களுக்கும் குறைவான பல்கலைக்கழக கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். முன்னர் இரண்டு உலக இறுதிப் போட்டிகள் அல்லது ஐந்து பிராந்திய போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் மீண்டும் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆவர். [2] [3]
ஒவ்வொரு போட்டியின் போதும், எட்டு முதல் பதினைந்து நிரலாக்க சிக்கல்களைத்/குறியீட்டுக் கேள்விகளைத் தீர்க்க மூன்று பேர் கொண்ட குழுக்களுக்கு 5 மணிநேரம் வழங்கப்படுகிறது (பிராந்தியங்களுக்கு எட்டு சிக்கல்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கு பன்னிரண்டு). சி, சி ++, ஜாவா, அடா, [4] பைதான் [5] [6] அல்லது கோட்லின் [7] நிரல்களாக அவர்கள் தீர்வுகளை சமர்ப்பிக்க வேண்டும் (ஒவ்வொரு குறியீட்டுக் கேள்வியும் எந்தவொரு குறிப்பிட்ட மொழியிலும் தீர்க்கக்கூடியது என்று உத்தரவாதம் இல்லை என்றாலும், "பிராந்திய மற்றும் உலக இறுதி போட்டிகளுக்கான அனைத்து குறியீட்டுக் கேள்விகளையும் ஜாவா மற்றும் சி++ இல் போட்டி நீதிபதிகள் தீர்த்திருப்பார்கள்" என்று ஐசிபிசி வலைத்தளம் கூறுகிறது). சோதனைத் தரவில் நிரல்கள் இயக்கப்படும். ஒரு நிரல் சரியான பதிலைக் கொடுக்கத் தவறினால், அது குழுவிற்கு அறிவிக்கப்படும். அவர்கள் மற்றொரு நிரலை மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
மிகவும் அதிகமான நிரலாக்க சிக்கல்களை சரியாக தீர்க்கும் அணி வெற்றியாளர் அணி ஆகும் . ஒரே எண்ணிக்கையான நிரலாக்க சிக்கல்களை தீர்த்த இரண்டு அணிகளை தரவரிசைப்படுத்துவது அவசியமானால்(tie அனால்), அது நிரலாக்க சிக்கல்களை தீர்க்க எடுத்துக்கொண்ட நேரங்களின் கூட்டுத்தொகையால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான தீர்வை சமர்ப்பித்தற்கு முன்னால் தவறான சமர்ப்பிப்புகள் இருந்தால், ஒவ்வொரு நிராகரிக்கப்பட்ட சமர்ப்பிக்கப்பித்தலுக்கும், எடுத்துக்கொண்ட மொத்த நேரத்தில் 20 நிமிடங்கள் கூட்டப்படும். தீர்க்கப்படாத சிக்கலுக்கு நிராகரிக்கப்பட்ட சமர்ப்பிப்புகள் இருந்தால் நேரம் கூட்டப்படுவதில்லை. [8]
வெற்றியாளர்கள்
[தொகு]வெற்றி பெறுகிறது | நாடு | கல்வி நிறுவனங்கள் | மிக சமீபத்திய வெற்றி |
---|---|---|---|
7 | ![]() |
ஐடிஎம்ஓ பல்கலைக்கழகம் | 2017 |
4 | ![]() |
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகம் | 2016 |
3 | ![]() |
ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் | 2010 |
3 | ![]() |
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் | 1991 |
2 | ![]() |
மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம் | 2019 |
2 | ![]() |
வார்சா பல்கலைக்கழகம் | 2007 |
2 | ![]() |
வாட்டர்லூ பல்கலைக்கழகம் | 1999 |
2 | ![]() |
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி | 1988 |
2 | ![]() |
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் | 1980 |
1 | ![]() |
நிஸ்னி நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகம் | 2021 |
வெற்றிகள் | நாடு | மிக சமீபத்திய வெற்றி |
---|---|---|
17 | ![]() |
1997 |
15 | ![]() |
2020 |
4 | ![]() |
2011 |
2 | ![]() |
2007 |
2 | ![]() |
1999 |
1 | ![]() |
1998 |
1 | ![]() |
1995 |
1 | ![]() |
1992 |
1 | ![]() |
1990 |
புகழ்பெற்ற பங்கேற்பாளர்கள்
[தொகு]முன்னாள் ஐசிபிசி இறுதிப் போட்டியாளர்களில் சிலர் மென்பொருள் துறை மற்றும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளனர். ஆடம் டி ஏஞ்சலோ, முகநூல் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை தொழில்நுட்ப அலுவலர், கோரா நிறுவனர், நிகோலாய் துரோவ் , இணை நிறுவனர் டெலெக்ராம், மேடி ஜஹாரியா, அப்பாச்சி ஸ்பார்க்கை உருவாக்கியவர், டோனி சீஹ், சாப்போஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதலீட்டாளர் , கிரேக் சில்வர்ஸ்டீன், கூகுளின் முதல் ஊழியர்.
இதையும் பார்க்கவும்
[தொகு]- போட்டி நிரலாக்கல் , ஒரு வகையான மன விளையாட்டு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-03-25. Retrieved 2021-10-20.
- ↑ "Information - ICPC". Archived from the original on 16 June 2008. Retrieved 2008-06-10.
- ↑ "2008 ICPC Regionals Eligibility Decision Diagram" (PDF). Archived from the original (PDF) on 2005-11-18. Retrieved 2008-06-10.
- ↑ "2019 ICPC Greater New York Region: Rules".
- ↑ "Python at ICPC world finals 2017 - Codeforces". Codeforces. Retrieved 2016-07-01.
- ↑ team, ICPC. "ACM ICPC meets FAU". icpc.informatik.uni-erlangen.de. Archived from the original on 2016-09-14. Retrieved 2016-07-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-10. Retrieved 2021-10-20.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-04. Retrieved 2021-10-20.