ஆள்கூற்று முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று முறைமை அல்லது ஆயஅச்சமைப்பு என்பது பகுமுறை வடிவவியலில் வரதராஜ்

பொருளடக்கம்

ஓர்ftruy முறைமையாகும். இம்முறைமையில் யூக்ளிடியன் வடிவவியல் போன்ற பன்மடிவெளியில் அமைந்துள்ள புள்ளி மற்றும் பிற வடிவவியல் பொருள்களின் நிலைகள், ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட எண்கள் அல்லது ஆள்கூறுகளைக் கொண்டு குறிக்கப்படுகின்றன.[1][2] இவ்வாறு கணிக்கப்படும் ஆள்கூறுகளின் வரிசை மிகவும் முக்கியமானது. சில சமயங்களில் வரிசைப்படுத்தப்பட்ட ஆள்கூறுகள் ஒவ்வொன்றும் அவை ஏற்கும் இடங்களாலும், சில சமயங்களில் x - ஆள்கூறு , y - ஆள்கூறு என்பது போல எழுத்துக்களாலும் குறிக்கப்படுகின்றன. ஆள்கூறுகள் அடிப்படைக் கணிதத்தில் மெய்யெண்ணாக அமைகின்றன. ஆள்கூறுகள் சிக்கலெண்ணாகவும் அமையலாம். ஆள்கூற்று முறைமையில் கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை மற்றும் வாள்முனை ஆள்கூற்று முறைமை என்ற இருவகைகளும் அதிகமான பயன்பாட்டில் உள்ளன.[தொகு]

புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளான நிலநிரைக்கோடு, மற்றும் நிலநேர்க்கோடு இரண்டும் ஆள்கூற்று முறைமைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

எண் கோடு[தொகு]

ஆள்கூற்று முறைமையின் ஒரு எளிய எடுத்துக்காட்டு எண் கோடாகும். எண் கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு மெய்யெண்ணால் குறிக்கப்படுகிறது.

இம்முறைமையில் மாறத்தக்க ஏதாவதொரு புள்ளி O (ஆதி) தரப்பட்டக்கோட்டின் மீது தேர்ந்தெடுக்கப்படுகிறது. கோட்டின் மீதுள்ள வேறொரு புள்ளி P -ன் ஆள்கூறானது புள்ளிகள் O மற்றும் P இரண்டிற்கும் இடையிலுள்ள திசையிடப்பட்ட தூரத்தால் வரையறுக்கப்படுகிறது. திசையிடப்பட்ட தூரம் என்பது அப்புள்ளி ஆதிக்கு எந்தப்பக்கம் அமைகிறது என்பதைப் பொறுத்தது. இடப்புறம் அமைந்தால் தூரம் எதிர்க்குறியுடனும் வலப்பக்கம் அமைந்தால் நேர்க்குறியுடனும் தரப்படுகிறது. எண் கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு தனித்த மெய்யெண் ஆள்கூறு உண்டு. அதேபோல ஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் அதனை ஆள்கூறாகக் கொண்ட ஒரு தனித்த புள்ளி எண் கோட்டின் மீது உண்டு.[3]

எண் கோடு

காட்டீசியன் ஆள்கூற்று முறைமை[தொகு]

இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை.

வாள்முனை ஆள்கூற்று முறைமை[தொகு]

முதன்மைக் கட்டுரை: வாள்முனை ஆள்கூற்று முறைமை

வாள்முனை ஆள்கூற்று முறைமை அல்லது வாள்முனை ஆயம் அல்லது ஒப்புச்சட்ட முறைமை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]


மூல நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்கூற்று_முறைமை&oldid=2385367" இருந்து மீள்விக்கப்பட்டது