பட்டு சாலியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கருநாடகம், மகாராட்டிரம், குஜராத் | |
மொழி(கள்) | |
தமிழ், தெலுங்கு, கன்னடம், சௌராட்டிர மொழி | |
சமயங்கள் | |
இந்து செம்பெருந்தாயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர், சௌராட்டிரர், தெலுங்கர் |
பட்டு சாலியர் (Pattusali) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஒரு இந்து சமூகத்தினர் ஆவர்.
இவர்கள் பூணூலை அணிந்துகொள்கிறார்கள்.[1] இந்து மதத்தைப் பின்பற்றும் இந்த சமூகத்தில் வைணவர்கள் அதிக அளவிலும், சைவர்கள் கணிசமான அளவிலும் உள்ளனர்.[2]
இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3]
தோற்றம் மற்றும் சொற்பிறப்பு
[தொகு]இந்த மக்கள் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவில் இருந்து மற்ற பகுதிகளில் குடியேறியுள்ளனர்.[4] தமிழில் பட்டு என்று அழைக்கப்படும் பட்டுத் துணியால் கடவுள்களை அலங்கரிக்கவும், வணங்கவும் பயன்படுத்தப்படும் பட்டு நெசவு செய்வதில் கைதேர்ந்தவர்கள். எனவே தெலுங்கில் பட்டுசாலி மற்றும் தமிழில் பட்டுநூல்காரர் என்ற பெயராலும், பொதுவாக சௌராட்டிர மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.[5][6]
வாழும் பகுதிகள்
[தொகு]இந்த மக்கள் பெரும்பாலும் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் குறிப்பாக அனந்தபூர், கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் மற்றும் விசயநகரம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறார்கள்.[2][7]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ General, India Office of the Registrar (1961). Census of India, 1961, Volume 2, Part 6, Issue 31 (in ஆங்கிலம்). Manager of Publications. p. 13.
- ↑ 2.0 2.1 P, Swarnalatha. The World of the Wever in Northern Coromandel, C.1750-C.1850 (2005 ed.). Hyderabad: Orient Longman Private Limited. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125028680. பார்க்கப்பட்ட நாள் 15 February 2013.
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ S, Karger (1978). Human Heredity (in ஆங்கிலம்). Karger. p. 227.
- ↑ People of India: A - G.- Volume 4 (in ஆங்கிலம்). Oxford Univ. Press. 1998. p. 3189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195633542.
- ↑ "Pattusali Community". www.pattusaali.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
- ↑ Francis, W. (1992). Vizagapatam District Gazetteer (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120608115.