பணக்கட்டோடில் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனக்கட்டோடில் தேவி கோயில் இந்தியாவில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா தெக்கும்பாகோம் கிராமத்தில் உள்ள ஒரு இந்து கோவில் . [1] இக்கோயிலின் மூலவர் துர்க்கை ஆவார். [2] கேரள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. [3]


மேட பரணியில் நடைபெறும் தாலப்பொலியும், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் திருவிழாவும் இங்கு புகழ் பெற்றதாகும். [4]

வரலாறு[தொகு]

இக்கோயில் தென் கேரளாவில்சாவர தெக்கும்பாகோம் என்னுமிடத்தில் உள்ள உள்ள ஒரு பழமையான, பிரபலமான இந்துக்கோயில் ஆகும். இக்கோயில் உருவானதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இது 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. [5] ஒருமுறை பிராமண இளைஞன் இங்கு வந்தபோது, கோயிப்புறத்து நம்பீசன் ஆசாரி என்ற கைதேர்ந்த தச்சரைச் சந்தித்தான். அவர்கள் அங்கு ஒரு கோயில் கட்ட திட்டமிட்டனர். ஆசாரி கோவிலுக்கான அமைப்பை உருவாக்க, அந்த பிராமண இளைஞன் இந்த கோயிலுக்கு பத்ரகாளி'யை வரவழைத்தான். தொடர்ந்துபல்வேறு பகுதிகள் கட்டப்பட்டு, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர ஆரம்பித்தனர். இக்கோயிலானது வலையப்பள்ளி குடும்ப சொத்தில் கட்டப்பட்டதாகும். 'மஞ்சிப்புழ தம்புரான்' மேற்பார்வையில் கோயில் கட்டப்பட்டதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. 1946 மலையாள சகாப்தம் அல்லது கொல்லம் ஆண்டு 1121இல் திருவிதாங்கூர் அரசால் இக்கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் புவியியல் ஒருங்கிணைப்பில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் ஆகும். அருகிலுள்ள புகைவண்டி நிலையம் கொல்லம் ரயில்வே ஸ்டேசன் (18 கி.மீ.) ஆகும். சாலை வழியாக எளிதில் இவ்விடத்தை அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Panakkattodil Devi Temple - Info, Timings, Photos, History" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
  2. "Panakkattodil Devi Temple (Kollam) Essential Tips and Information" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
  3. "About: Panakkattodil Devi Temple". பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
  4. Panakkattodil Devi Temple Blog, Published 2011-05-11.
  5. "Panakkattodil Devi Temple ,thekkumbhagam" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.

வெளி இணைப்புகள்[தொகு]