சங்கன்
Appearance
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சங்கன் என்பவர் நாகலோகத்தின் அரசராவார். காசியபர்-கத்ரு தம்பதியரின் மகன்.[1] இவர் சிவனிடம் இருந்த பற்றுதல் காரணமாக சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார்.
இவருக்கும், பத்மன் என்ற விஷ்ணுவினை வழிபடும் நாகலோக அரசனுக்குமிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியினை அறிந்த பார்வதிதேவி சிவனும், விஷ்ணுவும் இணைந்து காட்சிதரும்படி வேண்டினார். அதனால் சிவனும் திருமாலும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்ததாக சங்கரன்கோவில் தலபுராணம் கூறுகிறது.