பனேக்காவு பகவதி சாஸ்தா கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனேகாவு பகவதி சாஸ்தா கோயில் இந்தியாவில் கேரளா மாநிலத் எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூரில் உள்ளது.

வரலாறு[தொகு]

கோயில் அமைந்துள்ள இடத்தில் ஒரு குறிப்பிட்ட தனிநபரான சாக்யார் என்ற தனி நபரின் திறமையான நிர்வாகத்தின் அனைத்து சடங்குகளும் பூசைகளும் நடத்தப்பெறுவதால் அவ்விடம் புனிதமாக கருதப்படுகிறது. காலப்போக்கில், புனித நிலமானது குடும்ப உறுப்பினர்களால், தலைமுறை தலைமுறையாக கவனிக்கப்பட்டு வந்த இக்கோயில், இறுதியில் ஒரு தொழில் நிறுவனத்திற்கு விற்கப்படவேண்டியாயிற்று. இந்த புனித பூமியின் விதியானது தேவியானது நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நிலத்தை கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஸ்ரீ என்ற பக்தர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

கோபாலகிருஷ்ண வாரியர் என்ற புகழ்பெற்ற ஜோதிடரின் திறமையான வழிகாட்டுதலின்படி இங்கு வன துர்க்கை என அழைக்கப்படுகின்ற பகவதி, ஐயப்பன் எனப்படும் சாஸ்தா, பத்ர காளி, சர்ப்பதாரா மற்றும் ராக்ஷசசா ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டன. வாஸ்து சாஸ்திர முறையை மனதில் இருத்தி இக்கோயில் கட்டப்பட்டதாகும். அவ்விடத்தின் புனிதத்தை, முன்னோர் காத்ததுபோல சுனில்தத் காத்து வருகிறார்.

அமைப்பு[தொகு]

கோயிலின் பக்கவாட்டில் இயற்கையாக ஓடும் நீரோடை உள்ளது. இது அதன் அழகை அதிகரிக்கிறது. பச்சை நிற நீரோடை அந்த ஓடையானது சபரிமலையில் உள்ள பம்பா நதியை ஒத்திருப்பதால் அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்து. அய்யப்பனின் அருளால் ஆண்டு முழுவதும் அந்த ஓடை ஓடிக்கொண் இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]