பத்மன்
Jump to navigation
Jump to search
இந்து தொன்மவியலின் அடிப்படையில் பத்மன் என்பவர் நாக லோகத்தின் அரசராவார். காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன். இவர் பதுமன் என்றும் அறியப்படுகிறார். இவர் திருமாலிடம் இருந்த பற்றுதல் காணமாக அவரையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார்.
சங்கன் என்ற சிவபெருமானை வழிபடும் நாக லோக அரசனுக்கும் இவருக்கும் சிவபெருமான் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டினை அறிந்த பார்வதி தேவி சிவனும், விஷ்ணுவும் இணைந்து காட்சிதரும்படி வேண்டினார். அதனால் சிவபெருமான் சங்க லிங்கமாக காட்சி தந்ததாக சங்கரன்கோவில் தலபுராணம் கூறுகிறது.